வாக்காளர் விழிப்புணர்வுக் கண்காட்சி – வீடியோ
04-04-2014 ஆம் தேதியான இன்று, சென்னை, மெரினா கடற்கரை யில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு வாக்காளர் விழிப்புண ர்வுக் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை யும் வாக்களிப்பது நமது கடமை என்பதையும் என் வாக்கு என் உரிமை என்கிற கோஷத்தோடு அற்புதமாக நடத்திக் காட்டினர் அந்த கண்காட்சியில் இடம்பெற்ற ஒரு காட்சியை கீழுள்ள வீடியோவில் காணலாம்.
உங்கள் வாக்குகளை யாரிடமும் அடகு வைக்காமல் அல்லது விற்றுவிடாமல் உங்களது சுய சிந்தனையோடு, உங்கள் பகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர் என்பதைச் சிந்தித்து வாக்களித்து மத்தியில் நல்லதோர் ஆட்சி மலர விதை2விருட்சம் இணையம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.