Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமராஜர் ஆட்சியின்போது . . .

காமராஜர் ஆட்சியின்போது . . .

காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற்சாலைகள் பெரு ம்பாலும் வடநாட்டில் அமைக்கப் பட்டன. தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க கனரகத் தொழிற்சாலை கள் அமைக்கப்படவில்லை.

இதனால்,

‘வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’ என்று தி. மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர்.இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு. கழகத் தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரண ம்.

தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்ப தை காமராஜரும் உணர்ந்து கொண் டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளை யும், அணைக ளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத் தார்.

மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண் டு திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கணி சமான தொகை ஒதுக்கும்படி செய்தா ர். சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெ யில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்ப ட்டது.இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.

நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்க ப்பட்டது. இந்த தொழிற்சாலைக் கான தொழில் நுட்ப உதவி யை பிரான்சு வழங்கியது.

சென்னை கிண்டியில் இந்துஸ் தான் டெலிபிரிண்டர் தொழிற் சாலை அமைக்கப்பட்டது.

தென் ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடை க்கும் என்று கண்டறியப்பட் டதும், 1956-ல் ரூ.160 கோடி மதிப் பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அ மைக்கப்பட்டது. முதல் கட்ட மாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.

சென்னை ஆவடியில் ராணு வ டாங்கி தொழிற்சாலை அமைக்கப் பட்டது. அறுவை சிகிச்சை க் கருவிகள் தயாரிக்கும் தொழிற் சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டது.

திருச்சியை அடுத்த திருவெறும் பூரில், 1800 ஏக்கர் நிலத்தில் பா ய்லர் தொழிற்சாலை பிரமாண்ட மாக அமைக்கப்பட்டது. துப்பாக் கி தயாரிக்கும் தொழிற்சாலையு ம் திருச்சியில் அமைக்கப்பட்ட து.

சென்னை கிண்டி, மதுரை, வி ருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்க ளில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றா வது ஐந்தா ண்டு திட்டத்தில் மேலும் 13தொழிற்பேட்டை களை அமைக்க அரசு  மு டிவு செய்தது.

அப்போது அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற் பேட்டை அமைக்கப்பட்டது.பெரிய, நடுத்தர, சிறிய தொழிற் சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன.

இதேபோன்ற தொழிற்பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்க ப்பட்டது.

கி.பி. 2-ம் நூற்றாண்டில் காவிரி ஆறு குறுக்கே சோ ழ மன்னன் கட்டிய கல்ல ணை தான் உலகின் முதல் அணை. வெள்ளையர் ஆட் சியில், 1934-ம் ஆண்டில் மேட்டூரில் கட்டப்பட்ட அணைதான், இந்தியாவில் சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் அ ணையாகும்.

காமராஜர் ஆட்சியின் போ து, தமிழ்நாட்டில் பல அணைகள் கட்ட ப்பட்டன. அவற்றில் சிறந்தது, பரம்பி க்குளம்-ஆளியாறு அணை க்கட்டு ஆகும். தமிழ்நாட் டில் ஆனைமலையில் உற்ப த்தியாகும் நதிகளின் நீர், கேரளத்தின் வழியாக ஓடி வீணாக அரபிக் கடலில் கலந்தது.

அதைத்தடுத்து, அந்த நீரை நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத் திக்கும் பயன்படும் விதத்தில் சென்னை மாநில அரசும், கேரள அரசும் பேச்சு நடத்தி, இந்தத் திட்டம் நிறைவேற் றப்பட்டது.

கீழ்பவானி நீர்த்தேக்க திட் டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், வைகை அணைக் கட்டுத் திட்டம், மணிமுத் தாறு திட்டம், கிருஷ்ண கிரி நீர்த்தேக்கத் திட்டம், புள்ளம் பாடி கால்வாய் திட்டம் ஆகியவையும் காமராஜர் ஆட் சியின்போது நிறைவேற்றப்பட்ட வைதான்.

1962-ம் ஆண்டில், தென்னாட்டில் பெரிய தொழிற்சாலை ஒன்றை, செக்க-சுலோ-வக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இடத்தை தேர்வு செய்ய ‘செக்’ நாட்டு நிபு ணர் குழுவினர் இந்தியா வந்தனர். முதலில் ஆந்திரா சென்று சில இடங்களைப் பார்வையிட்டனர். சில இடங்கள் நன்றாக இருப்பதா கக் கூறினார்கள்.பிறகு சென்னை வந்தனர்.  சென்னை யில் சில இடங்களை நிபுணர்கள் பார்வையிட்டனர்.

இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பெரிய இயந்திரங்களை த் தாங்கக்கூடிய வகையில், தரை யும் கடினமாக இல்லை. என வே, இங்கு இந்த தொழிற்சாலையை அமைக்க இயலாது என்று கூறி னர்.

ப்போது முதல்-அமைச்சராக காம ராஜர் இருந்தார். அவர் அமைச்சர் ரா மையாவை அழைத்து, திரு ச்சிக்குப் பக்கத்தில், கடினமான தரையுள்ள நி லம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் தாராள மாக கிடைக்கும். நீங்கள் உட னே நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

உடனே அமைச்சர் ராமையா, நிபுணர் குழுவி னரை திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அப் போது திருச்சியை அடுத்த திருவெறும் பூரில் ஏராளமான நிலம் காடு போ ல் கிடந்தது. அந்த இடத்தின் மண் வளத்தையும், தண்ணீர் வசதியையும் பரிசோதித்த நிபு ணர்கள், தொழிற்சாலை அ மைக்க இந்த இடம் பிரமாத மாக இருக்கிறது என்று அறிவித்தனர்.

இந்தச் செய்தி வெளியானது ம், ஆந்திராவில் பயங்கர கல வரம் மூண்டது. தொழிற்சாலையை ஆந்திராவில்தான் அமைக்க வே ண்டும். திருச்சியில் அமைக்கக் கூடாது என்று ஆந்திரர்கள் கிளர் ச்சி செய்தனர்.இதனால் மத்திய அரசு, அமைய இருக்கு ம் தொழிற்சாலையை இரண் டாகப் பிரிக்கத் தீர்மானித்தது. டிரான்ஸ்பார் மர் தொழிற்சா லையை ஆந்திராவிலும், பாய் லர் தொழிற்சாலை யை திரு ச்சியிலும் அமைக்க முடிவு செய்தது.

பாய்லர் தொழிற்சாலைக்கும், அதன் விரிவாக்கத்துக்கும், குடியி ருப்புகள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.

1965-ம் ஆண்டில், பாய்லர் தொழிற்சாலையை அன்றைய ஜனாதி பதி ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார். இன்று, பாய்லர் தொழிற் சாலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தி ருப்பதுடன், அந்தப்பகுதியே நவீன நகரமாக காட்சி அளிக்கிறது.

Leave a Reply

%d bloggers like this: