Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன? – தெரிந்துகொள்ளுங்கள்

தங்க நகை வாங்கும் போது அவசியம் கவனிக் க வேண்டியவை என் னென்ன? – தெரிந்துகொ ள்ளுங்கள்

1. ஹால்மார்க் நகைக ள்!

நீங்கள் வாங்கும் நகைக ள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வா ங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என

விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத் திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால் மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகை களை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

2.கல் நகைகள்!

தங்க நகைகளை வாங்கும் போது கல் வைத்த நகைக ளை வாங்குகிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள் ளன, அதற்கான விலை எவ் வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் வி லை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்கா லத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும் போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு கு றைத்தே கணக்கிடப்படும். ஆக வே, கல் நகைகளை வாங்கும் போது கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம்.

3. டிசைன்!

சிலர் நகை வாங்கவேண்டும் எ ன்றதுமே நல்ல டிசைனாக இரு க்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகு ம், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசை னுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார் த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க ந ன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவி லான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கு ம். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டு மே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிரா முக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.

4.தரம்!

நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவ து முக்கியம். அதோடு ஒவ் வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எ னப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என் றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போ து தரச் சான்றி தழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண் டும்.

5.சேதாரம்!

சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்ப தை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் கு ழப்பமான பல கணக்குகள் இருப்ப தால், உஷாராக இருப்பது அவசிய ம்!

தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத் தையும் கவனத்தில் கொள்ளலாமே!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: