Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்ரம், தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வாரா? தவம் கிடக்கும் நடிகை திரிஷா!

விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதை யடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அத ன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரி ஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. அதனால் சிலகாலம் விக்ர மை கண்டு கொள்ளாமல் இருந்த த்ரி ஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்.

காரணம், ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம், அடுத்தடுத்து 4 படங் களில நடிக்க கதை கேட்டுள்ளார். இதில் ஏற்கனவே விக்ரமை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய

தரணி இயக்கத்திலும் ராஸ்கல் என்ற படத்தில் நடிக்கிறார். தரணி இயக்கத்தில் ஏற் கனவே கில்லியில் நடித்தவர் த்ரிஷா என்பதால், அந்த நட்பை வைத்து விக்ரம், தரணி இணையும் படத்தில் தன்னையும் இணை த்துக்கொள்ள திரைக்குப் பின்னா ல் தீவிரம் காட்டி வருகிறார்.

அது மட்டுமின்றி, தேவதையைக்கண்டேன் , மலைக்கோட்டை, பட்டத்து யானை உள் பட சில படங்களை இயக்கிய பூபதி பாண்டி யனும் தற்போது விக்ரமிற்கு ராஜா வேஷம் என்ற பெயரில் ஒரு கதை சொல்லியி ருக்கிறார். முன்பே இந்த கதையை கேட்டு விட்ட விக்ரம், பல மாதங்களாக மனதுக் குள் கதையை ஓட்டிக்கொண்டி ருந்தவர் இப்போது ரீலை ஓட்டலாம் என்று பூப திக்கு க்ரீன் சிக் னல் கொடுத்திருக்கிறாராம்.

இப்படி அவர் திடுதிப்பென்று அழைப்பு விடுத்திருப்பதால், அவசரத்துக்கு முன் னணி கதாநாயகிகளின் கால்சீட் கிடை க்காமல் அலைந்து கொண்டிருக்கிறார் பூபதி. இதை கேள்விப்பட்ட த்ரிஷா, வழக்கம்போல் விக்ரமிற்கு கல்லெறிய த் தொடங்கியிருக்கிறார். ஆனால், அனு ஷ்கா, அமலாபால், ஹன்சிகா போன்ற நடிகைகளை தனது பட்டியலில் வைத் திருக்கும் விக்ரம், த்ரிஷாவை மீ ண்டும் பட்டியலில் சேர்ப்பாரா என்பதை பொறு த்திருந்துதான் பார் க்க வேண்டும்.

படித்தது

Leave a Reply

%d bloggers like this: