Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பதன் இரகசியம்

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? கருங்கல்லில் சிலை வடிப் பதன் இரகசியம். ஆகம வி திகளின்படி கருங்கல்லா ல் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர மு றைப்படி யந்திர ஸ்தாபன ம் செய்து, தெய்வ உருவங் களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக

பூஜை செய்து வரும் கோ வில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளை யில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச்செல்வதை அ னுபவ பூர்வமாக பலர் உ ணரலாம். ஆகவே தான், பெரும் பாலும் சிலைக ளை  கருங்கல்லில் வடிவ மைக்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உ லோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்க ள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையு டையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோக த்திலும் வெளிப் படுவது இல்லை. 

நீர்:

கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தன து இயல்பான குளிர்ந்த நிலையிலிருந் து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலா ம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலா ம்.

நிலம்:

பஞ்சபூதங்களில் தத்துவங்க ளில் ஒன்றான நிலம் கல்லி ல் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வள ர்கின்றன. 

நெருப்பு:

கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப் பொறி பறக்கி றதே சான்று.

காற்று:

கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரைகூட உயிர்வாழ்கிறது. 

ஆகாயம்:

ஆகாயத்தைப் போல், வெளியிலிருக் கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. 

எனவே தான், கருங்கல்லில் கட்டப் பட்டகோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிற து. திருவையாறு ஐயாரப்பன் கோ விலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்ப தை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களி னால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்)  வடி வில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோ ம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் மு றைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.அக்கோ விலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன. இது வே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: