Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயர் ரத்த‍ அழுத்த‍த்தினால் ஏற்படும் பாதிப்புக்களும் – அதைத் தடுக்கும் எளிய வழிமுறைகளும்

உயர் ரத்த‍ அழுத்த‍த்தினால் ஏற்படும் பாதிப்புக்களும் – அதைத் தடுக்கும் எளிய வழிமுறை களும்

நீங்களோ, உங்கள் குடும்ப நபரோ உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகி உள்ளீர் களா? இது உங்களுக்கு மன உளைச்சலை கொடுக்கின் றதா? இதனை முறையாக கவனிக்காவிடில் சத்தமே இல்லாமல் ஆளையே கொன்றுவிடும் என்ற உண்மை அதிக பயத்தினை

கொடுக்கின்றதா? முதலில் கவலை யை விடுங்கள்.

எளிதாக தப்பித்துவிடலாம். உங்களை ச் சுற்றி எந்த இடத்திலும் மூன்று நபரு க்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு உடைய வராகத்தான் இருக்கின்றார். இது உல கெங்கிலும் உள்ள ஆய்வு. சொல்லப் போனால், 30 வயதினை அடையும் முன்பே 20-25 சதவீத மக்கள் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர்.

மூட்டு வலி, முதுகுவலி போல், முத லி ல் எந்த அறிகுறியும் பலருக்கு ரத்தக் கொதிப்பு காட்டுவது இல் லை. அநேகருக்கு பல காலம் ரத்தக் கொதிப்பு இருந்தும், நலமோடு இருப்ப து போலவே இருப்பர். மாரடை ப்பு (அ) பக்கவாதம் போன்ற பாதிப்புகள் திடீ ரென ஏற்படும்போதே ரத்தக் கொதிப்பு பாதிப்பு தெரியவரும்.

இதன் காரணமே நன்றாக இருக்கிறே ன் என்று சொல்லும் ஒருவரையும், ம ருத்துவர் சில அடிப்படை மருத்துவ பரி சோதனைகளை செய்துக் கொள்ள சொல்கின்றனர். ஒரு 35 வய து மனிதன் சரியான ரத்த அழுத்த நி லையில் வாழும்போது அவன் ஆயுள் சுமார் 75 வயது செல்ல முடியும்.

இளவயதிலேயே ரத்தக் கொதி ப்பு எனும்போது அவன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் குறைந்து விடுகின்றது. ரத்தக் கொதிப்பி ற்கும், சர்க்கரை நோய்க்கும் நிரந்தர தீர்வு என்பது இல்லை. நல்ல கட்டுப்பாட்டிற்குள் வைத் திருக்க முடியும்.

40-50 வருடங்கள் முன்பு வரை ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் என்றால், மருத்துவர்கள் அ வர்களை டென்ஷன் உள்ள வேலை, கடும் உழைப்புள் ள வேலை இவைகளிலிரு ந்து கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல் வார்கள்.

ஆனால், இன்று நிலைமை வேறு. மிக நல்ல மருந்துகள் ஒருவரின் வாழ்க்கை நிலைமையி னை காப்பாற்றி விடுகின்றன. ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு அபாயம் உள்ளதினை அவ ர்களே தெரிந்துக் கொள்ளு ம் சில அறிகுறிகள்:

* எதிலும் அதிக ஆர்வமின் மை.

* அதிக எடை.

* ரத்த உறவுகளில் யாருக் கேனும் இந்த பாதிப்பு இருப் பது.

* 35+

* மாதவிடாய் நின்ற பெண் மணிகள்.

* புகை, மது பழக்கம் உடை யவர்.

* கருத்தடை மாத்திரை எடு த்துக்கொள்ளும் பெண்கள்.

* உடல் உழைப்பு இல்லா தோர்.

பல வருடங்களுக்கு முன்னால் சிறுவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தக் கொதிப்பு அவர்களின் இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு அல்லது வேறு நோய் கார ணத்தை ஒட்டியே இருக்க முடி யும் என மருத்துவ உலகம் நம்பியது. ஆனால், இன்று ஆய்வுகள் வளர்ந்த மனிதனைப் போல், குழந்தைகளுக் கும் ரத்தக்கொதிப்பு ஏற்படுவதினை யும் அதற்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதினையு ம் நிரூபணம் செய்துள்ளன.

ரத்தக் கொதிப்பினால் ஏற்படும் சில பொதுவான பாதிப்புகள்:

* மாரடைப்பு.

* பக்கவாதம்.

* கண் பாதிப்பு.

* சிறுநீரக பாதிப்பு.

* இறப்பு.

காலையில் எடுக்கப்ப டும் ரத்த அழுத்தத்தின் அளவே ஒருவரின் சரியான அளவாக இரு க்கும். மற்றபடி நடப்பது, குளிப்பது, தூக்கம் போன்ற இவற்றிற்குப் பிறகு எடுக்கப்படும் அளவுகளில் கண்டி ப்பாய் சற்று மாறுதல்கள் இருக்கும்.

எளிதாய் எப்படி தவிர்ப்பது:

* தினமும் சுறுசுறுப்பாகவே இரு ங்கள். இது உங்களுக்கு 20 முத ல் 50 சதவீதம் வரை பாதிப்பினை குறைத்துவிடும்.

* சிலருக்கு `உப்பு அணு’ இருக்கும். இவர்களுக்கு ஊறுகாய், அப் பளம் போன்ற உப்பு பண்டங்களை உட் கொள்ளும்போது ரத்த அழுத்தம் கூடும். அவர்களுக்கே உப்பினை குறைக்கும் போது ஆச்ச ரியப்படும் வகையில் ரத்த அழுத்தம் குறையும்.

பொதுவிலேயே ரத்தக் கொதிப்பு உள்ள வர்களுக்கு உப்பினை குறைக்குமாறு அறிவுரை செய்யப்படுகிறது. சோடியம் (உப்பு) சத்தினை குறைத்து, பொட்டாஷி யம் சத்தினை கூட்டும்போது ரத்தக் கொ திப்பு மிகவும் கட்டுப்படுகிறது. இதற்கு எளிய வழி அன்றாடம் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவதே.

*எதற்காக இப்படி அதிக எடையை சுமைப் போல் சுமந்துக் கொண்டு நடக் கின்றோம். உடனடி எடையை குறையு ங்கள். ரத்த அழு த்தம் சீர்படும். சுமார் 7 சதவீதம் எதிர்பாரா மரணங்கள் ரத்தக் கொ திப்பாலேயே ஏற்படுகின்றன.

* மனப்புழக்கம், அதிக நேர வேலை, கூட்டமான நகரம், நெரிச்சலான இடம், கவலை இவையெல் லாம் ரத்தக் கொதிப்பின் கூட் டாளிகள்.

* அதிக ரத்தக்கொதிப்பு கண் பார் வையினையும் இழக்கச் செய்து விடுகிறது.

* புகை, மது இவை சமுதாயத்தி ல் நீங்கும் காலத்தில் ரத்தக் கொ திப்பால் பாதிக்கப்படுபவரின் எ ண்ணிக்கை 50 சதவீதம் குறைந் துவிடும்.

* 45 சதவீதம் எடை கூடிய மக்களே ரத்தக் கொதிப்பு உடையவர்க ளாக இருக்கின்றார்கள் என்பதினை உணருங்கள். உப்பின் அளவு தினம் 3500 மில்லி கிராமிலிருந்து 1500 மில்லி கிராமாக குறைந் தால் 5 சதவீதம் மாரடைப்பால் இறப்பது குறையும்.

7 சதவீதம் பக்க வாதத்தினால் இறப்பது குறையும். சோடியம் குறைந்து, பொட் டாஷியம் கூடும் போது 8 சதவீதம் வரை பக்க வாத இறப்புகள் குறைகின்றன. 5 சதவீதம் வரை பல காரணங்க ளால் ஏற்படும் இறப்புகள் குறைகின்றன.

சோடியம் குறைந்து பொட்டாஷி யம் கூடி, தினமும் 1500 முதல் 1800 கலோரி சத்து உட்கொண்டு, எடையினையும் ஒரு 5 கிலோ வரை குறைத்தால் 10 சதவீதம் வரை மாரடைப்பு இறப்பு குறையு ம். 75 சதவீதம் வரை பல காரண ங்களால் ஏற்படும் இறப்பு குறை யும். 5 சதவீதம் வரை பக்கவாத இறப்பு குறையும்.

* ஆப்பிள், பேரிக்காய் போன்ற வயிறு இருந்தால், ரத்தக்கொதிப்பு ஓடிவந்து விடும்.

*ஆண்களுக்கு, பெண்களைவிட கூ டுதலாகவே மாரடைப்பு, பக்க வாத பாதிப்புகள் ஏற்படுகின்றன.

* இருதயத்திற்கு உடலிலுள்ள 5 லிட்டர் ரத்தம் (பம்ப் செய்ய) ஒரு நிமிடமும் சில நொடிகளுமே தேவைப்படுகின்றன. நாள் ஒன்று க்கு 7 ஆயிரம் லிட்டர் அதிக மான ரத்தத்தினை இருதயம் பம்ப் செய் கின்றது.

நொடிக்கு சுமார் 35-37 சென்டி மீட்டர் அளவு இருதயத்திலிருந் து பெரிய ரத்தக் குழாய் வழியா க வெளிப்படும் ரத்தம் சிறு சிறு ரத்த நாளங்களின் வழியாக நம் கை, கால் விரல்களை அடையு ம் போது 0.05 சென்டி மீட்டர் நீ ளமாக ஒரு நொடியில் செல்கி ன்றது.

* நீங்கள் சிறிதுநேரம் உட்கார்ந்து எழுந்தால் கூட `மூளைக்கு தெ ரியும் ரத்தம் கொஞ்சம் காலில் தங்கி விட்ட து. அதனை உடலின் ரத்த ஓட்டத்தில் கொண்டு வரவேண்டும்’ என்று. மார டைப்பு ஏற் படும்போது கீழ்கண்ட அறி குறிகள் தோன்றும்.

உடனடி மருத்துவ உதவி தேவை

* நெஞ்சில் இறுக்கம் (அ) வலி.

* தோள்பட்டை, தோள், கழுத்து என விரிவடையும். இது இடது பக்க மாக இருக்கும்.

* தலைசுற்றல், மயக்கம், அதிக வியர்வை, மூச்சு வாங்குதல், வாந்தி போன்றவை ஏற்படும். கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால், உ ங்கள் சிறுநீரகத்தினை உடனடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

* அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன் றும். குறிப்பாக, இரவில் அதிகமா க இருக்கும்.

* சிறுநீர் வெளிச்செல்வது கடினமாக இருக்கும்.

* கீழ் முதுகுவலி இருக்கும்.

* கண்ணின் கீழ், மற்றும் கை, கால்களில் வீக்கம் இருக்கும்.

*சிறுநீர் செல்லும்போது வலி, எரி ச்சல் இருக்கும். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால், பக்க வாத மருத்துவ பரிசோதனையை உடனடி செய்துக் கொள்ளுங்கள்.

* முகத்தில் மதமதப்பு, பலவீனம், தோள் அல்லது காலில் ஒரு பக்க மாக பலவீனம்.

* பேச்சு குழறுதல்.

* கண்பார்வை திடீரென குறைதல்.

* திடீரென தாங்கமுடியாத தலைவலி. மே ற்கூறிய அனைத்துமே அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: