Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராத ஆச்சரியம் கொடுக்க‍…

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண் டைகள்தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளைவிட, சண்டை வந்தா ல்தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ஒருநாளுக்குள் முடிந்துவிடவேண்டும் . 

இவ்வாறு வரும் சண்டையில்

ஈகோ இருக்கவே கூடாது. வாழ்க் கை துணையுடன் சண்டைபோ ட்டு, ஒருநாள் முழுவதும் பேசாம ல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரி செய்துவிட வேண்டும். ஏனெனி ல் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும்.

அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவ து ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்க ளை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள்.

அதுமட்டுமின்றி, படுக்கும்போ து அவர் தள்ளிப்படுத்தால், அவ ரைத்தெரியாமல் தொட்டது போ ன்றுதொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள். சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமா ன செயல்கள் கூட உதவும். சொல் லப் போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவா று ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

எந்த ஒரு பெண்ணாக இருந்தா லும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்ச யம் ஏதாவது ஒன்றை எதிர்பார் ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புக ளை அவர்கள் கோபமாக இருக் கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, கா தலை அதிகரிக்கும்.

சண்டை ஏற்படும்போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவி ர்க்க, அவர்களது மனதை திசைத் திருப்ப ஏதாவது ஒரு வித்தியாச மான மற்றும் அவர்களது ஆர்வத் தை தூண்டும் ஏதாவது ஒரு தலை ப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந் துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண் டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாச மான முறையில் அவர்களிடம் அந்த மன் னிப்பை வெளிப்படுத்தலாம்.

உதாரணமாக, பெண்கள் சாரி என் று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண் ணாடியில் மாற்றலா ம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இ டங்களில் வைக்கலாம். இல்லை யெனில் தோப்புக் கர்ணம் போட லாம். இவ்வாறு சிறுசிறு விஷயங் களை செய்வத ன்மூலம் மனைவி யின் கோபத்தை குறைக்க முடியு ம். முயற்சி செய்து பாருங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: