Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று!

இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக் குழாய்க்குள் தள்ளப் ப டுகிறது. அந்த அழுத்த மே ரத்தத்தை உடலெ ங்கும் பாய்ந்தோடச்  செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தா ல் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது  உண்டாகின்ற ‘சிஸ் டாலிக்’ அழு த்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டா லிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால்

முதலில்  தலை வலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வரும். பிற கு, இதயத்துக்கு ஆபத்து வரும்; சிறுநீரகம் கெட்டுவிடும்; பக்க வாதம் வந்துவிடும்.

ரத்த அழுத்தத்தை மிகச் சரியாக அளக்க ‘ஸ்பிக் மோமேனோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகி றது. 1881ல் வியன்னா வைச் சேர்ந்த சாமுவேல் வாட்  பாக்ஷ் இதைக் கண்டுபிடித்தார். ஆரம்ப த்தில் இது ஒரு சிறிய டிரங்குப் பெட்டி அளவுக்கு இருந்ததால் வெளி யி டங்களுக்கு எடுத்துச் சென்று  பயன்படுத்துவது என்பது சிரமமாக இருந்தது. 1896ல் இத்தா லிய மருத்துவர் ரிவா ரோக்கி இதை எளி மைப்படுத்தினார்.

இதில் ரத்த அழுத்தத்தைக் காண்பிக் கும் பாதரசக் குழாய், ரப்பர் பையை உள்ளடக்கிய துணிப்பட்டை, ரப்பர் பைக்குள் காற்றை நிரப்ப உதவும் ரப்பர்  பந்து, ரப்பர் குழாய் ஆகியவை உள்ளன. துணிப்பட்டையை புஜத்தில் கட்டி, ரப்பர் பந்தை அழுத்தி, ரப்பர் பைக்குள் காற்றைச் செலுத்தும்போ து,  கருவியில் பாதரசம் மே லேறும். அப்போது மருத்துவர் ஸ்டெதாஸ்கோ ப்பை முழங்கையி ன் முன்பக்கத்தில் வைத்து ரத்த ஓட்ட ஒலி களைக் கேட்பார். 

ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் அந்த ஒலிகள் கேட்காது. உட னே ரப்பர் பந்திலிருக்கும் வா ல்வைத் திறந்து, ரப்பர் பையிலி ருந்து காற்றை விடுவிப்பார்.  ஓரிடத்தில் ரத்த ஓட்ட ஒலிகள் மீண்டும் கேட்கத் தொடங்கும். அப்போது கருவி காட்டும் அளவு ‘சிஸ்டா லிக்’ அழுத்தம். காற்ற ழுத்தத்தைத் தொடர்ந்து குறைத்துக் கொ ண்டே வரும்போது, ஒரு அழுத்தத்தில் மீண்டும் ரத்த ஓட்ட ஒலிக ள் கேட்காது. இது ‘டயஸ்டாலிக்’ அழுத்தம். இப்படித்தான் ரத்த  அழுத்தம் அளக்கப்படுகிறது.

இப்போது டிஜிட்டல் ரத்த அழுத்தக் கருவி புழக்கத்தில் உள்ளது. இதை புஜம் அல்லது கை விரலில் கட்டிக்கொண்டால் போதும், தானாகவே ரத்த  அழுத்தத்தைக் கா ண்பித்துவிடும். சென்சார் மற் றும் மைக்ரோ புராசசர் இணைந்துள்ள இ க்கருவி ரத்த அலைகளில் உண்டாகி ன்ற அழுத்தத்தை  அளப்பதால் இந்த அளவு மிகச் சரியாக இருக்கும் என்று நம்ப முடியாது.

அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட் டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர்  ஜெர்மனி மருத்துவர்கள்.

கான்டாக்ட் லென்ஸ் என்பது பார்வைக் கோளாறுகளை சரி செய்ய மூக்குக் கண்ணா டிக்குப் பதிலாக கார்னியா மீது பொருத்தப்படு கின்ற ஒரு வகை  லென்ஸ். இது வ ட்டமாக வளைதளப் பரப்புள் ளதாக இருக்கிறது. சிலிக் கான், பிளாஸ்டிக் அல்லது ஹைட்ரோ ஜெல் எனும் வேதிப்பொருளால்  தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி தம்ளர் ஓரங்களில் தண்ணீர்த் துளி ஒட்டிக்கொள்வ தைப் போலத் தான் இதுவும் கார் னியாவில் ஒட்டிக்கொள்கிறது.  கார்னியாவு க்கும் லென்சுக்கும் நடுவில் உள்ள கண்ணீர்த் துளியி ன் ‘புறப்பரப்பு இழுவிசை’ லென் சை நகர விடாமல்  பார்த்துக் கொள்கிறது. 

சரி, கான்டாக்ட் லென்ஸ் எப்படி ரத்த அழுத்தத்தை அளக்கிறது?

2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் ‘சென்சிமெட்’ எனும் ஒரு மை க்ரோ சென்சாரை  கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை (Intra Ocular Pressure-சுருக்க மாக ஐஓபி) அளந்து சொன்னா ர்கள். இந்தக் கருவியின் பெய ர் ‘டிரைகர் ஃபிஸ் ‘. கண்ணில் அளக்கப்படும் ஐஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்ற ப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப்  பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொ ண்டே இருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால்  குளுக்கோமா நோய் வந் து கண்ணைக் குருடாக்கிவிடும். ஆகவே , 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக் கு ஒருமுறையாவது இந்த அளவை  அ வசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இ தற்கு டிரைக ர்ஃபிஸ் கருவி பயன்படுகிற து.

இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்த த்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தை க்  கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர் மனி மருத்துவர்கள் ஸ்டோ ட்மியாஸ்டர் மற்றும் ஜோன ஸ் ஜோஸ்ட். இதற்கு ‘கோல் டுமேன்  கான்டாக்ட் லென் ஸ்’ என்று பெயர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சே ர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் ‘சென்சி மெட்’ சென்சாருடன்  ஆன்டெ னா, கெப்பாசிட்டர், கன்ட் ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர் க்கரை அளவை அளக்க முடி யும்  என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரி சோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக் கு ஒருமுறை  தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ள னர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த ‘கூகுள் கான்டாக்ட் லென்ஸ்’ இன்னும் சில  ஆண்டுகளில் சந்தைக்கு வந்து விடும்.

பார்வையைச் சரி செய்ய வந்த கான்டாக்ட் லென்ஸ் ரத்த அழுத்த ம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளைக் காண்பிக்கும் கருவியா கவும் அவதாரம்  எடுத்திருப்பது மருத்துவ அதிசயம்தானே!

தினகரன் நாளிதழிலிருந்து . .

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: