Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத் தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுக ளை ஏற்படுத்திவிடும். உடல் எ டையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல்படி உணவுச்சத்து நிபுணரிடம்

ஆலோசனைப் பெற வேண்டும்.

செய்யக் கூடியவை

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப் பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றும் பிற சத் துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும்.

தண்ணீர் நிறைய குடிக்க வே ண்டும். எட்டிலிருந்து 9 க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் சக்தி யை மேன்படுத்தும். புத்துணர்வுடன் இருக் க நீர்ச்சத்து உடலில் சமன் நிலையில் இரு க்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இருபது நிமிடமாவது உடற்பயிற் சி செய்வது நல்லது. உடலை வலுவாகவு ம் ஃபிட்டாகவும் வைக்க பயிற்சி அவசியம். கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையி ல்லை. வாக்கிங், ஜாகிங் அல்லது ஸ்விம் மிங் செய்யலாம்.

செய்யக் கூடாதவை

கடைபிடிக்க முடியாத வகையில் டயட் இருக்க‌ வேண்டாம். எளிமையான டயட்டிங் (சத்துணவு, நல் ல உறக்கம், போதிய நீர்ச் சத்து, குறைவான சர்க்க ரை, ஜன்க் உணவுகளைத் தவிர்த்தல்) போதுமானது.

சிலர் டயட்டிங் என்று நி னைத்து குறைவாக சாப்பிடுவார்கள் . அப்படி செய்யக் கூடாது. உ ண்ணும் உணவின் அளவு முக்கியம். ரெட் மீட், போர்க், பீஃப் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

-ஹேமா மேனன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: