Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அழகுகலை நிபுணர் கூறும் வழிகள்

முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத்தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஒரு வரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும் போது வணக்கம் செய்கிறோ ம். நம் உணர்வுகளை, அன் பை வெளிப்படுத்த உதவும் முக்கியமான பணியை கை கள் செய்கின்றன. அதிக அள வில் வெயில், தூசால் பாதி க்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக் கியமா க வைத்தி ருப்பதில், நாம் அதிகம் அக்கறை எடுத் துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை” என்கிற அழகுக்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச்

சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வழி சொல்கிறார்.

”ஒருவரின் சுத்தத்தை சட்டெனப் பறைசாற்றுவது கைகள்தான். நம் பாரம்பரிய வழக்கமான மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மறைந்துவிட் ட நிலையில், பெண்களின் கைக ளில் ரோமம் வளர்ந்து விடுகிறது. இதுவே அழகைக் குறைக்கலாம். உடலில் தேவைய ற்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்க, சிற ந்த வழி ‘வாக்ஸிங்’ முறை மட்டு மே. இது முடியை வேரிலிருந்து அகற்றிவிடும். அடுத்து, சீக்கிரம் வளராமல் தடுக்கும். மூன்று அல்ல து நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். முக்கியமாக, 16 வயதுக்கு மேல்தா ன் வாக்ஸிங் செய்துகொள்ள வேண் டும்.

அக்குள்

அதிகம் வியர்க்கக்கூடிய மிகவும் மென்மையான பகுதி. இதனால், விய ர்வையுடன் தூசி, அழுக்கு சேர்ந்து பூஞ்சை தொற்று ஏற்பட லாம். என வே, இந்த முடியை அகற்றிவிடுவது நல்லது. இந்த முடியை அகற்ற ஷே வ் செய்வது சரியல்ல. அந்த இடம் கறுப்பாகி அலர்ஜியை ஏற்படுத்திவி டும். க்ரீம்களைத் தடவி முடியை அகற்றுவதும் நிரந்தரத் தீர்வல் ல. அக்குள் முடியை வாக்ஸிங் செய்து கவனத்துடன் அகற்றலாம். அக்குள் பகுதியில் படிந்திருக் கும் கறுமையைப் போக்க, எலுமிச்சைப் பழச் சாற்றில் பால் கலந்து அந்தப்பகுதிகளி ல் தடவி, சிறிது நேரம் ஊறிய பின் கழுவினால், நல்ல ப லன் கிடைக்கும்.

கை

கை முட்டி பகுதி டேபிளில் அழுத்தப்படும்போது, மிகவும் கறுத்து சொரசொரப்பாகி விடு கிறது. சர்க்கரையை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண் ணெயுடன் கலந்து, தினமும் கை முட்டிகளில் மென்மையாகத் தே ய்க்க வேண்டும். எண்ணெய்க்குப் பதிலாக எலுமிச்சைப் பழத்தையு ம் பயன்படுத்தலாம். இதனால், மு ட்டிப் பகுதியில் கறுமை மறையும். நீண்ட நேரம் ஏ.சி அறையில் இருந் தாலும், கைகளில் ஈரப்பதம் குறைந்து தோல் வறண்டு போக லாம். இதைச் சரிசெய்ய, குளித்த வுடன் மாய்ஸ்ச்சரைஸரைப் பயன் படுத்துவது நல்லது. வீட்டு வே லைகள் செய்யும்போது கைகளில் உறை அணிந்துகொள்ளலாம். இது தூசி, நோய்த்தொற்று, வியர்வை, டிடர்ஜென்ட் பாதிப்பு போன் றவை நேரடியாகத் தாக் குவதைத் தவிர்க்கும்.

நகங்கள்

பெரும்பாலும் நாம் கை களால்தான் உணவு அ ருந்துகிறோம். நகங்க ளில் அழுக்கு இருந்தா ல், சாப்பாட்டுடன் அழுக் கும் சேர்ந்து கிருமித் தொற்று ஏற்பட்டு, நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கமும் இருக் கும். எனவே, பெரிய நகங் களைவளர்த்தாலும்,அதை அடிக்கடி கழுவி, நக இடுக் குக ளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். வீட்டு வேலை கள் செய்யும்போதும் பாத் திரம் தேய்க்கும் போதும் அல்லது துணி துவைக்கும்போதும் நகங்கள் தேய்ந்து உடைந்து போகலாம். இதைச் சரிசெய்ய, நகங்களைச் சுத்தமாகக் கழுவி அதைப் பாதுகாக்க ‘பாடி லோஷன்’ தடவலாம்.

ஜெ.வேங்கடராஜ், பா. சரவணகுமார்

Leave a Reply

%d bloggers like this: