Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்

இன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யெனில் சொந்த வீட்டில் சோ கமாக வசிக்கவேண்டிய கட் டாயம் ஏற்படும். வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய
10 முக்கிய அம்சம் .
 
1. மார்ஜின் மணி! 
 
தனி வீடோ அல்லது அடுக் குமாடிக் குடியிருப்போ, எ தை வாங்குவதாக இருந் தாலும் மொத்த தொகைக் கும் கடன் தர மாட்டார்கள். சுமார் 20% தொகையை வீ டு வாங்குபவர் தன் கையி ல் இருந்துதான் போடவே ண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக்கடனுக்கான இ எம்ஐ, பெர்சனல் லோன் இ எம் ஐ என அதிகத் தொகை சம்ப ளத்தி லிருந்து போகும். அந்த வகையி ல் பணச் சிக்கலில் மாட்டிக்கொ ள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
 
இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற் பாடு செய்துகொள்ள வேண்டும் அல்ல து கடன் தொகையை க் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். ம னை வாங்கி வீடு கட்டினால் இப் போது சிறியவீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்தவீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீ ட்டுக்கடன் மாத தவணைகை க்குக் கிடைக்கும் சம்பளத்தி ல் 40% – 45%தைத் தாண்டாத வாறு இருத்தல் அவசியம்.
 
2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு! 
 
இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதி ய தலைமுறை தனியா ர் வங்கிகள், தனியார் வீ ட்டு வசதி நிறுவனங்க ள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எ னப் பல வங்கிகள் வீட்டு க் கடன்வழங்குகிறது .  
 
அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்க ளைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றா ல் உங்களின் வீடுதேடி வந் து கடனுக்கான எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொ டுத்து விடுவார்கள். பொது வாக, தனியார் வங்கிக ள் / தனியார் வீட்டு வசதி நிறு வனங்களை விடப் பொதுத் துறை வங்கிகள் / பொதுத் துறை வீட்டுவசதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.
 
வீட்டுக் கடன் என்பது ஒரு மு றை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திரு க்கும் இடத்துக்கான தொ லைவை பார்க்க வேண்டிய தில்லை. வங்கி சேமிப்புக் க ணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவ லகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட் ட காசோலைக ளைத் தருவதன்மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வச தி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூ ரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங் கலாம்.
 
3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்! 
 
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளை யா அல்லது அதன் மத்திய ப ரிசீலனை மையமா (சென்ட்ர லைஸ்டு பிராசஸிங் சென்ட ர்) என்பதைக் கவனிப்பது முக் கியம். கிளை அலுவலகமே க டன் வழ ங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்து விடும். வங் கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவ ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக் கூட்டத் தில் உங்களுக் குக் கடன் கிடை க்க அதிக நாள் ஆகக்கூடும். எ ன வே, வங்கிக் கிளைகளே கட னுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங் குவது நல்லது.
 
4. கட்டணங்கள் முக்கியம் ! 
 
வீட்டுக்கடன் வாங்கும் போ து பரிசீலனைக் கட்டணம், ஆவ ணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறு வனங்கள் குறிப்பிட்ட சத விகிதக் கட்டணத்தை வசூ லிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீ னியன் எனத் தனியாகக் கட் டணம் வாங்கும் வங்கிகளு ம் இருக்கின்றன. சில வங்கி களில், முதலில் வாங்கப்படு ம் பரிசீலனைக் கட்டணத்தி லே இந்த வேலையும் அடங் கி விடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக் கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம்.
 
5. கான்ட்ராக்டரின் தரம்! 
 
நீங்கள் வீடு வாங்கப்போகும் புர மோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரி ன் தரம் மற்றும் நம்பகத்தன்மை யை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய் ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப் போகும் புரமோட்டர் அல் லது உங்களுக்கு வீடு கட்டித் தரப் போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.
 
6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வே ண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலை யை புரமோட் டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வ ங்கி அல்லது வீட்டுவசதி நிறுவ னம் தரும்போது உங்களு க்குத் தகவல் தெரிவித்து விட்டுதான் தர வேண்டும் என்பதை ஆரம்பத்தி லே தெரிவித்து விட வேண்டும். இல்லையெனில் பில்டரோ/ கான்ட்ராக்டரோ வீட்டு வேலை யைச் சரிவர முடிக்காமல் உங் களுக்குத் தெரியாமலேயே ப ணத்தை வாங்கிச் சென்று விடு வார். எனவே, ஜாக்கிரதை!
 
7. வட்டி விகிதம்! 
 
வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம்  இருக்கின்றது. நிலை யான வட்டி என்பது முதலில் வரும் 3 – 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப் போதுள்ள நிலையான வட்டி அ ல்லது ஃப்ளோட்டிங் வட்டியை த் தேர்வு செய்துகொள்ளலாம்.
 
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகி த மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும்.  நிலையான மற்றும் மாறுப டும் வட்டி விகிதத்துக்கு இடையே சு மார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற் போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லா பகரமாக இருக்கும். பொதுவாக, கடனு க்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நி லை நிலவினால், ஃப்ளோ ட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
 
மேலும், நீங்கள் மு ன்னணி நிறுவனத் தில் வேலை பார்ப்ப வராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியி ல் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அ தே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்ப தையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒ ருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டு முறை இ ருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடு ம் முறையில் வட்டிக்குச் செல் லும் தொகை குறைவாக இருக் கும். அந்த வகையில் எந்த வங் கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.
 
8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்! 
 
வாங்கிய கடனை குறைந்த ஆண்டுகளில் 5-10 ஆண்டுக ளில் கட்டினால், மாத தவ ணை அதிகமாக இருக்கும். இ துவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மா த தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச்செல்லும் தொ கை குறைவாக இருக்கு ம். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிக மாக இருக்கும். இவற் றை அலசி ஆராய் ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக்கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம் பளம் உயர்ந்தபிறகு அதிகத்   தொகையைக் கட்டுவதன் மூல ம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.
 
9.கடன்தொகை வழங்கும் நிலை..
 வீடு கட்டுவது என்றால் அஸ் திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட் டைக் கட்ட கடன் தொகையை   வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இது போன் ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்க ள் வந்து பார்த்து சர்ட்டிஃ பிகேட் தந்தால் தான் அடுத் தநிலைக் கடனைத் தருவா ர்கள். அப்போது காலதா மதம் ஏற்படக்கூடும். இது போன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவு படுத் திக்கொள்வது நல்லது.
 
10. மாரடோரியம் பீரியடு! 
 
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டு வது எனில் கட்டுமானம் முடி ய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரி வாகப் பிரித்து வழ ங்கப்பட்டிரு க்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக் கும். இதனை ‘ப்ரீ இஎம்ஐ’ என் பார்கள். இந்த வட்டியை மாதா மாதம் கட்டி வருவது நல்லது. இல் லையெனில் இந்த வட் டியையும் வீட்டுக் கடனாக மாற்றி விடுவார்கள். நீங்க ள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்”.
 
– பஞ்சாப் நேஷனல் வங்கி யின் முன்னாள் உதவிப் பொது மேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர் .கணேசன்.

One Comment

Leave a Reply to mohan Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: