Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்கியில் வாங்கிய கடனை அடைக்க‍ முடியாத சூழ்நிலையில் அக்கடனை அடைப்ப‍து எப்ப‍டி?

வங்கியில் வாங்கிய கடனை அ டைக்க‍ முடியாத சூழ்நிலையில் அக்கடனை அடைப்ப‍து எப்ப‍ டி? 

”கிணறு வெட்டவும், நிலச் சீர்த்தி ருத்தம் செய்யவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற்றேன். கிணறு வெட்டி யபோது, நீர் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக விளை ச்சலும் சரியாககிடைக்கவில் லை. இதனால், கடன்கட்டமுடி யாத நிலையில் உள்ளேன். வங்கி அதிகாரிகள் கடனைத் திருப்பி ச்

செலுத்த நெருக்கடி கொடுக்கிறார்க ள். ஆனால், வாழவே வழியி ல்லாத நிலையில், கடனை எப்படி கட்டுவது ? இப்பிரச்னையில் இருந்து மீள வழி சொல்லுங்கள்?” 

– ஓம். நமச்சிவாயம், குளித்தலை.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங் கியின் முன்னாள் தலைமை அதிகா ரி எம். ராமச்சந்திரன்பதில் சொல்கி றார். 

”விவசாயக் கடன் பெற் று, இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு, வங்கி நினைத்தால் சில சலுகைகளை அளிக் க முடியும். கடன் பெற்ற வங்கியின் கிளை மேலாளரு க்கு, தங்களின் நிலை குறித்து விரிவாக விண்ணப்பம் எழுத வேண்டும். அதில், இப்போது உள்ள சூழ்நிலை யில் உடனே கடனைத் திரும்பச் செலுத்த முடியாது. ஆகவே, கடனைத் திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் , கடனுக்கான வட்டி முழுவ தையும் தள்ளுபடி செய்து உத வி செய்யுங்கள் என்று குறிப் பிடவும். இந்த   விண்ணப்பத் தின் நகலை, ‘மண்டல மேலா ளர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஒப்பணக்கார வீதி, கோயம்புத்தூர்-1’ என்ற முக வரிக்கும் அனுப்பி வைக்கவு ம். மண்டல மேலாளர், தங்க ளின் கோரிக்கை உண்மைதானா? என்று ஆய்வு செய்து, அதிகா ரிகள் மட்டத்தில் பரிந்துரை பெறுவார்.

நீங்கள் பெற்றுள்ள கடன் தொ கைக்கான வட்டியைத் தள்ளுப டி செய்யவும், தவணைக் காலத் தை நீட்டிக்கவும், மண்டல மே லாளருக்கு அதிகாரம் உண்டு. எனவே, உடனே விண்ணப்பத்து டன் கிளை மேலாளரை நேரில் சந்தியுங்கள். நிச்சயம் வங்கி அ திகாரிகள் உதவி செய்வார்கள். எக்காரணத்தைக் கொண்டும், வேறுவிதமான வழிமுறைகள் எதையும் தேட வேண்டாம்.”

Leave a Reply

%d bloggers like this: