Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸ் அடிமைத் தனமும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளும்

செக்ஸ் அடிமைத் தனமும் அதிலிருந்து மீள்வதற்கான வழி முறைகளும்

குடி போதை மயக்கத்தை அனுப வித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப்பற்றியே சிந்திப்பது போ ல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத் தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்தவேலைகளைக்கூட

செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக் கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதி கரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்ப ட்ட பெண்களுடன் உறவு கொள்ளுத ல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள் ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதை க் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடு களைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

*அடிக்கடி சுய இன்பம் காணுதல்

*பல்வேறு உறவுகள்

*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

*எக்ஸிபிஸனிசம் எனப்ப டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

*செக்ஸ் துன்புறுத்தல்

*கற்பழித்தல்

*அதிக பார்ட்னர்களை வி ரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டிய து அவசியம். இல்லையெனி ல் உடல் நலம், பணம், சமு தாயச் சிக்கல் ஏற்படுவது மட் டுமின்றி, காவல்துறை நடவ டிக்கையிலும் சிக்கிக்கொள் ள நேரிடலாம். அதனால் குடு ம்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போ கலாம். தம்பதிகளுக்குள் இ ருவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடி யது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடு ப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல் லது இல்லாத நிலையும், சிலரு க்கு மிக அதிகமாகவும் இருக் கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சே ட்டிரி யாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இரு ந்தால் நிம்போமேனியா (nymp homania) என்று சொல்லுவார் கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயி னும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவ ரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூ டாது, செக்ஸில் தவறான அணுகு முறையை க் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்த னையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச் சை அளிக்க வேண்டும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: