Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகாபாரதம் படிப்பது எப்படி? அதை எப்படித் துவக்குவது?

மகாபாரதம் படிப்பது எப்படி? அதை எப்படித் துவக்குவது?

மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும்போது முதலில் எதற்காகப் படி க்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப் பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்

வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத

காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும், ஆனால் மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம், அதன் நுண் மையான அம்சங்கள், கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், ஊடா டும் பண்பாட்டு சிந்தனைகளை ஆழ்ந்து கற்கவிரும்பினால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு காலம் தேவைப்படும்,

காரணம் ஒவ்வொரு பருவத்தை யும் புரிந்துகொள்ள மேலும் அதி கமாக வாசிக்கவேண்டியது வரும்,

என் வரையில் மகாபாரதம் என்பது வாழ்நாள் முழுவதும் வாசித் துக் கொண்டேயிருக்க வேண்டிய புத்தகம், அதை ஒரு போதும் வாசித்து முடிக்க இயலாது, ஒரு சிகரத்தைப் போல அதை ஏறுவதற்கு கொஞ்சம் கொஞ் சமாக நாம் முயற்சிக்க வே ண்டும், அது தரும் வாசிப்பு அ னுபவம் அலாதியான ஒன்று,

மகாபாரதம் பதினெட்டு பருவ ங்களைக் கொண்டது, மொத் தமாக பதிமூன்று ஆயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பக் கம் வரக்கூடியது, இதற்கு காரணம் சில பதிப்புகளில் கிளைகதை கள் துண்டிக்கபட்டிருக்கின்றன, கிரேக்க காப்பியங்களை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம், மகாபாரத கதாபாத்திரங்க ளை அறிந்து கொள்வதற்காக பாரதிய வித்யா பவன் வெளியிட்டு ள்ள who is who in the Mahabharata- subash Mazumdar என்ற சிறிய நூலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்

ஆரம்பநிலையில் மகாபாரதம் படிக்க வி ரும்புகின்ற பலரும் ராஜாஜியின் வியாச ர் விருந்தினைத் தேடி வாசிக்கிறார்கள், இது மிகவும் சுருக்கப்பட்ட மகாபாரதம், பிளாஸ்டிக்கில் செய்த தாஜ் மகால் பொம்மை போன்றது, ஒரிஜினல் மகாபா ரதம் முழுமையா கத் தமிழில் வெளியா கி உள்ளது, அதைக் கும்பகோணம் பதிப் பு என்பார்கள், இந்தப் பதிப்பு வாசிக்க சற் றே சிரமம் தரக்கூடியது, காரணம் அதன் மணிப்பிரவாள நடை,

இதை வாசிப்பதற்கு முன் னதாக மகாபாரதம் வாசிப் பதற்கென சில எளிய வழி களை உருவாக்கிக் கொள் ள வேண்டும்

மகாபாரத மூலப்பிரதியை வாசிப்பதற்கு அடிப்படை யாக நான்கு முக்கிய வழி களை கைக்கொள்ள வே ண்டும்,

ஒன்று மகாபாரதம் சார்ந்த எளிய கதைசுருக்கங்களை, நாட்டார் கதைகளை வாசித்துவிடுவது,

இரண்டாவது மகாபாரதம் பற்றிய புனைகதைகள், நாவல்கள், மறு உருவாக்கங்கள், நாடகங்களை வா சிப்பது,

மூன்றாவது மகாபாரதம் குறித்த ஆ ய்வுகள், விமர்சனக் கட்டுரைகள், தத்துவ உரைகள் போன்றவற்றை வாசிப்பது,

நான்காவது நிகழ்த்துகலைகளான நாடகம், கூத்து, சினிமா போ ன்றவற்றி லும், சடங்குகளிலும், ஒவியம் சிற்பம் போன்ற நுண் கலைகளிலும் மகாபார தம் எப்படி இடம் பெற்றுள்ளது என்ப தை அறிந்து கொள்வது, இந்த நான்கு வழிகளில் ஊடாடித் தான் மூல நூலை வாசிக்க முடியும்

ஒருவேளை நீங்கள் நேரடியாக மூல நூலை வாசிக்க ஆரம்பித் தால்கூட மே ற்சொன்ன வழிகள் உங்களுக்குப் பின் னால் தேவை ப்படக்கூடும்

மகாபாரதம் படிப்பதற்கு முன்பு சில அடி ப்படை எண்ணங்களை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்

1) ஒரே மூச்சில் மகாபாரதம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்,

2) மகாபாரதம் கதைக் குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்து க் கொள்ள வேண்டும்

3) மகாபாரதம் வாசிக்கை யில் அது என்றோ நடந்த உண்மையா, அல்லது கற் பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொ ண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையை ச்சற்று தூர வைத்து விட்டு புத்தகத்தை படித்துக் கொ ண்டு செல்ல வேண்டும்

4) மகாபாரதம் பண்டைய இந்தியாவில் நடைபெறும் கதை, ஆக வே அன்றுள்ள நிலவெளி, அதன் ஆறுகள், மலைகள், இனக் குழு க்களின் வரலாறு ஆகியவற் றின் எளிய அறிமுகம் அவசி யம் தேவை

5) மகாபாரதம் ஒரு புனித நூல் என்ற எண்ணத்துடன் படிக்க அணுக வேண்டாம், அது ஒரு மாபெரும் காப்பியம், இந்தியா வின் மாபெரும் நினைவுத் திர ட்டு, ஒரு சமூகம் தனது நினை வுகளை கதைவடிவமாக மாற் றி வைத்திருக்கிறது, ஆகவே நாம் பல்வேறு நினைவுகளின் ஊடே சஞ்சாரம் செய்கிறோம் என் பதே வாசிப்பதற்கான தூண்டுதல். பகவத்கீதையை எப்போதுமே தனி யாக வாசிப்பதே சிறந்த ஒன்று

6) மகாபாரதம் படிப்பதை விடவும் வாசித்துக் கேட்பது முக்கிய மானது, அதற்கு ஒரு ஆசான் தேவை, நான் அறிந்தவரை வில்லி புத்தூ ரார் பாரதத்தை கரைத்துக் குடித்தவர் பேராசிரியர் ஞா னசம் பந்தம், அவரை நாம் நகைச்சுவை பேச்சாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோ ம், அவர் சிறந்ததொரு மகாபாரத வல்லுனர், அவரைப் போல தேர் ந்த ஆசான் ஒருவர் வாசிப் பிற்கு துணை செய்ய அவசி யம், அல்ல து சமஸ்கிருதம் அறிந்த ஒரு அறிஞரின் துணை அவசியமானது

7) மகாபாரதம் படிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது நாம் முன் பு கேட்டு அறிந்துள்ள அறைகுறையான மகாபாரதக் கதைகள் மற்றும் சம்பவங்கள், அந்தக் கதை இல்லையே, இந்தக் கதாபாத் திரம் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி சதா மனதிற்குள் கேட்டுக் கொண் டேயிருக்கும், அதையும் ஒரங் கட் டிச் செல்லுங்கள்

8) மகாபாரதத்தை கொஞ்சம் கொ ஞ்சமாக படித்துக் கொண்டே போ வதுதான் சிறந்தவழி, அதற்கு முத லில் எளிமையாக ஒரு முறை அதன் கதையை வாசித்துவிடுங் கள், இது போன்ற எளிய அறிமுக த்திற்கு தேவதூத் பட்நாயக் எழுதி ய ஜெயம் / விகடன் பிரசுர வெளி யீடு, அமர் சித்ரா கதா காமிக்ஸ், மற்றும் பெரிய எழுத்து மகாபாரதக் கதை உதவக்கூடும்,

– எஸ். ராமகிருஷ்ணா

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: