Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்து வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது!

பாட்டிலில் கிடைக்கும்நீரைவிட குளோரினால் சுத்தம் செய்து வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமா னது!

‘தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’ என்ற நிலைமாறி, தண்ணீ ரைக் கூட பணம் கொடுத்து தான் வாங்கவேண்டி இருக் கிறது. அப்படியே வாங்கினா லும், குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இரு க்கிறதா என்றால், அதுவும் சந்தேகம் தான்.

இன்று, சாமானியர்களும் மினரல் வா ட்டர் எனப்படும் சுத்திகரித்தத் தண்ணீ ரைப் பயன்படுத்துகின்றனர். பாட்டில்க ளில்

கிடைக்கும் குடிதண்ணீர் சுகாதாரமானதுதானா? எத்தனை நாட்க ள் வரை அ தைப் பயன்படுத்தலாம்? மனதுக்குள் அலை யடிக்கும் கேள்வி களை, தீவிர சிகிச்சைப் பிரிவு தலை மை மருத்துவர் வசந்த் செந்தி ல் முன் வைத்தோம்.

• பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண் கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப் பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிக வும் சிரமம்.

• பொது இடங்களில் விற்கும் பாட் டில் தண்ணீரின் தூய்மை யை அறி வது உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போ ன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பி டப்பட்டு இருக்காது. உரிய விவரங் கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள்.

• பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப் பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட் களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம் பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்பு ண்டு. எனவே, குழாயில் பிடித்த தும் வடிகட்டி 20 நிமிடம் கொதி க்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது.

• கொதிக்க வைத்த நீருடன் கு ளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரை க் கொதிக்கவைக்காமல் வெது வெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளர வைக்கும். உஷார்!

• பாட்டிலில் அடைக்கப் பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 ம ணி நேரத்துக்குள் பயன் படுத்திவிட வேண்டும். ஏ னெனில், பாட்டிலில் தண் ணீர் அடைக்கப்பட்ட பிற கு, ஏற்படும் கிருமித் தொ ற்றை அழிக்கவல்ல கிரு மி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளை கள் கூடக் கிருமித் தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.

• வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீ ரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிக ளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொ ல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொ திக்க வைக்க வேண்டும்.

• தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத் து அதே பாத்திர த்தில் வைத்தி ருந்தால் 24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப் பாக இருக்கும். ஆனால், வேறுபாத்திரத் துக்கு மாற் றும்போது கிருமித் தொற்று ஏற் பட வாய்ப்பு உண்டு.

• கொதிக்க வைத்து ஆறிய பிறகு, குளிர்பதனப் பெட்டியில் வைத்திரு ந்தாலும் 48 மணி நேரத்துக்குமேல் அதைப் பயன்படுத்தக் கூடாது.

-ஹேமா மேனன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: