Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?

அல்சர் எனப்படும் குடல்புண்ணால் இன்றை ய காலகட்டத்தில் பலரும் அவஸ்தைப்படுகி ன்றனர்.

இதனால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக் குழியிலேயே நிற்பதுபோ ல உணர்வு ஏற்படும்.

நெஞ்செரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாக வோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொ ஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த

ஏப்பம் என அல்சர் வாட்டியெடு த்துவிடும்.

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக ச் சாப்பிடாமல் விடுவதும், துரித உண வு, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவு கள், காபி, டீ அ திகம் அருந்துவது போ ன்றவையும் அல்சர் ஏற்பட காரணமா கின்றன.

அதேபோல் அதிக டென்ஷன், மன அழுத்தம் போன்றவையும் அல்ச ர் ஏற் படக் காரணமாக உள்ளதாக மருத்து வர்கள் தெரிவிக்கின் றனர்.

மனஅழுத்தத்தால்

ஒரு சிலருக்கு பாரம்பரிய ரீதியிலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்ப டுதல், மன அழுத்தம் காரண மாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டென்ஷன் ஏற்படும்போது குடலில் அமிலம் அதிகமாகச் சுரக்கி றது, இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

மருந்தின் வீரியத்தால்

சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்ச ல் என்றால் தாங்களாகவே மருந்தகங்க ளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ் வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மரு த்துவர்கள்.

அதேபோல் வலிநிவாரணி மாத் திரைகள், ஆன்டிபயாடிக் போன் ற மாத்திரைகள் உட்கொள்வது ம் அல்சர் ஏற்பட காரணமாகின் றன. ஏனெனில், ஆன்டிபயாடிக் உட்கொள்ளும்போது மருத்துவ ர்கள் தரும் பி.காம்ப்ளெக்ஸ் மா த்திரைகளை உட்கொள்வதும் அவசிய ம்.

எண்ணெய் பலகாரங்கள் கூடாது

வயிற்றுப்புண் ஏற்பட்டவர் கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அ தேபோல் அதிகமான இனி ப்புகள், பொரித்த உணவுக ள், பாதி பழுத்தும் பழுக்கா த பழங்கள், பச்சைக் காய் கறிகள் (வெங்காயம், வெ ள்ளரி உள்பட), இஞ்சி, மசா லா, காரமான குழ ம்பு இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.

தவிர்க்கும் பட்சத்தில்

எந்தக் காரணத்தையும் கொ ண்டு உணவை தவிர்க்க கூ டாது, சரி யான நேரத்தில் உ ணவை உட்கொள்ளுதல் அவ சியம்.

மேலும், அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகை யிலான உணவுகளை உட் கொள்ளவேண்டும்.

அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூ ன்று வேளையும் மூக் கைப் பிடிக்க சாப்பிடாம ல், கொஞ்சமாக, அடிக்க டி சாப்பிடலாம்.

எதையும் நன்கு கடித்து, மென்று பொறுமையாக சாப்பிட வேண்டு ம்.

குழைய வேகவைத்த அ ரிசிச்சாதம், அவல் பொரியில் கஞ்சி போன்றவை செய்து சாப்பிட லாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நன்றா க வேகவைத்து மசித்துச் சாப்பி ட வேண்டும், பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கொள்ள லாம்.

உணவு உட்கொண்ட உடனே படுக் கைக்குச் செல்லக்கூடாது, ஏனெ னில் அது நெஞ்செரிச்சல் ஏற்பட வழிவகுக்கும்.

எனவே சாப்பிட்டபின் மூன்று ம ணி நேரம் கழித்தே உறங்க வே ண்டும். நேரம் கெட்ட நேரத்தில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடு வது அவதியை அளிக்கும்.

பொதுவாக, வயிற்றுப்புண் உள்ள வர்கள், தங்கள் குடலை கண்ணு ம் கருத்துமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: