Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் – சில தகவ‌ல்கள்

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் – சில தகவ‌ல்கள்

டிராவல் இன்ஷூரன்ஸ்…

டிராவல் இன்ஷூரன்ஸ்… சுற்று லா செல்லும்போது எதிர்பாராம ல் ஏற்படும் விபத்து, திருட்டு, பய ண ரத்து போன்றவற்றில் இரு ந்து, பொருளாதார ரீதியாக

காக்கக்கூடிய ஆபத்பாந்தவன்!

‘வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கட்டாயம் இன் ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். ஆ னால், உள்நாட்டு சுற்றுலாவுக்கு கட்டாயம் இல்லை. என்றாலும், பாலிசி எடுப்பதுதான் பாதுகாப் பானது. இதற்கான பிரீமியம், நா ட்களின் அடிப்படையில் இருக்கு ம். 6 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை எடுக்க முடியும். அனைத்து ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாகவும் இதை எடுக்கலாம் .

நெருங்கிய உறவினர் இறந்து போவது, நாம் விபத்தில் சிக்கு வது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் சுற்றுலா வை ரத்து செய்தால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும். வி மானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஆகும்போது, வெ ளியில் அறை எடுத்து தங்கினால், க்ளைம் செய்ய முடியும். போ ராட்டம் போன்ற காரணங்க ளால் குறிப்பிட்ட நேரத்துக்கு ள் ரயில், விமான நிலையத் தை அடைய முடியவில்லை எ ன்றாலும், டிக்கெட் தொகை யை க்ளைம் செய்யமுடியும். போட்டிங், ரைடிங், ஃப்ளையி ங் என விளையாட்டு மற்றும் சாகசங்களை நிகழ்த்தும் போது… விபத்து ஏற்பட்டு, மருத்துவம னையில் அனுமதிக்கப் பட் டால், மருத்துவச் செலவுகளுக்கும் க்ளைம் பெற முடியும். இன்னும் சில இனங்களுக்காகவும் க்ளை ம் பெற முடியும்’.

”சுற்றுலாவின்போது எந்த அசம்பா விதம் நிகழ்ந்தாலும், உடனடி யாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புகொண்டு பதிவு செய்வது அவசியம்’.

-கிருஷ்ணதாசன், துணைத் தலைவர் இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் .

இரா.ரூபாவதி

One Comment

Leave a Reply