Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – கொத்துக்கறி இட்லி

கொத்துக்கறி இட்லி

அசைவ பிரியர்கள் அனைவருக்கு ம் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வ கைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக் கூடியது இந்த கொத்துக்கறி இட்லி

தேவையானவை~

கொத்துக்கறி – தேவையா

ன அளவு
வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப்
தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியையும் போ ட்டு நன்றாக வதக்கவும்.

இந்த கலவையுடன் தே வையான அளவு தண்ணீர் விட்டு சமைக் கவும், கொ த்துக்கறி நன்றாக வெந்த வுடன் அடுப்பிலிருந்து இற க்கி கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனி யே வைக்க வும்.

இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக்கறி கலவை யை அதன்மீது போடவும். பின்னர் இந்த கொத்துக்கறி கலவை மீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் (மாவை ஊற்றும் போது கொத்துக்கறி மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக் கொள்ளவும்)

இந்த இட்லிகளை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக்கறி இட்லி தயார். இட்லியையும், கொத்துக்கறியையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும்போது சுவை அதிகமாக இருக்கும்.

~~~~ வெப்துனியா

Leave a Reply

%d bloggers like this: