கூடுதலாக வீட்டுக்கடன் பெற எளிய வழி!

கணவனும், மனைவியும் இ ணைந்து விண்ணப்பிக்கும் போது அவர்களால் கூடுதல் தொகையை மாதாந்திர தவ ணையாக செலுத்த முடியும் என்பதால் அதிக தொகையை வீட்டுக் கடனாக பெற முடியும். அதே சமயத்தில் செலுத்தும் அசல், வட்டி ஆகிய வற்றின்மீது இருவரும் தனித்தனியாக வரி தள்ளுபடிபெற முடியு ம்.
வருமான வரி சட்டத்தின்படி, கூட்டாக கடன் வாங்கும் அனைவருக்கும் வரி சலுகை கி டைக்கும். ஒருவரின் ஆண்டு வருமானத்தி ல் ரூ.1.5 லட்சம் வரை வீட்டுக்கடன் வரிச் சலுகை கிடைக்கும். கூட்டாக வீட்டுக் கடன் வாங்கும்போது கணவன், மனைவி இருவ ருக்கும் தலா ரூ.1.5 லட்சம் என ரூ.3 லட்சத்துக்கு வரி தள்ளுபடி கிடைக்கும்.
இந்த சலுகையைப் பெற வீட்டுக் கடன் பெறும் இருவரும் சொத்துக்கு உரிமை யாளர்களாக இருக்க வேண்டும். கூட் டாக வீட்டுக் கடன் வாங்கிய கணவன், மனைவி இருவரும் ரூ.2.40 லட்சம் வட்டியாகவும், ஸீ1 லட்சம் அசலாகவும் செலுத்தியிருந்தால், இருவருக்கும் வட்டியின் மீது 1.2 லட்சம் வரையும், அசலின் மீது ரூ.50 ஆயிர ம் வரையும் வரி தள்ளுபடி கிடைக் கும்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மனைவி ஏதாவது காரணத்துக்காக ஊதியம் ஈட்டவில்லை, கணவரே வீட்டுக்கட ன் தவணையை செலுத்துகிறார் எ ன்ற நிலையில், ”முழு தவணை தொகையையு ம் கணவர்தான் செலுத்தினார்” என்று மனைவியி டம் நூறு ரூபாய் முத்திரைத் தா ளில் எழுதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வா று செய்தால் அந்த ஆண்டு முழு வரிச் சலுகை யும் கணவருக்கு கிடைக்கும். கண வர் ஊதியம் ஈட்டவில்லை என்றா ல் மனை வியும் இதேபோல வரிச் சலுகை பெற முடியும்.
கோதரிகள், நண்பர்கள், திருமண மாகாத ஜோடிகள் ஆகியோர் இத் தகைய வரிச்சலுகையை பெற மு டியாது. மேலும் கூட்டாக வீட்டுக் கடன் வாங்குபவர்களின் எண்ணி க்கை 6க்கு மேல் இருந் தால் இந்த சலுகை கிடைக்காது. மொத்தத்தி ல் கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவது சிறந்த லாபம் தரக் கூடியது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!