Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன வேற்றுமையைப் போக்கி கணவன் – மனைவியை இணைத்து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்

மன வேற்றுமையைப் போக்கி கணவன் – மனைவியை இணைத் து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்

நல்ல வெயில்… சோர்வாக நடந்து வந்து கொ ண்டிருந்தாள் கர்ப் பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது. சோலைக ளும், பயிர்ப்பச்சைகளும் நிறைந்திருந்த போ தும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில் லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிரு ந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணி னார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வ ளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப்பெருமான் ‘குலை வணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை.

இனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவ னை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின்

கயிலாயக் காட்சி கண்க ளுக்கு விருந்து! ஈசன் ச ன்னிதியின் வலப்பக்கம் ஐயனின் பிள்ளைகளான துவார விநாயகர், ஆறு முகன், பூர்ணா புஷ்கலா சமேத அய்யனாரை வண ங்குகிறோம்.

கர்ப்பக்கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுறக் காட்சி தருகிறார் தயாநிதீஸ் வரர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டு மின்றி, தன்னை வணங்கிய ஒருசிட்டுக்குருவிக்கும்கூட அருள் செய் த இவ்விறைவன் ‘சிட்டுலிங்கேஸ்வரர்’ என்றும் போற்றப்படு கிறார். ஆலய விமானத்தில் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய காட்சியும், சிட்டுக்குருவி, வா லி மற்றும் அனுமன் பூஜித்த காட்சிகளு ம் அழகுற வடிக்கப்பட்டுள்ளன!

ஹனுமன் வழிபட்ட ஐந்து சிவாலயங்க ளில் இதுவும் ஒன்று. கர்ப்பக்கிரகத்துக் கு முன்புள்ள மண்டபத்தில் ஹனுமன் இப்பெருமானை பூஜிக்கும் காட்சி அமை ந்துள்ளது. இந்த ஹனுமனிடம் வேண்டி க் கொண்டு ஒரு மட்டைத்தேங் காயைக் கட்டவேண்டும். காரியம் நடந்ததும் அந் தக் காயை அவிழ்த்துவிட்டு, ஹனுமனு க்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டு ம்.

சுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எட்டு சீடர்களுடன் மோன நிலையில் காட் சி தருகிறார். குருபலம் வேண்டுவோர் இச் சன்னி தியில்வேண்டிக்கொண்டால் உடன் நிறைவேறும். படிப்பு, நல்ல வேலை வே ண்டுவோர் இங்கு வழிபட்டு பலன் பெறலா ம்.

கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். சிவ னும், சக்தியும் இணைந் து, முறுவல் பூத்த முகத்துடன்… அய்யன் வலக்கையில் மழு வும், அம்மையின் இடக்கையில் மலரும் ஏந்தி நளினத்துடன் காட்சி தருகின்றனர். இவரை வணங்குவோரின் இல்லறம், நல் லறமாக விளங்கும். மன வேற்றுமை, வி வாகரத்து இவற்றைப் போக்கி கணவன் – மனைவியை இணைத்து வைக்கிறார் இந் தப் பெருமான்.

இதற்கென பிரத்யேக பூஜை முறை உண்டு. அமாவாசைக்கு அடு த்து வரும் பிரதமை, ரோகிணி நட்சத்தி ரம், மாத சிவராத்திரி நாட்களில் ஒரு வெள்ளை நிற ரவிக்கை துணியையும், ஒரு மஞ்சள் நிற ரவிக்கை துணியையு ம் இணைத்துத் தைத்து சமர்ப்பிக்க வே ண்டும். அர்த்தநாரீஸ்வரருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம், அர்ச்சனை செ ய்து, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய் தால், பிரிவு நீங்கி இருவரும் மனமொத் து வாழ்வர். இது கண்கூடாகப் பலர் வாழ்விலும் நடந்துள்ளதாக பக்தர்கள் அனுபவம்.

ஆலயத்தைச் சுற்றி வரும்போது, வள்ளி, தெய்வானை சமேத மு ருகன், கயிலாய லிங்கம், கஜலக்ஷ்மி, அஷ்டபுஜங்க ளுடன் காட்சி தரும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை என தரிசிக்கிறோம். ஐந்து வெ ள்ளிக் கிழமைகள் தொட ர்ந்து ராகுகாலத்தில் இந் த துர்கைக்கு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற் ற, தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பெண்கள் தாலி பாக்கி யம் பெறுவர்.

இங்கு அமைந்துள்ள நடராஜர் சபை கல்லினால் ஆனது. சனி பகவான் இங்கு திருநள்ளாறு போன்று தனியாகக் காட்சி தரு கிறார். அவருக்கு எதிரில் கஜ லக்ஷ்மி சன்னிதி இருப்பதால் பொங்கு சனியாகவும் போற்றப் படுகிறார். தவிர, காலபைரவர், சூரியன், நாகர், அப்பர், நாவுக்க ரசர், சுந்தரர், செட்டிப்பெண்ணி ன் சிலை ஆகிய வையும் உள்ளன.

வெளியில் வந்ததும் இடப்பக்கம் ஜடாமகுட நாயகியின் சன்னிதி. உயர்ந்த ஜடைகளால் ஆன கொண்டை அணிந்தவளாதலா ல் ஜடாமகுட நாயகி, அழகு ச டைமுடியம்மை என்று திருநா மம். சன்னிதிக்கு வலப்புறம் வெளியில் கரம் பின்னமான அம்பிகை சிலை நிறுவப்பட்டு ள்ளது. அம்மனின் கை பின்ன மாகியதால் அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு, வேறு பு திய சிலை நிறுவப்பட்ட தாகவும், அச்சமயம் அம்மன் ஒருவர் கன வில் வந்து தன்னையும் பூஜி க்கும்படி கூறியதால் பின்னப் பட்ட சிலைக்கும் வழிபாடு ந டக்கிறது. உயர்ந்த கொண் டையுடன் நான் கு கரங்கள் கொண்டு, கீழிரண்டு கரங்க ள் அபய, வரத ஹஸ்தங்களா கக் கொண்டு அழகு தேவதை யாகக் காட்சி தரும் அம்மன் கண்களின் தீட்சண்யமும், கருணா கடாட்சமும் நம்மை நகர விடாமல் செய்கிறது.

பல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த புனிதமான தலம் இது. சத்ரபதி சிவாஜி பரம்பரையி னர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர் களுக்கு ஓர் ஆண் சந்ததி யை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. இதற்காக, பௌர்ணமி நாட்களில் செய் யப்படும் முளைப்பயிறு பிரார்த்தனையி னால் பயன்பெற்றோர் பலர். பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் முளை வந்த பச்சைப் பயிறை அம்மன் வயிற்றி ல் கட் டி, 5,7,9 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சளை திருமா ங்கல்யக் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செ ய்ய வேண்டும். மறுநாள் காலை ஆலயத்துக்குச் சென்று அம்மன் மடி யிலிருந்து எடுத்து அர்ச்சகர் கொடுக்கும் முளைப்பயிறைத் தானும் சாப்பிட்டு, மற் றவருக்கும் விநியோக ம் செய்ய வேண்டும். ம ஞ்சளை தினமும் தேய் த்துக் குளிக்க வேண்டு ம்.

இதுபோன்று ஐந்து பௌர்ணமிகள் தொட ர்ந்து செய்ய, விரைவி ல் புத்திர பாக்கியம் கிட்டும். கடைசி பௌர்ணமி அன்று நேரில் வந்து பிரார்த்தனையை பூர்த்தி செய்து, அம்மனு க்கு அபிஷேகம், அர்ச்ச னையோடு சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனை மஞ்சளை தேய்த்துக்குளித்தால் மி க விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.

தல விருட்சம் தென்னை. விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னிதியில் வைத்து வழிப ட்டு அதிக மகசூல் பெறுகின் றனர். ஆனி பௌர்ணமியில் ‘முப்பழ விழா’, ஆடிப்பூரத்தி ல் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோத்ச வமாக பங்குனி உத்திரத் திருவிழா, நவராத்திரி… என் று வருடம் முழுவதும் உத்ச வங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண்கொள்ளாக் காட்சி!

– ராதா

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: