Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே

இருக்கும் போக்கு வரத்து சமி ஞையில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது, அதனை பார்த் த‍ நானும் எனது தோழர்களு ம் எல்லைக் கோட்டிற்கு முன்பா கவே நிறுத்தினோம். பின்பு சா லையின் நடுவில்  நின்றுகொண் டிருந்த‌ போக்குவரத்து காவலர் ஒருவர் எங்களை வலது புறமாக செல்லுமாறு தனது கைகளால் சைகை காட்டினார். அவரது கா ட்டிய திசையில் நோக்கி மிதி வண்டியை செலுத்தினோம். சற்று தொலைவு சென்றஉடன் கடற்கரை யின் உட்புறச்சாலைக்கு செல்ல‍ இடப்புறமாக உள்ள‍ பாதையில் திரு ம்பி, கடற்கரையின் உட்புறச்சா லையை அடைந்தோம். எங்கள் துரதிஷ்டம், எங்களது மிதிவண்டி களை நிறுத்த‍ அங்கே இடமில்லை. ஆதலால், கடற்கரையின் உட்புறச் சாலையிலேயே உழைப்பாளர் சி லையை நோக்கி நகர்ந்தோம். அங்கே உழைப்பாளர் சிலைக்கு முன்ன‍தாக எங்களது மிதிவண்டிகளை நிறுத்த‍ இட மிருந்தத தால், அங்கேயே நிறுத்தி, மறக் காமல் மிதி வண்டியை பூட்டி விட்டு, மறக்காமல் சாவியை எடுத்து, அவரவர் சட்டைப்பை க்குள் போட்டு விட்டு, கடற்கரை மணற்பரப்பு நோக்கி நடக்க‍ ஆரம்பித்தோம். மணற்பரப்பில் சிறிது தூரம் நடந்த போது, வழி யில் பஜ்ஜி, கடையை பார்த்த‍ எனது தோழர்களில் ஒருவன், ஏண்டா பஜ்ஜி சாப்பிட்டு எவ்வ‍ள வு நாளாச்சு, வா பஜ்ஜி சாப்பிட் டுவிட்டு பின் அலைகளுக்கு போ கலாம் என்றான். சற்றே அவனை நானும் எனது இன்னொரு தோ ழனும் கிண்டலாக சிரித்த‍வாறே ஆளு க்கு இரண்டு இரண்டு தட்டு பஜ்ஜி கொடுக்க‍சொல்லி சாப்பிட் டோம். ஆனால் பஜ்ஜி வேண்டும் என்ற கேட்ட‍ நண்பன் மட்டும் கூடுதலாக‌ 2 தட்டு பஜ்ஜிகளை சாப்பிட்டான். பின் பஜ்ஜிக்கான பணத் தை கடைக்காரரிடம் கொடுத்து, கடலை நோக்கி நடக்க‍ ஆரம்பித்தோம். 3 தட்டு பஜ்ஜிகளை சாப் பிட்ட‍ அந்த தோழனை, நானும் எ னது இன்னொரு தோழனும் அவ னை கிண்டலடித்தும் வெறுப்பே ற்றியவாறே சென் றோம். ஒருவழியாக கடல் வந் தது. நானும் எனது தோழர்கள் இருவரும் கடல் அலைகளில் சு மார் 2மணி நேரம், நின்று, கட லின் அழகை ரசித்துக்கொண்டு ம், பேசிக் கொண்டும் இருந்தோ ம். பின்பு கடல் அலைகளில் இரு ந்து கரைக்கு வந்தோம். வந்த போது, அங்கே ஒரு சிறுவன் அண்ணே! சுண்டல் இருக்கு வே ணுமானே! என்றான். சரி 3 சுண் டல் குடுப்பா என்று கேட்டான். அவனும் ஏதோ வாரப் பத்திரிகை யை எடுத்து அதன் நடுவில் உள்ள‍ கம்பி யை நீக்கிவிட்டு, அதிலிருந்து ஒரு காகி தத்தை கிழித்து, கைகளால் அதை கூம்பு வடிவத்தில் சுழற்றி, அதில் இரண்டொரு தேக்கரண்டி சுண்டலை அள்ளிப்போட்டு அதனை மேற்பரப்பில் சிறிது மாங்காய் சீவலை தூவி எங்களிடம் கொடுத்தான். சுண்ட லுக்கான பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, சுண்டலை நானும் எனது தோழர்களும் பெற்றுக் கொண் டோம். ஏதோ ஏதோ பேசிக்கொண்டே வாங்கிய சுண்டலை சாப்பிட்டு முடித் தோம். பின் அந்த காகிதத் தை தூக்கி எறிவதற்கு முன்பு அதி ல் உள்ள‍ ஒரு சிறுகதை என்னை கவர்ந்தது.

மின்சார மர்மம் என்ற தலைப்பின் கீழ் வந்த சிறுகதையே! அந்த சிறு கதை இன்றளவும் எனது மனதில் நீங்காமல் நிலைத்து நின்கி றது.

இதோ அந்த சிறுகதை

(அச்சிறுகதை முழுவதுமாக என து நினைவில் இல்லை. ஆனால் அச்சிறுகதையின் மையக்கரு எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. கதையில் சில வரிகள் நானாக சேர்த்திருக்கிறே ன். )

சேகர், கோடை விடுமுறையை தனது மனைவி சித்ரா மற்றும் இரு செல்ல‍க்குழந்தைகளுடன் கொண்டாட எண்ணி, கோ டை வாசஸ்தலம் ஒன்றிற்கு, மறுநாள் காலையில் செல்ல‍ திட்ட‍மிட் டிருந்தான். பொழு தும் விடிந்தது. சித்ரா சீக்கிர மாகவே எழுந்து, குளித்து விட்டு,தனது குழந்தைகளை யும் எழுப்பி, தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அச்சமய த்தில் தனது கணவனான சே கரையும் எழுப்பி, போய் குளி த்துவிட்டு வருமாறு சொல்ல‍, அவனோ தூக்க‍ கலக்கத்தில் முண கிக்கொண்டே குளிக்க‍ச்சென்றான். பின்பு அவன் குளித்து விட்டு வந்தவுடன் சூடாக காபியை கொடுத்தாள். சேகரும் அதை கு டித்து விட்டு சித்ரா எடுத்து வை த்திருந்த உடைகளை மாற்றிக் கொண்டான்.அதற்குள் சித்ரா ஒரு தட்டில் 5 இட்லிகளையும் கடலைக்காய் சட்னியையும் வைத்து, அவனிடம் தந்தாள் அ வனும் சாப்பிட் டான். சித்ராவும் தனது குழந்தைகளு க்கு இட்லி யை ஊட்டிவிட்டு, பின் தானும் சாப்பிட்டாள்.  ஒரு வழியாக எல் லோரும் தயாரானார்கள். சித்ரா சமையலையில் எரிவாயு உரு ளை சரியாக மூடியுள்ள‍தாக என்பதை ஒருமுறைக்கு பத்துமுறை சரிபார்த்தாள்.பின் வீட்டின் அனைத் து ஜன்ன‍ல் கதவுகளையும் மூடி தா ழிட்டாள்.

சேகர், தனது வீட்டின் ஒவ்வொ ரு அறைகளுக்கும் சென்று மின் விசிரி, விளக்கு போன்ற மின்சாதனங்கள் அனைத்தும் அனைக்க‍ப் பட்டிருகிற தா என் பதை சரிபார்த்து விட்டு மனை வி மற்றும் தனது குழந்தை களை வீட்டின் வெளியே நிற்க ச்சொல்லி வீட்டை பூட்டி சாவியை தனது மனைவி சித்ராவிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னான். தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத் தில் தனது குடும்பத்தை ஏற்றிக் கொண்டு, பறந்தான்.

3 நாட்கள் உருண்டோடியது. ப யணம் முடிந்து சேகரும் அவ னது குடும்பமும் வீடு திரும் பினார்கள். வழக்க‍மான வே லைகளில் எல்லோரும் மூழ்கினார்கள். சேகர் வெளியூருக்கு செ ல்லும்முன் மின் அளவீட்டு கருவியில் உள்ள‍ மின் அளவை எண்களை குறி த்து வைத்திருந்தான். தற்போது அந்த மின் அளவீட்டு கருவி யில் 1 யூனிட் கூடுதலாக காண்பிக்கிறது. சற்றே சேகர் அதிர்ச்சி அடைந்தான். ஏனென்ன் றால் அனைத்து மின் சாதனங்கள் அனை த்தையும் அனைத்து விட்டுத்தா னே சென்றிந்தான். அப்ப‍டி இருக்க எப்படி ஒரு யூனிட் மின்சாரம் ஓடியதன் மர்மம் என்ன‍ என்ற குழப்ப‍த்தில் ஆழ்ந்திருந்தான். அச்சமயத்தில், அவனது பக்க‍த்து வீட்டுக்காரர், சேகரிடம், நீங்க இல்லாத நேரத்தில் எத்த‍னை பேர் தெரியுமா உங்களைத் தேடி வந்து, உங்களது வீட்டு காலிங்பெல்லை அழுத்தியிரு க்கிறார்கள். அப்போதுதான் சேகருக்கு 1 யூனிட் ஓடிய தன் மர்மம் விலகியது. தான் வெளியூருக்கு செல்வத ற்கு முன்பு மெயின் ஸ்விட்சை அனைக்காமல் சென்று விட்ட‍து அவ னது நினைவுக்கு வந்தது, சற்றே நிம்மதி அடைந்தான்.

Leave a Reply

%d bloggers like this: