Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!" – நடிகை ஸ்ரீதிவ்யா

ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே அன் ஆசை! – நடிகை ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொ டங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார்.

அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கா ன விருதினையும் பெறு வேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணைய த்திற்கு அவர் அளித்த பேட்டி…

* சினிமாவில் உங்களது பாலிஸி என்ன?

சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின்

வெற்றியைப்பொறுத்து பாதை மாறும். அந்த வகையில், நான் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர், 6 படங்களில் கதா நாய கியாக நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன்.

அதனால் என்னிடம் நிதானம் உண்டு. குறைவான படங்களென் றாலும் நல்ல கதைகளை மட்டுமே ஓ.கே செய்து வரு கிறேன். மேலும், கதைக்காக என்னை முழுசாக மாற்றிக் கொ ள்வேன்.

அதேசமயம், படுகவர்ச்சியாக நடி த்து எனது இமேஜை கெடுத்துக் கொள்ள மாட்டேன். அந்த வகை யில், சக நடிகைகளுடன் நடிப்புப் போட்டியில் குதிப்பேன். ஆனால் கவர்ச்சிப்போட்டியில் ஒருபோது ம் இறங்க மாட்டேன்.

* வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்தபோதும் உங்கள் பெயரளவில் பெரிய பரபரப்பு இல்லையே?

அந்த படம் வந்த நேரத்தில் பேசப்பட்டேன். அதனால்தான் அதர்வா, ஜி.வி. பிரகாஷ்குமா ர், விஷ்ணு போன்ற நடிகர்க ளுடன் உடனடியாக நடிக்க கமிட்டானேன். அதோடு, சிவ கார்த்திகேயன் நடி க்கும் டா ணா படத்திலும் நடிக்கிறேன். அதனால் இந்த படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வரும்போது இன்னும் பேசப்படும் நடி கையாகி விடுவேன்.

* லட்சுமிமேனன் போன்ற குடும்ப நடிகைகளே உதட்டு முத்தக் காட்சி க்கு மாறி வருகிறார்களே. நீங்கள் எப்படி?

முத்தக்காட்சியில் நடிப்பதை கதையு ம், காட்சிகளும்தான் தீர்மானிக்கும். அதில் நடிப்பது அவரவர் விருப்பங்க ளைப் பொறுத்தது.

ஆனால், என்னைக்கேட்டால, உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்ப து பற்றி இப்போதுவரை எந்த ஐடியாவும் இல் லை. ஒருவேளை டைரக்டர்கள் இந் த கதைக்கு கண்டிப்பாக முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் வற் புறுத்தினால் அதன்பிறகு அதைப்பற்றி யோசி ப்பேன்.

*ஈட்டிபடத்தில் உங்களுக்கும், அதர்வாவுக்குமிடையே கெமிஸ் ட்ரி எப்படி?

அதர்வா ரொம்ப நல்ல நடிகர். படத்தில் நடிக்கும்போது மட் டுமின்றி மற்ற நேரங்களிலும் இயல்பாக பழகுவார். அவருட ன் நடிக்கச்சென்ற முதல் நாளி லேயே இரண்டு பேருமே நல்ல நட்பாகி விட்டோம்.

அதனால் அவருடன் நடிப்பது எளி தாக இருந்தது. அந்த படத்தில் நான் கல்லூரி பெண்ணாக நடித்துள்ளே ன். வருத்தப்படாத வாலி பர் சங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடி த்தவள் இந்த படத்தில் சிட்டிப்பெண் ணாக நடிக்கிறேன். அதனால் மாடர் ன் டிரஸ் அணிந்திருக்கிறேன். ஆ னாலும், அதில் கிளாமர் இருக்காது.

ரொம்ப டீசன்டாக வருகிறேன். இந்த படத்தில் காதல் காட்சிகளைப் பொ றுத்தவரை நானும், அதர்வாவும் சூப் பராக நடித்திருப்பதாக டோட்டல் யூ னிட்டே புகழாரம் சூட்டி வருகின்றனர். அதனால்,. எனக்கும், அதர் வாவுக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி உரு வாகியிருப்பதா க அறிகிறேன்.

*பென்சில் படத்துக்காக உடல் எடை யை குறைத்தீர்களாமே?

அதெல்லாம் இல்லை. ஜி.வி.பிரகாஷ் குமார் அந்த படத்துக்காக எடையை கு றைத்ததால், நானும் குறைத்தது போன் று செய்திகள் பரவி விட்டது. ஆனால் நான் நிஜத்திலும் பள்ளி மாணவி போன்றே இருப்ப தால் அப்படியே நடித்தேன்.

அதோடு சிறு வயதிலேயே தெலுங்கு படங்களில் நடிக் கத் தொடங்கி விட்ட எனக் கு, அந்த படத்தில் யூனிபார்ம் அணிந்து நடித்தது சந்தோச மாக இருந்தது. அதை நடிப்பு என்பதை மறந்து நிஜ பள்ளி மாணவியாகவே கருதி நடித் தேன்.

தனால் பென்சில் படத்தில் என து நடிப்பு ரொம்ப நேச்சுரலாக இரு க்கும். அதோடு அப்படம் திரைக்கு வரும்போது மாணவர்களின் உத டுகளில் எனது பெயர் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறே ன்.

*மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருப்பது எப்படி உள் ளது?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தி ல் நடித்தபோது எனக்கு சுத்தமாக தமி ழ் தெரியாது. அதனால் தமிழில் டயலா க் பேசி நடிக் க அவர் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். பல காட்சிகளில் நான் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு நடிப்பு பயற்சிகூட கொ டுத்தார்.

அந்த வகையில், அந்த படத்தில் எனது நடிப்புக்கு ஓரளவு நல்ல பெயர் கிடை த்தது என்றால் அதற்கு சிவகார்த்திகே யன் தான் கார ணம். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எனக்கு இன்னும் பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

*உங்கள் அழகை ரசிகர்கள் எப்படி யெல்லாம் வர்ணிக்கிறார்கள்?

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் எனது சிரிப்புக்கு நிறைய ரசிகர்க ள் உள்ளனர். என் சிரிப்பை பல பூக்களுடன் ஒப்பிட்டு விதவிதமாக வர்ணிக்கிறார்கள். இன் னும் சிலர் கண்களை வர்ணிக்கிறார்க ள். இன்னும் சிலர் என் அழகுக்கு மதிப் பெண்களை வாரி வழங்கி என்னை ஒரு தேவதை போன்றே குறிப்பிடுகிறார்கள்.

ஆக ரசிகர்களின் புகழ்ச்சி மழையில் நனைந்து திக்குமுக்காடிக் கொண்டிரு க்கிறேன். அதனால் நான் நடிக்கிற படங்களில் எப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேனோ அதே போல் அழகு தேவதையாக காட் சி கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அதனால் பா டல் காட்சிகளில் புதுமையான காஸ்டியூம்களில் என்னை வெ ளிப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறேன்.

* சினிமாவில் உங்களுக்கு போ ட்டியாக எந்தநடிகையை நினை க்கிறீர்கள்?

சினிமாவில் வெற்றி தோல்வி தான் நம்மை தீர்மானிக்கிறது. அதனால் நடிகைகளுடன் போட் டிபோட்டு எந்த பயனும் இல்லை . அதனால் நான் யாரையும் என க்கு போட்டியாக நினைப்பதே இ ல்லை. மேலும், நான் ஏற்றுக் கொள்ளும் கேரக்டர்களைதான் ஒன்றுக்கொன்று போட்டி மனப் பான்மையுடன் நடிக்கிறேன்.

அந்த வகையில் முந்தைய படத்தைவிட இந்த படம் இன்னும் நன் றாக இருக்க வேண்டும் என்ற மனநிலை யுடன் நடிக்கிறேன். அதனால்தானோ என்ன வோ படத்துக்குப்படம் என் நடிப்பு மெருகே றிக்கொண்டே வருவதாக சில டைரக்ட ர் கள் சொல் கிறார்கள்.

* உங்கள் கனவில் அடிக்கடி வந்து செல்லும் தமிழ் ஹீரோ யார்?


கனவில் எல்லாம் எந்த ஹீரோவும் வந்து செல்லவில்லை. நிஜத்தில்தான்  அஜீத், விஜ ய், சூர்யா என்று மாறி மாறி என் மனதில் வந்து செல்கின்றனர்.

காரணம், இவர்களுடனெல்லாம் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருப்பது தான். தற்போது சுசீந்திரன் போன்ற சிற ந்த டைரக்டர்களின படங்களில் நடிப்பதால் எனது நடிப்பு இன் னும் பேசப்படும் பட்சத்தில் வெகு விரைவிலேயே எனது விருப்ப ஹீரோக்களு டன் டூயட் பாடும் சந்தர்ப்பங்கள் கைகூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்ரீதிவ்யா.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: