Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (04/05/14): அக்காவின் கணவர், தந்தைக்கு சமம் என்பதை, யாரும் உனக்கு கற்றுத் தரவில்லையா?

அன்புள்ள அம்மாவுக்கு,— 

எனக்கு இரண்டு சகோதரிகள்; நான்தான் கடைசி. என் மூத்த அக்காவின் கணவ ரை விரு ம்புகிறேன். அவர், ஏற்கனவே பல பெண்களை காதலித்தவர் என்று, அக்கா கூறியுள்ளார். நானும், அவரது வலையில் விழுந்து விட்டேன்.

இதற்கிடையில், என் இரண்டாவது அக் காவை மயக்கி, எப்படியோ தன் ஆசைக் கு இணங்க வைத்து விட்டார். அவள் இப்போது, மன நிம்மதி இன்றி, நடைபிணமாக

வாழ்ந்து வருகிறாள்.

மாமா சிறுவயதில் இருந்தே, எங்கள் வீட்டில்தான் வளர்ந்து வந் தார். பார்ப்பதற்கு, அழகாக, கம்பீரமாக இருப்பார். என் மாமாவுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று நினை த்தாலும், அவர் எப்படியாவ து பேசி, என் உறுதியை குலைத்து விடுகிறார். அவரி டம் என்னை பலமுறை இழ ந்திருக்கிறேன். என் படிப்பி ற்கான செலவை, அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

னநிம்மதி இன்றி தத்தளித்து வருகி றேன். என் மாமாவிடம் இருந்து விடுப டுவது எப்படி? எனக்கு நிம்மதி கிடைக் குமா, இனி வாழ்க்கை எனக்குண்டா அல்லது சாவு தான் வழியா… நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.

— உங்கள் மகள்

அன்புள்ள மகளுக்கு —

உன் நிலை, எனக்கு புரிகிறது. உன் மாமாதான் பிரச்னை என்ப தை, நீயே தெளிவாக குறிப் பிட்டிருக்கிறாய். பின், ஏன் அவரைப்பற்றி உயர்வாகதுதி பாடுகிறாய்? எங்கோ இடிக் கிறதே… 

பல பெண்களை காதலித்தி ருக்கிறார்… இரண்டாவது அ க்காவை யும் கெடுத்திருக்கி றார் போன்ற, ‘சிறப்பு தகுதிக ளை’ பெற்ற, உன் மாமாவை, நீயும் காதலிக்கிறாய்; அவருடன் எல்லை மீறி பழகியும் இருக்கி றாய். அந்த நபர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்து ம், அவரை நீ முழுமையாக ஏற்றுக் கொண்டிரு க்கிறாய். உன் பிரச்னை எங்கு ஆரம் பமாகிறது என்று, உன்னால் உணர முடிகிறதா?

சிறுவயதிலிருந்து உன் வீட்டில் வள ர்ந்தார் என்பதற்காக, அக்கா வின் கணவரான பின்பும், நீ, அவரிடம் முறை தவறி நடந்து கொ ண்டது சரியா? அக்காவின் கணவர், தந்தை க்கு சமம் என்பதை, உன் வீட்டில் யா ரும் உனக்கு கற்றுத் தரவில்லை யா?

இந்த விஷயம் உன் அக்காவிற்கு தெரிந்தால், அவர் மனம், என்ன பாடுபடும் என்று, நினைத்துப் பார்த்தாயா?

நிம்மதியாக வாழ என்ன வழி…’ என்று, கேட்டிருக்கிறாய். நம் நிம்மதி, நமக்கு ள் தான் இருக்கிறது என்ற எதார்த்தமா ன உண்மை யை தெரிந்து கொள்.

தூய சிந்தனைகள், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணங்கள், செய்த தவறை ஒப்புக் கொள்வது, தவறை மன்னிக்கும் குணங்கள்… இத்தகைய குணங்கள் தா ன், நமக்கு நிம்மதி கிடைக்க வழி செய் யும்.

இதுவரை, உன் மாமாவின் செயல் களுக்கு, உடந்தையாக இருந்ததை மறந்து விடு என்று கூற மாட்டேன். சி றிது சிறிதாக மனதை கட்டுப்படுத்தி, அந்த அசிங்கத்திலிருந்து வெளியில் வர முயற்சிசெய். ‘பாவம் செய்துவிட் டேன்’ என்ற குற்ற உணர்வில், மனது க்குள் மறுகுவதை விட, அதிலிருந்து மீண்டு, இனிமேல் எப்படி வாழ வே ண்டும் என்பதை திட்டமிடு; உனக்கு நிம்மதி கிடைக்கும்.

உன் மாமாவிடம் சட்டென்று உறவை முறித்துக் கொள்ள முயலா தே! அது, சந்தேகத்தை எழுப்பும். இனிமேல், நீ கிடைக்கப்போவது இல்லை என, தெரிய வரும்போது, அவரிடம் பழி வாங்கும் எண்ணம் வர லாம். சூழ்நிலையைப்புரிந்து, புத்தி சாலி பெண்ணாக நடந்துகொ ள்.

அன்பு, பாசம், அக்கறை போன்ற வைகளை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அவைகளை மற்றவர்களுக்கு வழ ங்கினால், உனக்கும் அது திரும்ப கிடைக்கும்.

செய்த தவறை உணர்ந்த காரணத் தால், அவைகளை களைய முயற்சி செய்வது நல்லது. புதிய வாழ்க்கை நிச்சயம் பிறக்கும். சுயதொழில் ஏ தேனும் ஒன்றை கற்று, உன் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்; சுய ஒழுக்கத்தையும், தன்னம்பி க்கையையும் வளர்த்துக் கொ ள். இதனால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும்.

இப்படிதான் வாழ வேண்டும் என்ற உறுதி உனக்குள் ஏற்படு ம்போது, வாழ்க்கையை முடித் துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாய் எழாது.

கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதி ர் நீச்சல் போடத் தெரியாதவர்க ள், தன்னம்பிக்கை அற்றவர்கள் தான், வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பர். நீ அப்படிப் பட்ட பெண் இல்லை.

வாழ்க்கை என்பது பகிர்ந்து, அ னுபவித்து வாழத்தான். எனவே, முழுமையாக வாழக்கற்றுக் கொள். குன்றின்மேல் இட்ட விள க்கு பிரகாசமாக எரிந்து, மற்றவ ர்களுக்கு வழிகாட்டுவதுபோல உன் வாழ்வு, பிரகாசமாக, அர்த்த முள்ளதாக இருக்க, என் வாழ்த்துக ள்.

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: