Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதுமையில் ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும்! – மருத்துவர் V.S.நடராஜன்

முதுமையில் ஏற்படும் நோய்க ள் மற்றும் அதற்கான தீர்வுக ளைச் சொல்கிறார் முதியோர் நல மருத்துவர் VS.நடராஜன்.

வயதானவர்களுக்குபொதுவா க மூன்றுவிதமான தொல்லை கள் ஏற்படும். முதுமையின் வி ளைவாக உண்டாகும் கண்பு ரை, காது கேளாமை, கைகளி ல் நடுக்கம், தோல் நிறம் மாறு தல், மலச்சிக்கல் போன்றவை . அடுத்ததாக, நடுத்தர

வயதில் ஆரம்பித்த உயர் ரத்த அழுத்தம், நீரி ழிவு நோய், இதயத் தாக்குதல் போன்றவை முதுமையில் தொடர்கின்றன. இது தவிர உதறுவாதம் என்ற ‘பார்கின்சன்ஸ்’ நோய், மறதி, சிறுநீர் கசிவு, அடிக்கடி கீழே விழுதல், எலும்பு வலிமை இழத்தல் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வருகின்றன.

பொதுவாக முதுமையை பல நோய்களின் மேய்ச்சல் காடு என்பா ர்கள். சில நோய்கள் அறிகுறி இல்லாமல், மறைந்து காணப்ப டும். ஆனால், நோய்களால் ஏற் படும் தொல்லைகள் அதிகம் இருக்கும். உடல் பரிசோதனை யில்தான், பிரச்சினை என்ன வென்று தெரியவரும். அதனா ல், முதியவர்கள் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனைசெய்து கொ ள்ள வேண்டும். அப்போதுதான் மறைந்திருக்கும் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

மது அருந்துபவர்கள் திடீரென்று மதுவை நிறுத்தக்கூடாது. அப்ப டிச் செய்தால் நடுக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இயல்பாக முதுமை யில் வரும் நடுக்கத்தால் எவ்விதமா ன பாதிப்பும் இல்லை. நடுக்கத்தைப் போக்க மருந்து, மாத்திரைகள் உள்ள ன. அதே சமயம், நரம்பு சார்ந்த நோய் களால் ஏற்படும் உதறுவாதம் என்கிற ‘பார்கின்சன்ஸ்’ நடுக்கத்திற்கு கட்டா யம் சிகிச்சை பெற வேண் டும்.

இது ஏற்பட்டால் முதலில் கையில் நடுக்கம் ஆரம்பிக்கும். வே லை செய்யும்போது, தூங்கும்போது நடுக்கம் இருக்காது. நாள டைவில் உடல் தசைகள் இறுகி மர க்கட்டைபோல ஆகிவிடும். பொறு மையாக நடப்பார்கள். சட்டையைக் கூட போட முடியாது. பேச்சு சரியாக வராது. சாப்பிட முடியாது. ஆனால், மனநிலை நன்றாக இருக்கும். இவ ர்களது அனைத்து வேலைகளுக்கும் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டு ம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தா ல் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

எனவே, முதுமையில் உடல் நடுக்க ம் வந்த உடனே மருத்துவரிடம் சென் று அது இயல்பான நடுக்கமா அல்ல து உதறுவாதம் நடுக்கமா என்று ஆ லோசியுங்கள். நடுக்கத்தைப் போக் க மருந்துகள், பிசியோதெரபி சிகிச் சைகள் உள்ளன. நோய் முற்றிய நி லையில் இருப்பவர்களுக்கு அறு வை சிகிச்சை மூலமாகவும் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: