Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் கவனத்திற்கு . . .! – சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி?

பெண்கள் கவனத்திற்கு . . – சபல புத்தி உடைய ஆண் களை சமாளிப்பது எப்படி ?

பணி இடத்தில் அனைவ ரும் பெண்களிடம் கண் ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொ ண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து

கொள்ள வேண்டும். அவர் மே லதிகாரியாக இருந்து தொலை த்தால் அதிக சங்கடம். என்றா லும்கூட சில உத்திகளைக் க டைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்து விடலாம்.

சக ஆண் ஊழியர்கள் தொடக்க த்தில் நல்ல மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அது வரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.

உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்க லாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் கு டும்பமும், வரு ங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனா ல் இதையெல்லாம் உங்கள் மேலதிகா ரியிடம் சொல்லாதீர்கள். ‘நாம் கொஞ்ச ம் அத்துமீறினாலும் இந்த வேலை இவ ளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்து ப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள் )’ என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?

சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்ப டுத்தினால் ‘நான் இருக்கிறேன் உனக்கு. கவ லைப்படாதே’ என்கிற போர்வையில் மேல திகாரி எல்லை மீறப் பார்க்கலாம்.

உடைவிஷயத்தில் சுயசிந்த னை இருப்பதில் தவ றில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆ டை விஷயத் தில் கவனம் தேவை. அதே சமயம் உடை யைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல்மொழி. துணிச்சலா ன பெண்களிடம் வாலாட் டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல் லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக் கு எளிது.

பலரும் காரில் செல்லும்போது ஒன் றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒ ருவர் இருக்கிறார் என்பதை மறந்து விட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல் லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோ ல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வா ய்ப்பு உண்டு என் பதை மறக்க வேண்டாம்.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங் களுக்குத் தனி சலுகை எதை யாவது அளித்தால், அதை உ றுதியுடன் மறுத்துவிடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீ ட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீ ர்களா? வாங்கிக் கொள் ளுங்கள். உடனடியாக உங் கள் துறையி லிருக்கும் பி றரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

சக ஆண் ஊழியர்கள் ‘அட ல்ட்ஸ் ஒன்லி’ ஜோக்குக ள் அடித்தால், உடனே உங் கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங் களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்து கொ ள்ளாமல் இரு ப்பது. ‘இவ்வளவு தாராளமா க இருப்பவள், பிறவற் றிலும் தாராளமாக இருப்பாள்’ என்ற எண்ணம் எழலாம்.

சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளு ங்கள். சபல ஆண் பணியாள ர்களை எதிர்க்க இது உதவு ம். உங்கள் முழு நம்பிக்கை யைப் பெற்ற சக ஊழியர்க ளும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீ ர்கள்.

உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்து விட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிட வோ , தவறான கண்ணோட்டத் தில் அணுகவோ முயற்சிக்க மா ட்டார் கள். ‘ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடு வோம்’ என்ற எண்ணமேகூட சில தவ றான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: