Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (30/03/14): செக்சில் ஈடுபட்டால் தானே, குழந்தைக்கு தாயாக முடியும்?

அன்புள்ள அம்மாவுக்கு– 

என் வயது, 25; திருமணம் ஆகி, ஒரு வருடம் ஆகிறது. எனக்கு பாவ ஜாதகம் என் பதால், வரன் அமையவில் லை. எனவே, எங்கள் வீட்டி ல் பொய்யான ஜாதகம் தயா ரித்து, எனக்கு சற்றும் பொ ருத்தமில்லாத குண்டாக, தொப்பையுடன் காணப்படு ம் ஒருவரை, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இத னால், என் வாழ்க்கையே

நரகமாகி விட்டது.

உடம்பை குறைக்கச் சொல்லி அறிவுரை கூறினால், ‘அக அழகு தான் முக்கியம்; புற அழகுதேவை இல்லை…’ என்று கூறி, சமாளி க்கிறார்.

நன்றாக சம்பாதித்தும், நல்ல உடை அணிவதில்லை; வாய் துர் நாற்றம் வீசுகிறது. டாக்டரிடம் செல்லுங்கள் என்றால், கண்டு கொள்வதில்லை. ஷேவ் பண்ணுவதே இல்லை; பணம் மற்றும் சாப்பாடு மட்டுமே முக்கியம் எனபதுபோல், வாழ்ந்து கொண்டி ருக்கிறார்.

என் அம்மா வீட்டிற்கு செல்லும்போது, நல்ல உடை அணியாமல் வரு வதால், என் தோழிகள் மற்றும் உறவினர்கள் ஏ ளனமாக பேசுகின்றனர். இதனால், என்னால் இல் லறத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கவலையை மறப்பதற்கு, குழந்தையும் இல்லை; திருமணமானவர்கள் அனுபவிக்கும் சந் தோஷங்களை இழந்து நிற்கிறேன்.

வீட்டில் பெண்கள் அழகாக இருப்பதை ஆண்கள் விரும்புவது போல், ஆண்கள் அழகாக இருப்பதை, பெண்களும் விரும்புவர் என்பதை, இவரைப் போன்ற ஆண்கள், மறந்து விடுகின்றனர். இதே நிலை நீடித்தால், நான் மனநோயாளியாக மாறி விடுவே னோ என்று, பயமாக இருக்கிறது. உங்களை கடவுள் மாதிரி நினைத்து முறையிடுகிறேன்; என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்க ள். அவரது உடம்பை குறைப்ப தற்கும், வாய் நாற்றத்தை போக்கு வதற்கும், உரிய மருத்துவரை அணுக யோசனை கூறுங்கள். பிற் காலத்திற்கு பணம் தேவை என்று கூறி, கஞ்சனாக இருக்கிறார். சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துவதற்கு தக்க அறிவுரை கூறுங்கள்.

— இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு–

கடிதத்தில், நீ தெரிவித்திருந்த பிரச்னைகளை புரிந்து கொண்டே ன்.

உன் பிரச்னை, கணவரின் குணாதிசயங்கள், நடத்தை களைப் பற் றியதா அல்லது உன் தோழிகள், உறவினர் கள் கிண்டல் அடிக்கி ன்றனரே என்பதா?

இக்காலத்து பெண்கள், த ங்களுக்கு திருமணம் நட ந்தால், அது, இன்றைய முன்னணி இளம் நடிகர் மாதிரி இருக்கும் நபர்களுடன் தான் நடக்க வேண்டும் என்றும், ஆண்களாக இரு ந்தால், இன்றை ய பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகைகள் மாதிரி இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆனால், நடை முறையில், அவர்களது எண்ணத்திற்கு, எதிர் மறையாகத்தான் அமைகிறது. இதுதான், யதார்த்தம்.

சரி மகளே, இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்று பார்ப் போம்…

‘குழந்தை இல்லையே…’ என, வருத்தப்பட்டுள்ளாய். நீ மனம் உவ ந்து குடும்பம் மற்றும் செக்சில் ஈடுபட்டால் தானே, குழந்தைக் கு தாயாக முடியும்? கணவர் நெருங்கி வரும்போது, வெறு ப்பை காட்டினால், உன்னிடம் எப்படி அவர், சந்தோஷமாக இ ருக்க முடியும்?

‘வாய் துர்நாற்றம் அடிக்கிறது… டாக்டரிடம் போக மறுக்கிறார்…’ என்கிறாய். உன்நோக்கம் சரி தான். ஆனால், அதை எப்படி பக்குவமா ய் சொல்கிறாய் என்பதுதானே முக்கிய ம். ஒருவருக்கு, வாய் துர்நாற்றம் இருந் தால், ஒன்று வாயை சரியாக கழுவாத தாலோ, சரியாக பல் துலக்காததாலோ அல்லது வயிற்றில் புண் இருந்தாலோ, இப்படி நாற்றம் இருக்கும். இவர்களை உடனடியாக டாக்டரிடம் அழைத்துசெல் ல வேண்டும். ஆனால், அதற்கு முன் அன் பாகவும், பாசமாகவும் அவர்களுக்கு அது குறித்து, எடுத்துரைக்க வேண்டும்.

‘கருப்பாக, குண்டாக, தொப்பையுடன் இருக்கிறார்… ஷேவ் கூட செய்வதில்லை…’ என்கிn றாய். தன்சுத்தம், உடற்ப யிற்சி, சுகாதாரம் பற்றி, அவரிடம் பக்குவமாய் எ டுத்துச் சொல்லி குஷிப் படுத்தினா ல், நிச்சயம் உன் பேச்சைக் கேட்பார். குறைகளை சுட்டிக்காட்டி வார்த்தைகளால் துன்பு றுத்தினால், நெகட்டிவாக நடந்து கொள் வார். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து, விட்டு க்கொடுத்து வாழ்ந்தால் தான், குடும்பம் என்ற கோ வில் நிலைத்து நிற்கும். இதில், சுருதி குறைந்து, சுதி மாறினால், தறி கெட்டுப் போ ய், சொல்ல முடியாத துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, இருக்கிறதை விட்டு, பறக்கிறதை பிடிக்க முயற்சி செய் யாமல், உன் சாமர்த்தியத்தாலும், அன்பான நடத்தையாலும் உன் கணவரை, நீ ஆசைபட்டபடியே மாற்றி, அவரை தக்க வைத்துக் கொள்.

மனநோயாளி ஆகிவிடுவேனோ என்ற நினைப்பு வந்தால், உடனே மனநல மருத்துவரையோ அல்லது ஆலோசக ரையோ அணுகி, முழு விவரத்தையும் கூறு. கூடவே, உன் கணவரையும் அழைத்து ச் செல். இவற்றுக்கெல்லாம் மேலாக, உனக்கு மனைவி என்ற உரிமையும், கடமையும் இருப்பதால், இதுவரை குழந்தையில்லா த நீ, அவரை குழந்தையாக பாவித்து அன்புடனும், பாசத்துடனும் அவருக்கு பணிவிடை செய்தால், உன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, அவர் தன்னை மாற்றி கொள் வது உறுதி. ஒவ்வொரு வெற் றி பெற்ற ஆணுக்கு பின்னால், ஒரு பெண் இருக்கிறார். நீ ஏன், அந்த பெண்ணாக, பாரதி கண்ட சக்தியாக இருக்க கூ டாது! முயன்றால், முடியாதது எதுவும் இல்லை. நீ வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: