Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (06/04/14): ஒரு நல்ல மனைவியை தள்ளி வைக்க மாட்டார்கள்!

அன்பு வணக்கம்.— 

எனக்கு வயது 50; இரண்டு பெண்கள்; இருவருக்கும் திரும ணமாகி விட்டது. ஆறு ஆண்டுக ளுக்கு முன், என் காலில், சிறிய அளவில், வெண்ணிற படை ஒன்று இருந்தது. அதை நான் கண்டு கொள் ளவில்லை.

நான்கு மாதங்களுக்கு முன், எதேச்சையாக அதை பார்க்க நேரி ட்டபோது, அது பெரிய அளவில் பரவி இருந்தது. எங்கள் குடும்ப டாக்டரை அணுகினேன். அவர் பரிசோதித்துப் பார்த்து, அது, ‘லெப் ரஸி’ என்று கூறி,

இரு மாதங்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்தார். மருந்து தீர்ந்தது ம், மருத்துவரை அணுகினேன். அவரோ என்னைப் பார்த்ததும், அருவெறுப்பு அடைந்தது போல், வில கத் தொடங்கினார். மேலும், அவரை சங்கடப்படுத்த விரும்பாததால், சிகிச் சையை நிறுத்தி விட்டேன்.

ஆனால், அந்தப் படை, இப்பொழுது முக்கால்வாசி மறைந்து விட் டாலும், உள்ளங்கைகள் இரண்டும் மரத்துப் போனது போல் இரு க்கிறது. தலை வாரக் கூட கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு மாத மாக, எனது விரல் நுனிகள், சிவந்து, உணர்ச்சியுடனும், லேசாக கொப்பளித்தது போன்று காணப்படுகிறது.

இந்நோய் என் கணவரையோ, பெண்களையோ பாதிக்குமோ என , அச்சமாக உள்ளது. அக்கம் பக்கம் தெரிந்தால், எங்களை ஒதுக்கி விடுவர். மேலும், புகு ந்த வீட்டில், என் பிள்ளைக ளை ஒதுக்கி விடுவரோ என்று , பயமாக உள்ளது.

என்னைப் பிடித்திருப்பது படை நோய்தானா இல்லை மன பிர மையா என்று, சில நேரங்களி ல் சந்தேகமாக உள்ளது.

ஏனெனில், இதுவரை நான் தலைவலி, ஜுரம் என்று கூட படுத்ததி ல்லை. என் பெண்களின் எதிர்காலத்தை கருதி, என் விலாசத்தை தெரிவிக்க இயலாமைக்கு மன்னிக்க வும். இக்கடிதத்தை ஒதுக்கி விடாமல், தயவு செய்து, எனக்கு ஒரு வழியைக் காட்டி, என் வாழ் க்கையில் ஒளியை ஏற்றுங்கள்.

வணக்கங்கள் பல.

— இப்படிக்கு உங்கள் சகோதரி.

பிரியமான சகோதரிக்கு — 

உங்களது மன உளைச்சலை வெளிப்படுத்தி எழுதிய கடிதம் கிடை க்கப் பெற்றேன். உங்களின் உள்ளக் குமுறல்களை, என்னால் புரி ந்து கொள்ள முடிகிறது. 

ஆறு வருடங்களுக்கு முன், சிறி ய அளவில் இருந்த படை, நீங்க ள் கண்டு கொள்ளாத காரணத் தால், பெரிய அளவில் பரவி, தற் போது மாத்திரை, மருந்து சாப் பிட்டதன் காரணமாக குணமா கியிருக்கிறது. மீண்டும் மாத்தி ரை வாங்க மருத்துவரை அணு கியபோது அவரது அணுகுமு றை, உங்களுக்கு, மனவருத்தத்தை தந்ததுடன், மன உளைச்ச லையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கவலை வேண்டாம் சகோதரி… எந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், குறிப்பாக தோல் நோய் சிகிச்சை பிரிவுக்கு சென்றால், உங்க ளை, பெண் மருத்துவர்களே முழு மையாக, பரிசோதனை செய்வர். நீங்கள் தொழுநோயால் அவதிப்பட் டால், என்ன மா த்திரைகள், எவ்வள வு காலம் சாப்பிட வேண்டும், அந்த நோயின் தன்மை, காரணங்கள், சிகி ச்சை முறைகள், தவறான கருத்துக ள் போன்றவைகளை, மிக விளக்க மாக எடுத்துரைப்பதுடன், உங்களை ப் பற்றிய விவரங்களையும் ரகசிய மாக வைத்திருப்பர்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், இந்த நோய்க்காக எவ்வள வோ மருந்துகளும், நவீன சிகிச்சைகளும் வந்து விட் டன. என வே, இது பற்றிய, கவலை வேண்டாம்.

நீங்கள் நினைப்பதுபோல, உங்கள் கணவரையோ, குழந்தைகளையோ இது பாதிக்கப்போவது இல்லை. மேலும், இது, ‘கடவுள் தந்த சாபமோ, முன் வினை பயனோ’ கிடையாது.

நீங்கள், உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளிடமும், உறவுக்கா ரர் களிடமும் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான், அவர்கள் உங்களின் நோயைப் பற்றி நினைக்கப் போகின்றனர்.

எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து, மன வேதனையை அதிகரித்துக் கொள்ள வேண்டாம்.

நிச்சயமாக, இவ்வளவு பொறுப்பான ஒரு குடும்பத் தலைவியை, தாயை, நல்ல மனைவியை யாரும் தள்ளி வைக்க மாட்டார்கள்.

உங்களுக்கு முறையான சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும், அரவணைப் பும் கிடைக்க வாழ்த்துகள்.

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: