வட இந்திய கலாச்சாரத்துடன் தோன்றிய தமிழ்ப்பெண் – வீடியோ
சில வாரங்களுக்கு முன்பு, கிழக்குக்கடற்கரைச் சாலையில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத மருத்துவம் ஆகிய இர ண்டு மருத்துவ முறைகளை க் கொண்டு சிறப்பாக திறப்பு விழா நடை பெற்றது. அதில் பங்கேற்ற ஒரு தமிழ்ப்பெண் வட இந்திய கலாச்சார உடை யில் தோன்றி, தமிழையும் சற்றுத் தடுமாறியாவாறு தொகுத்து வழங்கிக் கொண்டு
இருந்தா ர்.
நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். சித்த மருத்துவம் என்று தமிழ கத்தில் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் மருத்துவம்! ஆயுர் வேத மருத்துவம் கேரளாவில் தொன்றுதொட்டு செய்துவரும் மருத்துவ முறை ! நிகழ்ச்சியை தொகுத்த வழங்கிய அந்த தொகு ப்பாளினி ஒன்று தமிழகத்தின் பாரம்பரிய உடை யுடனோ அல்லது கேரளாவின் பாரம்பரிய உடையுடன் மேடையி ல் தோன்றி, தொகுத்தளித்திருந்தால் நிகழ்ச்சி நன்றாக இருந்திரு க்கும்.
மேலும் நிகழ்ச்சியின்போது போச்சாளர்களையும், பிரபலங்களை யும் பேச அழைத்துவிட்டு, அவர்கள் பேசி முடிக்கும் வரையில் மேடையின் நடுவிலேயே நின்று கொண்டிருந்தார் பின்னால் அமர்ந்திருந்த மருத்துவர்கள் உட்பட பல பிரபலங்கள் மறைத்த வாறு நின்றிருந்தார். அதனால், மேடையின் கீழே அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு,மேடையில் யார் இருக்கின்றனர் என்று தெரியாமல் போனது. பேசவரும் பிரபலத்தை அழைத்துவிட்டு மே டையின் ஓரமாக நின்றிருந்தால், அங்கே அமர்ந்திருந்த பிரபலங் கள் மருத்துவர்களையும், பார்வையாளர்கள் அறிந்திருக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
அங்கே குழுமியிருந்த பல்வேறு பத்திரிகையாளர்களும் பார்வை யாளர்களும், மேடையில் நடுவே நின்று கொண்டு அமர்ந்திருந்த பிரபலங்களை மறைத்தவாறு இருப்பதை யாரும் கண்டு கொண்ட தாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இதை என்னால் பொறுத்து க்கொள்ள முடியவில்லை. அதனால் எனது நண்பர் ஒருவரிடம் அந்த பெண்ணை, மேடையில் ஓரமாக நிற்கச்சொல்லுங்கள் என் றேன். அவரும், மருத்துவமனை சம்பந்தப்பட்ட ஒருவரிடம் சென் று நான் சொன்னதை தெரிவித்தார். அவரும், மேடையில் நின்றிரு ந்த பெண்ணிடம் சைகைமூலம் ஓரமாக நிற்கச் சொன்னார். அப் போதும் அதை சட்டைச் செய்யவில்லை. சிறிதுநேரம் கழித்தே அ தாவது நிகழ்ச்சி முடிவதற்குச் சில மணித்துளிகள் முன்பாகத்தா ன் அப்பெண்மணி மேடையின் ஓரமாகபோய் அமர்ந்துகொண்டா ர். இதனால், நிகழ்ச்சி ஆரம்பத்தில் மேடையில் இருந்தோரை தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை.