Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம் – ஓர் உளவியல் பார்வை!

உங்கள் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக்கொடு ப்து அவசியம் – ஓர் உளவியல் பார்வை!

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத் து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டி யது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை

காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை.

இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டு ம். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழ ந்தைகள் தானாக எதையுமே செய்யும் திறமை இல்லாதவர்களாக வளர்ந்து விடு வர். எதையுமே கண்டு கொள்ளாமல் தா னாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட் டால் எல்லாவற்றிற்கும் பயந்து கொள்பவ ர்களாக குழந்தைகள் வளர்வர். அதுவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்ப்பதில் திறமை இல்லாமல் வளர்வர்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கை யுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச் சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைக ளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகி றார்களோ அவர்களே வெற்றிக ரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. எனவே நம் குழந் தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம்.

சிக்கலைத் தீர்க்கும் திறன் ஒருநாளில் உருவாவதி ல்லை. வாழ்க்கையின் போக்கில் பல ஆண்டுகள் அனுபவத்தின் காரணமாகவே சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சியடைகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இது போன்று பத்து நாட்கள் பயிற் சி செய்தால் சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சி அடைந்து விடும் என்பது போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் விதமான பயிற்சிகள் உளவியலலில் எதுவுமே இல்லை. எதை க் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் மறைநிலையில் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும். பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க் க முனையும் போது குழந்தைகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தங் கள் பெற்றோர் எவ்வாறு பிரச்சனை களை அணுகுகிறார்கள், என்னெ ன்ன உத்திகளை பயன்படுத்துகிறா ர்கள், பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டால் என்ன செய்கிறார்கள். தே வைப்படும் போது உதவி கேட்டு பிறரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பன வற்றை குழந்தைகள் பார்த்தும், அரு கிலிருந்து கேட்டும் தெரிந்து கொள் வார்கள். இது அவர்கள் படிக்கும் செய ல்முறைப் பாடம். வளர வளர பல பிர ச்சனைகளை பெற்றோர் தீர்ப்பதைப் பார்க்கும் குழந்தைகள் ஒரு கட்டத்தி ல் வாழ்க்கையின் எல்லா பிரச்சனை களையும் எவ்வாறு தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆனால் பல பெற்றோர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குழந்தைகள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார் கள். பிரச்சனைகளினால் குழந்தைகளின் மனம் பாதிக்க்கப்படக் கூடாது என் ற எண்ணமே இதற்குக் காரணம். இவ்வாறு குழ ந்தைகளை பிர்ச்சனைக்குரிய சூழ்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்துவது அவர்கள் பிற்காலத் தில் பிரச்சனைகளைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலைக்கு அடிகோலும்.

ஒருசில குழந்தைகள் எவ்வளவு கற்றுக் கொண் டாலும் தனியாக ஒரு பிரச்ச னையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் தவிப்பிற்குள்ளாகிவிடுவர். அது போன்ற நிலை தங்கள் குழந்தைகளிடம் நிலவுவதாக பெற்றோர் நினைத்தால் அக்குழந் தைக்கு அருகிலேயே இருந்து பிரச்சனைகளை தீர்க்குமாறு தைரியம் அளிக்க வேண்டும். அச்சமயத்தில் எல்லா உதவிகளை யும், மனரீதியான ஆதரவினையும் அளிக்க வேண்டும். ஓரிரு முறை பெற் றோரின் உதவியோடு சிக்கலைத் தீர்ப்பதில் வெற்றி காணும் குழந்தை தன்னால் சிக்க லைத் தீர்த்து விட முடியும் என்ற மன தைரி யத்தை வளர்த்துக் கொள்ளும். விரைவிலே யே தனியாக பிரச்சனைகளை எதிர் கொள் ளும் திற மை அக்குழந்தையினிடம் தோ ன்றி விடும்.

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்ப டுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமை வாய் க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளு மையினர் பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமை ப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனை களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப் பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலா ம் என்று ஒன்றைத் தீர்த்து விட்டு அடு த்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில் லை. இவர்களிடம் அவசர காலத்தில் சிக்க லை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும் காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாக முடித்துவிட்டு அடு த்ததை எதிர்கொள்ள காத்தி ருக்கிறார்கள். பெற் றோர் முதலில் இத்தி றனை வளர்த்துக் கொண்டா ல் அது குழந்தைகளிடம் ஆளுமைப் பண்பாக உரு வெடுத்து விடும்.

குண்டுக் குழந்தைகளின் உடல் எடையைக் குறை க்க அவர்களை நடைப் பயிற்சி செய்ய வைக்க வே ண்டும். அதற்கு பெற்றோரும் குழந்தைகளுடன் நடக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சி செய் ய ஆரம்பித்த உடன் படிப் படியாக நடையைக் அதிகப் படுத்த வேண்டும். சோதனை ஒன்றில் பெற்றோர் ஒருநாளைக்கு 2000 எட்டுக்களும் குழந்தைகள் 1000 எட்டுக்களும் நடையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோ தனையில் எந்தெந்த பெற்றோர் 2000 எட்டுக் கள் நடையை அதிகப்படுத்தினார்களோ அவ ர்களின் குழந்தைகள் ஒருநாளைக்கு 2117 எட் டுக்கள் நடையை அதிகப்படுத்தி விரைவிலே யே தங்கள் எடையைக் குறைத்துக் கொண்ட னர். சுறுசுறுப்பான பெற்றோர்களால் சுறுசுறு ப்பான குழந்தைகளை உருவாக்க முடிந்தது.

எடைக்குறைப்பில் மட்டுமல்ல, சிக்கலைத் தீர்ப்பதிலும் அதுவே உண்மை. எப்போது வே ண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். எதி ர்பார்த்துக் காத்திருங்கள் உங்கள் குழந்தைக ளோடு!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

Leave a Reply to MNR Savitri Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: