Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொடுகுதொல்லைகளின் வகைகளும் அதற்குரிய சிகிச்சைகளும்! எச்ச‍ரிக்கைகளும்!!

தலையில் அடிக்கடி அரிப்பு சொ றிந்தால் தவிடுபோல், பொடித்த உப்பு போல் பொடி உதிருகிறது. உண்மையிலேயே டி.வி. யில் காட்டும் பொடுகு மருந்து விள ம்பரங்களில், பொடுகை காண் பிக்க பொடி உப்பை தான் பயன் படுத்துகிறார்கள். பொடுகு அரிப் பு தலையில் பரவிக் கொண்டே போகும்.

அரிப்புள்ள இடங்களில் முடி உதிரலாம். பொடுகு புருவங்களில் பரவி, அங்கும் அரிப்பெடுத்து, முடி உதிரலாம். முடி உதிர்வதற்கு

முக்கிய காரணம் பொடுகு தான். அடிக் கடி தலையை சொறிய வைத்து சமூகத் தில், பொது இடங்களில் நம்மை தலை குனிய வைப்பதும் பொடுகுதான். பொடு கு நாளாக நாளாக, தீவிரமாகி பல தோ ல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

நமது தோல் தன்னைத்தானே புதுப்பித்து க் கொள்ளும். இறந்த செல்களை தள் ளி, புதிய செல்களை உருவாக்கும். இந்த வேலை பொடுகினால் வேகமாக செய்யு ம்படி ஆகிறது. அதிகளவு செல்கள் உரு வாகி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண் டு செதில் போ ல் ஆகின்றன. மண்டைத் தோலின் மேற்புர செல்கள் அதிகமாக இறந்து வெளியேறுவது தான் பொடுகு.

எந்த வயதிலும் பொடுகு வரலாம், ஆனால் பொதுவாக 12 லிருந்து 80 வயதுள்ளவர்களில் ஏற்படலா ம். தீவிர அறிகுறிகள் 30-60 வய துள்ளவர்களுக்கு காணப்படும். பொடுகுத் தொல்லையின் அபாய ம் என்னவென்றால், இன்னொரு தீவிர சர்ம வியாதியான சோரியா சிஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும், பொடுகு போல் தோன்றும்.

பொடுகு வர காரணங்கள்

ஆயுர்வேதத்தின்படி கப, பித்த தோ ஷங்களால் பொடுகு உண்டாகும்.

எண்ணையை சுரக்கும் செபாசியஸ் சுரப்பிகள் தேவைக்கு அதிக மான எண்ணையை சுரந்தாலும் பொடுகு, குறைவாக சுரந்தாலும் பொடுகு உண்டாகு ம்.

பார்கின்ஸன்ஸ் வியாதி பொடுகை உண் டாக்கும். இதர நரம்பு மண்டல கோளாறுக ளும் காரணமாகலாம்.

பலவித கோளாறுகளுக்கு காரணமான அதிக உடல் பருமன், பொ டுகுக்கும் கார ணமாகலாம்.

ஆயுர்வேதத்தின் படி, தவறான உணவுமு றை, மலச்சிக்கல், பலவீனம் இவைக ளால் பொடுகு ஏற்படும். ஊட்டச்சத்து குறைவும் காரணமாகலாம்.

ரசாயன பொருட்கள் நிறைந்த ஷாம்பூ, முடி உலர உபயோகிக்கும் மெஷின், குளிர் தாக்குதல்.

டென்ஷன், ஸ்ட்ரெஸ், பரபரப்பு. கூந்தல், சர்மம் இவற்றை சரிவர பாதுகாக்காமல் இருப்பது, சுகாதார குறைவு.

ஓவ்வாமை.

அதிகமாக, இனிப்பு, கொழுப்பு, மாவுச் சத்து பொருட்களை உண்ப து.

பரம்பரை.

பூஞ்சனம் தொற்றாலும் பொடுகு ஏற்ப டும். மலாஸ்ஸெசியா பழைய பெயர் பைட்ரோஸ்பர்ம் என்ற ஃபங்கஸ் பொடு கை உண்டாக்கும். இந்த பூஞ்சனங்கள் உடலில் நோய் தடுப்பு சக்தியின் குறை வால் தாக்குகின்றன. கூந்தலை சரிவர பராமரிக்காவிட்டால் இந் த பூஞ்சனங்கள் தாக்கும்.

பொடுகின் வகைகள்

முதல்வகை உலர்ந்த, எண்ணைப் பசை யில்லாத வறண்ட மண்டை ஓட்டில் ஏற்படும். எண்ணைப் பசையை சுரக்கு ம் செபாசியஸ் சுரப்பியின் குறைபா ட்டால் ஏற்படும். இந்த வறண்ட பொடு கின் தன்மைகள்

தலையில் அரிப்பு ஏற்படும். சொறிந்தா ல் தவிடு போல் பொடி உதிரும்.

தலையை தட்டினாலே, பொடுகு உதிரு ம் அரிப்பு தலை முழுவதும் பரவும். அரி ப்புள்ள இடங்களில் வெள்ளையாகி, முடி உதிரலாம்.

சொறிய, சொறிய ரணமாக, சிரங்காக மாறும்.

சிறுகட்டிகள் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் உண்டா கலாம். உலர்ந்த பொடுகை குணப்படுத்துவது சுலபம்.

ஆனால் இது தொற்றும் கு ணம் உடையது. சுலபமாக ம ற்றவர்க்கு பரவும். இரண்டா ம் வகை எண்ணை சுரப்பு அதிகமானதால் வருவ து. இதன் தன் மைகள். முகப்பருக்கள் தோன்றும்.

வியர்த்தாலே அழுக்கு சேரும்.
பெரிய கட்டிகள் கொப்பளங்கள் ஏற்பட லாம்.

எண்ணை பொடுகை குணப்படுத்துவ து கடினம்.
தலையை லேசாக கீறினாலும் அழு க்கு ஊறும்.
தலையில் துர்நாற்றம் அடிக்கும்.

மலாஸ்ஸெசியா உயிரற்ற மக்கிய பொருட்களை உட்கொள்ளும் பூசனம். பல சர்மநோய்களுக்கு காரணம். லூ யி சார்லஸ் மலா செஸ் என்ற ஃப்ரா ன்ஸ் விஞ்ஞானி 19ம் நூற்றாண்டில் இ தை கண்டுபிடித்தார். ரேமண்ட் சபூராட் என்பவர், 1904ல், இது தான் பொடுகை உண்டாக்கும் காரணி என்று கண்டுபிடித்து, பை ட்ரோ ஸ்பர்ம் மலாஸ்ஸெசியா என்று பெயரிட்டார். இந்த மலா ஸ் ஸெசியாவின் இனத்தில் ஒன்றான மலாஸ்ஸெசியா க் ளோபா ஸா தான் பொடுகை உ ண்டாக்குகிறது. இது வளர கொ ழுப்பு தேவை எனவே தலையின் செபாஸியஸ் சுரப்பிகளில் குடி கொண்டு வேகமாக வளரும். தலையில் பொடுகையும் அரி ப்பையும் உண்டாக்கு ம்.

பொடுகை போக்க வழிகள்

500 மி. லிட்டர் நல்லெண்ணையில் 50 கிராம் வேப்பம்பூ, 25 கிராம் வெல்லத்தை சேர்த்து முறியும் வரை காய்ச்சவு ம். வடிகட்டித் தலையில் தேய்த்து முழுகவும். பொடுகு போகும்.

வேப்பம் பட்டை கொஞ்சம் எடுத் து, இடித்து, நீரில் கலந்து கஷய மாக தயாரித்துக் கொள்ளவும். ஆ றியபின் சிலுப்பினால் நுரை வரு ம். இந்த நுரையை அரிப்புள்ள இட ங்களில் தேய்க்கலாம்.

ஏலரிசி, குங்கிலியம், மட்டிப் பால், சந்தனம், கிச்சிலிக் கிழங்கு பூலாங் கிழங்கு, குக்குலு, சாம்பிராணி, இ வைகளில் கிடைக்கும் பொ ருளை எண்ணையில் காய்ச் சி உபயோகித்தால் பொடுகு நீங் கும்.

உடல் காங்கையை குறைத் தால் பொடுகு கட்டுப்படும். இதற்கான வழி முறைகளை அறிய ஆயுர்வேத டாக்டரை அணுக வும். தலைக்கு குளிக்க, மசாஜ் செய்ய உபயோகிக்கும் எண்ணை யில் கொம்பரக்கு கலந் து காய்ச்சினால், உடற் காங்கை குறையும்.

ஒரு பாகம் சந்தன எண் ணையுடன் 3 பாகம் எலு மிச்சை சாறு சேர் த்து நன்றாக கலக்கவும். இ தை தடவி சிறிது நேரம் கழித்து அல சவும். தே ங்காய் எண்ணையையும் சந்தன எண்ணைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

இரவில் இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்தை தண் ணீரில் ஊறவைக்கவும். மறு நாள் காலையில் அப்படியே கூழாக அரை த்து, தலையில் தடவிக் கொள்ளவும். அரை மணி கழித்து சீயக் காய் தேய் த்து கழுவி விடவும். பொடுகு மட்டுமன்றி வெந்தயம் புழு வெட்டையும் தடுக்கும்.

பெரிய நெல்லிக்காய், வெந்தயம், கறி வேப்பிலை இவற்றை காய வைக்கவும். உலர்ந்த பின், பொடித்து ஒரு துணி மூட்டையில் கட்டி, நீங்கள் உபயோகிக் கும் எண்ணையில் போட்டு வைக்கவும். இதே எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் தலைச்சூடு குறையும்.

எச்சரிக்கை

வெந்தயத்தை கால் மணிக்கு மேல் த லையில் வைக்க வேண் டாம். அதிக கு ளிர்ச்சி ஏற்பட்டு ஜன்னி வரும்.

பொடுதலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் இலை , காய் இவற் றிலிருந்து சாறு எடுத்து, அதன் சமஅளவில் நல்லெண் ணையில் கலந்து காய்ச்சி, சாறு வற்றியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவு ம். இதை தலைக்கு தடவி வர பொடுகு போகும். இதனாலேயே இதற்கு பொடு தலை என்ற பெயர் வந்தது.

ஒரு ஸ்பூன் கற்பூரத்தை 1/2 கப் தேங் காய் எண்ணை அல்லது வேப்பம் எ ண்ணையுடன் கலந்து வைக்கவும். இ ந்த எண்ணையை தலைக்கு தடவி குளி க்கலாம்.

தேங்காய் எண்ணை, ஆலிவ் எண் ணை, பாதாம் எண்ணை, இவை மூன் றில் ஏதாவது ஒன்றை சூடுபடுத்தி, கூந்தல் வேரில் நன்கு படுமாறு தேய்த் து, சூடான நீரில் நனைத்த டவலை தலையில் கட்டிக் கொண்டு 1 மணி நே ரம் ஊறவும். பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.

செம்பருத்தி பூவை அரைத்து தலையி ல் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கு ம்.

தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எ லுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் த லையில் தேய்த்துக் குளித்தால் பொடு கு போகும். வாரம் இருமுறை, 4 வார ங்கள் இதை செய்ய, பொடுகிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளை மிளகைப் பால் விட்டு அ ரைத்துத் தலையில் தேய்த்து, அரை ம ணி நேரம் ஊறிக் குளிக்கவும்.

வால் மிளகைப் பால் விட்டு, அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் பொடுகு மறையும்.

வில்வக்காயைப் பொடியாக்கி, அத்துடன் சம அளவு சீயக்காய் பொடி கலந்து, தினம் தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.

நல்லெண்ணெயில் சிறிதளவு வேப்ப ம் பூவும், துளசியும் சேர்த்துக் காய்ச் சித் தலையில் தடவிக் குளித்து வர லாம்.

தேங்காய்ப் பால் அரை கப் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு நான்கு டேபிள் ஸ்பூன் இரண்டையும் கலந்து தலை யில் தேய்த்துக் குளி த்து வரலாம்.

250 மி.லி. தேங்காய் எண்ணெயுடன், 50 மி.லி. அருகம் புல் சாறு மற்றும் 50 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறு கலந்து காய்ச்ச வேண் டும். அது பா தியாக வற்றியதும், அத்துடன் 250 மி.லி. தேங்காய்ப் பாலைக் க லந்து காய்ச்ச வேண்டும். நீர் வற்றி எண்ணெய் பிரியும் சமயம், 15 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து போட்டு சிவந்த தும் இற க்கி, வடிகட்டி தலையில், தேய்த்து வரலாம். இதே எண் ணெயைத் தலையில் தடவி, ஊறிக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிக்கும் போது கடைசியில் எலுமிச்சம் பழ சாற்றால் தலையை அலச வும். இதனால் கூந்தலின் அழகுக்கும் பிசுபிசுப்பும் நீங்கி, முடி பளபளக்கும்.

பொடுகுக்காக தயாரிக்கப்பட்ட ஷாம்பூக் களை, மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம். பலவகை ஷாம்பூக் கள் – ஃபங்கஸ்ஸை எதிர்க்கும் சாலிசிலி க் அமிலம், செலினியம் ஸல் ப்பைட் ஷாம்பூக்கள் கிடைக்கின்ற ன.

முடிக்கால்களில் அரிப்பு, பொடுகு உள் ளவர்கள். தூர்வாதி தைலம், தினேச வல்யாதி தைலம், சதுக்ஷீரிகேர தை லம் போன்ற தைல ங்களில் ஏதாவது ஒன்றை, வைத்தியரின் ஆலோசனை யுடன் பயன்படுத்தலாம்.

வேப்பெண்ணையும், கற்பூரத்தையும் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசவும்.

இஞ்சி சேர்த்த ஆலிவ் எண்ணையை தலையில் தடவி, சிறிதுநேரம் ஊறவும் பிறகு அலசவும்.

வெள்ளை முள்ளங்கியைத் துருவி சாறெடுத்துத் தலை முழுவது ம் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளித் தாலும் பொடுகு வராது.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையி ல் தடவிக் குளித்து வந்தாலும் குணம் தெரியும்.

பொடுகை ஆரம்பத்திலேயே கவனிக்கா விட்டால், தலை முழுவது ம் பரவி கூந் தலை நாசப்படுத்துவதோடு, சருமத்தை யும் பாதிக்கத் தொடங்கும்.

நாட்டு மருந்துக்கடைகளில் கோஷ்டம் என்ற வேர் கிடைக்கும். இதை வாங்கிப் பொடி செய்து வெண்ணெயில் குழைத் துத் தலை யில் தடவிக் குளிக்கலாம்.

பசலைக்கீரையை அரைத்துத் தலை முழுக்கத் தடவிக் குளிக் கலாம். இதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குச் செய்து வந்தால் பலன் தெரியும்.

பொடுகு உள்ளவர்கள் பயன் படுத்திய டவல், சீப்பு, தலைய ணை, உறை போன்றவைக ளை அடுத்தவர்கள் பயன்படுத்தவே கூடாது.

பொடுகை அலட்சியப்படுத்த வேண்டாம். குணப்படுத்த முடியவில் லையென்றால் அது எக்ஸிமா அல்லது சோரியாசிஸ் ஆக இருக்க லாம்.

பொடுகு பிரச்சனைக்கு முழுமையான தீர்வு உண்டா

பொதுவாக அழகு நிலையங்களில் முடி, பொடுகுக்கான சிகிச்சைகள், மசாஜ் போன் றவைகளை மட்டுமே தருவார்கள். ஆனால் ஆயு ர்வேதத்தில் பொடுகுக்கான காரணம் ஆராயப்பட்டு அதற்கான மருந்துகள் தரப்ப டுகின்றன. தவிர முடிக்கான சிகிச்சைகள் ஆயுர் வேத வைத்தியத்தில் தரப்படும் என்ப தால் மீண்டும் தொடராத முழுமையான தீர்வு கிடைக்கும்.

உணவு முறைகள்

அதிக உப்பு, அதிக சர்க்கரை மற்றும் கொழு ப்புள்ள உணவுகளை சாப்பிடுகிற போது இப் பிரச்சனை உருவாகிறது. அதிகப்படியான எ ண்ணெய் பிசுக்கான கூந்தலிலும் பொடுகு வரும். சொரியாஸி ஸ் நோயின் ஆரம்ப அறி குறியாகவும் இருக்கலாம். பொடுகு நீக்குவ தாக பரிந்துரைக்கப்படும் ஷாம்பூக்களை தின ம் உபயோகிக்கா தீர்கள். அவை பொடுகைக் குறைத்தாலும், கூந்தலை பிசுக்காக, பொலி வின்றி வைக்கும். உங்களுக்குத் தேவை கூந்தலின் வேரில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துவ து.

பொடுகுப் பிரச்சனை உள்ளவர் கள் சர்க்கரை மற்றும் மாவுப் பொ ருட்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பாட்டிற்குக் கூடிய வரையில் சுத்தமான, நல்லெண்ணெயை உபயோகிப்பது சிறந்தது.

பச்சை வெங்காயத்தைத் தினமும் சாலட்டாகவோ, தயிரில் ஊர வைத்தோ சாப்பிடலாம். வெங்காயம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு ப் பல வழிகளில் உதவும்.

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிக ளை உணவில் சேர்த்துக் கொள்ள வே ண்டும். முழுத் தா னியங்களை அதிகம் சாப்பிட வேண்டு ம். நெய், எண்ணெய், தேங்காய் கலந்த எள் சட்னி போன்ற வற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் கூந் தலை கண்டிஷன் செய்ய வேண்டியது அ வசியம். ம ண்டையோட்டுக்கு ஊட்டம் தர க் கூடியது. அழுத்தமான மசாஜ் மிக  முக்கியம். அது எண்ணெய் சுர ப்பிகளைத் தூண்டி கூந்தலின் வறட்சியைப் போக்கு ம். இது எது வுமே பலன் தராமல், கூடவே உங்களுக்கு அளவுக்கதிக களைப்பு, மலச் சிக்கல், வறண்ட சருமம் போன்றவையும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை மேற் கொள்வது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: