Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்தி ரம்… இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ் வொரு பருவநிலைக் கும் அதற் குரிய நோய்கள் நம்மைத் தாக்கு ம். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான விய ர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச் சல் என பலவும் நம்மைத் தாக்கக்

காத்திருக்கின்றன. 
 
சின்னம்மை… பெரிய விளைவுகள்!  
 
ந்தக் கோடையில் சில நோய்க் கிருமிகள் அதிக ஆற்றலுடன் செய ல்படும். அவற்றில் முதன்மையான து, சிக்கன்பாக்ஸ் என்று சொ ல்லக்கூடிய சின்னம்மை. இதை உருவாக்கும் கிருமி, நம் உடலில் விரைவாக தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. கோடைகால த்தில் இன்னும் வீரியமாகச் செயலாற்றும். வெளியில் வேலை செய்பவர்களுக்கும், டூ வீலரில் அலைபவர்களுக்கும் எளிதில் தொற் றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியா க எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்தா லும் சின்னம்மை ஏற்படும். 
 
இதற்கான அறிகுறிகள்… அதிக ஜுரம், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்க ளில் சிறுசிறு கொப்புளங்கள். இந்த கொ ப்புளங்களைக் கிள்ளக்கூடாது. இவை, ஒரு வாரத்தில் தாமாகவே மறை ந்து விடும். முன்னோர் சொன் னபடி, வேப்பி லைகளை விரித்து அதன்மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப் பது, வேப்பங்கொழு ந்தை அரைத்துக் குடிப்பது போன்றவற்றை கடைபிடித்தால்… கொப்புளங்களால் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும். அதிகப்படியான போ அல்லது அதிக காய்ச்ச லோ இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல் ல வேண்டும். எண்ணெய் சேர் த்த உணவுகள், அசைவ  உணவு களுக்கு முற்றிலும் தடை போ டுங்கள். ஆவியில் வேகவை த்த காய்கறிகள், இயற்கையி லேயே குளிர்ச்சியான உணவு கள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிக மாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
கோடைக்கால சளி மற்றும் காய்ச்சல்! 
மற்ற பருவநாட்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து மாறு பட்டது, கோடை கால காய்ச்சல். இதை உருவாக்கும் வைரஸ்க ள், கோடையில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் மூலமாகவும், பக லில் அதிக வெப்பம், மாலையில் அதிக குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றத்தாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வியர்க்குரு, வேனல் கட்டிகளு க்கு கெட் அவுட்! 
 
உடம்பின் வெப்பநிலை அதிகரி ப்பதால், உடலில் உள்ள நீர்ச் சத்து, விரைவாகக் குறைந்து வற்றிவிடும். இதனால் உடலின் வெப்பநிலைஅதிகரித்து, அவை உடம்பில் வேனல் கட்டிகளையு ம் முகத்தில் பருக்களையும் ஏற் படுத்தும். இவை அதிக வலி தருவதாக இருக்கும். அளவில் சிறிய கட்டிகளாக இருந்தால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடு ம். சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால், மருத்துவரிடம் செல்ல வே ண்டும். இந்தக் கட்டிகளை கையால் தொடவோ… கிள்ளவோ கூடாது. இத ன் சீழ் மற்ற இடங்களில் பட்டால், அங் கேயும் கட்டிகள் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.
வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. ஆகையால், வியர்வையை உடம்பில் தங்க விடாத படி முகத்தை வெறும் நீரால் கழுவுவ து, உடம்பை ஈரமான துணியால் து டைத்துக் கொள்வது, தினமும் இரண் டு முறை குளிப்பது, வெளியில் செல்லும்போது வியர்க்குரு பவுட ர் போட்டுச் செல்வது… என்று பராமரிப்பதன்  மூலம் வியர்க்குரு விலிருந்து தப்பிக்கலாம். வியர் க்குரு வந்துவிட்டால், கையால் தொட்டு சொறியக்கூடாது. இரண்டு வேளை குளிப்பது, இயற்கையிலேயே குளிர்ச்சியா ன உணவுகளை எடுத்துக்கொ ள்வது, அரிக்கும் இடங்களில் அதற்கான பவுடர் போடுவது ஆகியவற்றை மேற்கொண் டால்… வந்த வேகத்தில் அவை மறைந்துவிடும்.
வியர்வை காரணமாக வரும் ஜல தோஷம் பிடிப்பது வழக்கமே. குறிப் பாக, தலைப்பகுதியில் ஏற்படும் விய ர்வையின் ஈரம் காரணமாகவே இந் தத் தொல்லை. எனவே, வியர்வை யை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்
சருமப் பிரச்னைகள்! 
இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளால் சருமத்தில் வியர் வை தேங்கி… படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் (படர் தாமரை பரவும் இடங்களில் தோல் வீங்கி சிவப்பது) போன் ற பாதிப்புகள் உண்டாகும். அதி க தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை ம றைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகு திகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்கான க்ரீ ம்களை மருத்துவர் ஆலோச னையோடு தடவுவது ஆகியவ ற்றை மேற்கொண்டாலே… பிரச் னை தீர்ந்துவிடும்.

வெயில் காலத்தில் படுத்தி எடு க்கும் பிரச்னை… சூடுபிடித்தல். அடிவயிறு வலிப்பதுதான் சூடு பிடித்தலின் அறிகுறி. அப்படி வலித்தால், அடிவயிற்றில் தொப்பு ளை சுற்றி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தட வுவது, கூடுமானவரை குளிர்ச்சியா ன உணவுகளை எடுத்துக்கொள்வ து, தண்ணீர் அதிகம் அருந்துவது போன்றவற்றை கடைபிடித்து நிவார ணம் பெறலாம்’’.

”தண்ணீர், தண்ணீ ர், தண்ணீர். இதுதான் கோடை யில் உடம்புக்குத் தேவையான முக்கிய உண வும் மருந்தும். சாதா ரண நாட்க ளில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்றால், கோ டையில் 5 – 6 லிட்டர் தண்ணீர் உடம்புக்குத் தேவை ப்படும். இதை பின்பற் றினாலே, கோடைகால நோய்கள் பலவற் றையும் விரட்டிவிடலாம்.
S.R.M.மருத்துவமனையின் பொதுமருத்துவர் ஜோய் டேவிட் ஆண்டன்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: