Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

ஒரே மொழி பேசக்கூடிய சோழ னும் பாண்டியனும் நாட்டின் எல் லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டி வை த்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொ ரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திரு க்கமாட்டார்கள். இருவரும் போரிட்டு ஒரு வழியாக

சோழன் சுவடே தெரியாமல் சுத்தமாக அழிந்தே விட, பாண்டியன் சற்று பலம் குன்றி இருந்த நேரத்தில் வடக்கில் இருந் து வந்தார்கள் முஸ்லிம் ம ன்னர்கள், கோயில்கள் அ னைத்தும் அடித்து தரை மட் டமாக்கப்பட்டது, சிலைகள் அனைத்து உடைத்து நொ றுக்கப் பட்டது, தடுத்தவர்க ளின் தலை துண்டிக்கப்பட் டது, அப்படி ஒரு சம்ப‌வத் தை தமிழ் மக்கள் அது வரை பார்த்தததே இல்லை,

ஜென்ம விரோதிகளான சோழனும் பாண்டியனும், சாளுக்கியனு ம், பல்லவனும் மோதிக்கொண்டபோது கூட ஒருவர் நாட்டை மற் றொருவர் கைப்பற்றும் போது அவர்கள் எழுப்பிய கோயில்களை எதிரி நாட்டவர் தொட்டதில்லை, இவர்கள் யார் புதிதாக? எங்கிரு ந்து வந்தார்கள்? அது ஒரு குழுப்பமான காலம், தமிழத்தை ஆண் ட மூன்று பெரிய பேரரசும் வீழ்ந்து விட்டது. யார் இனி நம்மையும் நம் கோயில்களையும் காப் பாற்றப்போகிறார்கள் என்று தலை மீது தமிழ் மக்கள் கை வைத்து அமர்ந்திருந்த நேரத்தில் , துங்கபத்தரை நதிக்கரை ஓரத்தில் அற்புத மான ஒரு ஒளி உதயமானது, முஸ்லிம் மன் னர்களிடம் போராடி தமிழகத்தில் இருந்து அவர்களை முழுவதும் விரட்டி, தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு
வந்தவர்கள் விஜயநகர் பேரரசர்கள்.

கர்நாடக மாநிலம் ஹம்பி யில் அமைந்திருந்தது அவ ர்களின் தலைநகர் நமக்கு மேலே இருந்ததால் அவர் களைக் கடந்து தமி ழகம் வர முடியவில்லை. பெரி ய அரணாக இருந்து தடுத் து நம் ஊரில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை காப்பாற் றியவ ர்கள் அவர்கள். தமிழகத்திற்கு அது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லலாம் பாதி  யில் நின்ற கோயில்களை முழுமை யாக்கியது, விண்ணை முட்டும் ராஜ கோபுரங்களை எழுப்பிய து, ஆயிரம் கால் மண்டப ங்கள் அமைத்தது ,அந்த மண்டபத்தில் நிற்கும் தூ ண்களில் ஆள் உயர பிரம் மாண்ட அற்புத சிலைகள் செய்தது என அவர்கள் செய்து வைத்துச் சென்ற வேலைகள் ஏராளம், அற்புத மான மனிதர்கள், அவர்களின் வரலாறு நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பண்டைய ரோம் நகரைக் காட்டி லும் பெரிய நக ராக விளங்கிய ஹம்பி கடைசியாக முஸ்லிம் மன்னர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எழுப் பி இருந்த அற்புத மான கோயில்கள் அனைத்தும் இடித்து நொறுக் கப்பட்ட எச்சங்களை இன்றும் நாம் காணலாம்.

தங்கள் கோயில் களை இழந்து அவர்களை அங்கு தடுத்து நிறுத் தி இருக்காவிடில் இன்றைக்கு இங்கும் எதுவுமே இருந்திருக்கா து! அந்த அற்புதமான வீரர்கள் இன்றும் நம்முடைய கோயில்களி ல் குதிரையின்மீதி வீரமாக தாவிக்கொண்டு தான் இருக்கிறார் கள், திரும் பிப் பார்க்க கூட ஆளில்லாமல்!

முகநூலிலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: