Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை!

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை

2014, ஏப்ரல் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிலிருந்து  .  . .

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பொதுத்தேர்தல் மக்க‍ளின் மனசாட்சியாய் . . . மாற்றங்களைத் தேடும் மௌனப் புரட்சியாய் விளங்கி வரும் நமது தேர்தல் களம் இந்தமுறை சற்று வித்தியாசமான

களமாய் காட்சியளிக்கிறது.

திருவிழாவைப்போல . . . விறுவிறுப்பும், பரபரப்பும், ஆர்ப்ப‍ரிப்பும், அரசியல் கட்சிக ளின் கொக்க‍ரிப்பும் இல்லாத தேர்தல் இது. காதைக் கிழிக்கும் பிரச்சாரம் இல்லை. தெ ருவை மறைக்கும் பிளாஸடிக் தோரணங்க ளில்லை. சுவர்களில் கிறுக்க‍ல் இல்லை. வீதியெங்கும் பேரணிகள் இல்லை. சினிமா வைப்போல் சர் விர் என்று சீறும் கார்களி ல்லை. கட் அவுட் இல்லை. காசு கொடுத்து வாக்கைப் பறிக்கும் களவாணித் தனமி ல்லை

மேலைநாடுகளுக்கிணையாக நாகரீகமான தேர்தலை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த தேசமே நின்று தலை வணங்கி கைத் தட்டி பாராட்ட‍க் கடமைப்பட்டிருக்கி றது.

கொள்கைக் கூட்ட‍ணி, கொள்ளைக் கூட்ட‍ணி, மதவாதம், மதமில்லா மித வாதம், மதமில்லா மிதவாதம் லட்சக் கூட்ட‍ணி, இலட்சியக் கூட்ட‍ணி என்று எப்ப‍டியெல்லாமோ கட்சிகள் வாக்கா ளனைக் குழப்பியபடி உள்ள‍ன• ஊட கங்கள் கருத்துக் கணிப்பு காட்சித் திணி ப்பு என்று மக்க‍ளின் சிந்தனையை சித றடிக்கின்றன•

இவற்றுக்கிடையில் நான் யாருக்கு வாக் களிப்ப‍து? என்று மாண்புமிகு வாக்கா ளர் குழம்பலாம் யாருமே சரியில்லை. எவருமே ஒழுங்கில்லை யாரை நான் தேர்ந்தெடுப்ப‍து? எனக் கோபமாய் கேட் கலாம்.

குடும்ப ஆட்சி, கூட்ட‍ணி ஆட்சி, வெளியி லிருந்து மிரட்டும் ஆதரவு, உள்ளி ருந்தே குடையும் ஆதரவு, இவற்றையெ ல்லாம் பார்த்து சலித்துவிட்டோம். பல கட்சிகளின் பதவி வெறி முகங்க ளையும் கறைபடிந்த கரங்களையும் நன்றாகவே கண்டுவிட்டோம்.

சரிவில்லாத பொருளாதாரம் நெருக்கடியில்லாத நிர்வாகம், நிதர்சனமான வெளிப்படையான ஆட்சி, வெளிநாடுகளோடு உரசலில்லாத உறவு, கறை படியாத கட்சியா ளர்கள் வலிமையான தலைமை, எளிமையான அணுகுமுறை, இவை யெல்லாந்தான் இந்தியா வின் இன்றை யத்தேவைகள்

இவற்றை யாரால் தர முடியும்? என்று கட்சி, ஜாதி, மதம், தனி நபர் பெருமை இவைகளைக் கடந்து நாம் யோசித்தால் நம் ஒவ்வொரு வாக்கும் தேசத்தின் செல்வாக்காய் மாறும். வாக்காளரின் எழுச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதை எல்லோருக்கும் உரத்த‍ சிந்தனையோடு ஒரு மித்த‍ குரலில் சொல்லி வைப் போம்.

விரல் நுனியில் காத்திருப்ப‍து வாக்கல்ல‍! – நம் வாழ்க்கை என்ற விழிப்புணர்வு விளக்கையேற்றி தேசத்தை ஒளிர வைப்போம்.

இந்த வைர, வைடூரிய வரிகளின் உரிமையாளர்

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

2 Comments

  • Everyone should come with a like mind to vote without accepting money from anyone. It’s our right. We are giving them chance to rule. Why we should receive money to vote. Instead tell them to do better if they won.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: