இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும் குளிர்விக்கப்பட்ட குடி தண்ணீர்!
சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடி ப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவ தற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என் சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறி வுறுத்துகின் றனர் மருத்துவர்கள்.
வெது வெதுப்பான தண்ணீர்
உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு
நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் சூ டான தண்ணீர் அருந்துவதா ல் புற்றுநோய் செல்கள் உருவா வதை தடுக்கின்றதாம். சீனர் களும், ஜப்பானியர்களும், தவ றாமல் இதனை பின்பற்றுகின் றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அரு ந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
சூடான தண்ணீர் அருந்துவதா ல் உணவானது எளிதில் செரி மான மாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக் களையும் தடுக்கிற து. எனவே சாப்பிட்டு முடித்தது ம் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக் கின்றனர்.
குளிர்விக்கப்பட்ட குடிதண்ணீர் வேண்டாமே!
குளிர்விக்கப்பட்ட குடிதண்ணீர் பருகுவ து உடலுக்கு எதிர்மறையான செயல்பா டுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரை யே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட் டு முடித்தவுடன் குளிர்விக்கப்பட்ட குடி தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக் கொண்ட உணவில் உள்ள எண் ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அள வை அதிகரிக்கவும் செய்கிற து.
குளிர்விக்கப்பட்ட குடிதண்ணீரை தொடர்ந்து பருகிவந்தால் இத யம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ப ல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக குளிர்விக்கப்பட்ட குடிதண்ணீரை குடிக்கக்க கூடா து. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வே ண்டும். வெதுவெதுப்பான தண் ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்த து.
-ஹேமா மேனன்
Informative and Educative Article, Thanks Sathya.
Useful tips to everyone tu