Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும்கூட அதன் உண் மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொ லைந்து விட்டன.

சொல்லப்போனால், சில சமயஞ்சார்ந்த சின்னங்களின் உண்மை யான

ர்த்தம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். உதாரணத்திற்கு சிலுவை என்பது கிறிஸ்துவ மத த்தினரின் புனித சின்னம் என்ப தை நாம் அறிவோம். ஆனால் உண்மையில் யூதர்கள் மற்றும் ஆரம்ப கால கிறிஸ்துவர்களை ரோமானியர்கள் துன்புறுத்திய தையே இந்த சிலுவை குறிக்கி றது.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

அதனால் மதங்களின் இவ் வகை புனித சின்னங்களில், சில நேரம் எஞ்சியிருக்கும் வரலாற்று சுவடுகளை நாம் அறியலாம். அதனால் அடை யாளவியல் புகழ் மற்றும் பொருள் விளக்கத்தால் தான் இயங்குகிறது. உதாரணத்தி ற்கு ஸ்வஸ்திகா என்பது ஹி ந்துக்களுக்கு அமைதியின் சின்னமாகும். இந்த குறியீட் டை பானைகளிலும் வீட்டு முகப்புகளிலும் வரைந்து இருப்பார்க ள். ஆனால் ஒரு யூதருக்கு இது மரணத்தையும் அழிவையும் குறி க்கும் ஹிட்லரின் நாஜி படையின் சின்னமாகும்.

ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமா ன தகவல்கள்!!!

சில நேரங்களில், பழைய புனித சின்னங்களின் வரலாறு அழுத்த மாக பதியப்படாததால் அவைகள் இப்போது புதிய அர்த்தங்களை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, நட்சத்திர சின்னம் பல காலமா க சாத்தானின் வழிபாட்டையும் மறைந்த கலைகளையும் குறித்து வந்தன. ஆனால் தற்போதைய ஆரா ய்ச்சியில், பேகன் மதத்தை குறிக்கும் ஒரு புனித பெண்ணின் கிரேக்க ரோ மானிய சின்னம் அது என்று காதோ லிக் சர்ச் ஒன்று கூறியுள்ளது.

சில பொதுவான சமயஞ்சார்ந்த சின் னங்கள் மற்றும் அதன் அர்த்தங்க ளை உங்களுக்காக நாங்கள் விவரி த்துள்ளோம்.

ஸ்வஸ்திகா

ஸ்வஸ்திகா என்பது அமைதி மற்றும் வளமையை குறிக்கும் ஒரு இந்து சின்னமாகும். அனைத்து வீட்டு முகப்புகளிலும் லக்ஷ்மி தேவி பொறிக்கப்பட்டுள்ள கலச பானைகளிலும் இந்த சின்னம் வரையப்படும்.

டேவிட் நட்சத்திரம்

புகழ் பெற்ற 6 முனை நட்சத்திர த்தை ‘டேவிட் நட்சத்திரம்’ என்று அழைப்பார்கள். இது இஸ்ரேல் கோடியில் உள்ள முத்திரையாகு ம். அதே போல் யூதர்களின் கல்ல றைகளை குறிக்கும். இதில் காணப்படும் கோடுகளின் பிணைப்பு டேவிட் மற்றும் பெஞ்சமினின் சேர்க்கையை குறிக்கும்.

திரிசூலம்

திரிசூலத்தை சமுத்திரத்தின் கடவுளான பொஸைடா ன் வைத்திருப்பதால் அது கிரேக்க-ரோமானிய சக்தி யின் சின்னமாக பார்க்கப்படுகிறது. ஹிந்து மதத்தில் அது சிவ பெருமானாக கருதப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தில் அதனை சாத்தானாக கருதுகின்றனர். அத னை “முள்கரண்டி” என்றும் அழைக்கின்றனர்.

சிலுவை

கிறிஸ்துவர்களின் புகழ் பெற்ற சின்னமாக விளங்கு கிறது சிலுவை. மனிதர்களின் பாவங்களை தன் இரத்தத்தால் அழித்த ஏசுவின் துன்பங்களை அது குறிக்கும்.

கன்தா (வாள்)

கன்தா என்பது சீக்கியர் களின் சமயஞ்சார்ந்த சின்னமாகும். அது சக்தி மற்றும் தூய்மையை குறிக்கும். கன்தாவில் கிர்பன் என்ற குறுக்காக உள்ள சிறிய கத்தி ஒன் று காணப்படும். இது அரசியல் ரீதியான சக்தி யை குறிக்கும். இரு முனை வாள் ஒன்றே கடவுள் மீதான நம்பிக்கையை குறிக்கும்.

நட்சத்திரம் மற்றும் பிறை

இஸ்லாமிய சின்னமான இது இப் போது முஸ்லிம் மக்களின் பொதுவா ன சின்னமாக மாறி விட்டது. இச்சி ன்னம் ஓட்டோமான் எம்பயர் கொடியை குறிக்கும்.

*

ஓம்

ஓம் என்ற இந்து சின்னம் அண்ட சராச ரத்தை குறிக்கும். உங்கள் ஆழ மனதில் இருந்து ஜெபிக்கப்படும் மந்திரமாக விளங்குகிறது இந்த சின்னம். இது இந்த அண்டத்தை உருவாக்கிய பிரம்மனை குறிக்கும்.

பெண்டாக்ராம் (6 முனை நட்சத்திரம்)

பெண்டாக்ராம் என்பது அடிப்படியில் வட்டத்தால் சூழப்பட்டுள்ள 6 முனை நட்சத்திரமாகும். இது புனித பெண்மணியை குறிக்கும் சினமாக இருந்தாலும் மறைமுக பழக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

*

மீன் அல்லது இச்தூஸ்

இச்தூஸ் அல்லது மீன் என்பது ஆரம்ப கால ஏசு கிறிஸ்துவின் சின்னமாகும். ஏசுநாதரின் 12 அசல் சீடர்களும் மீனவர்கள் என் பதுகூட அதற்கு ஒரு காரணமா க இருக்கலாம்.

மெனோராஹ்

மெனோராஹ் என்பது மெழுவர்த்தி ஸ்டாண்ட்போல் இருக்கும் யூதர்களி ன் சின்னமாகும். மெனோராவின் வடிவமைப்பை மோசஸ் அவர்களின் கனவில் கடவுள் தெளிவாக கூறியு ள்ளார்.

யின் மற்றும் யாங்

சீன சின்னமான இது இயற்கை சமநிலை யை எடுத்துக்காட்டும். ஆண்கள் மற்றும் பெண்களின் ஆற்றல் திறன்களாகவும் இது பார்க்கப்படுகிறது.

அஹிம்சை கை

ஜெயின் சின்னமான இது இந்தியாவில் பொ துவாக காணப்படும் ஒன்றாகும். பூரண அஹிம்சையின் மீது நம்பிக்கை கொண்டுள் ளனர் ஜெயின் மதத்தினர். நிறுத்தச் சொல்லு ம் செய்கையை கொண்டுள்ள இந்த சின்னம் வன்முறைக்கு எதிரான உறுதிமொழியாக பார்க்கப்படுகிறது.

அசோக் சி.ஆர்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: