Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல் சொத்தை – மருத்துவ அலசல்

பல் சொத்தை – விரிவான மருத்துவ அலசல்

‘நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உத வுகின்றன. கடினமான பல்லில் பாதி ப்பு ஏற்பட்டு பல்லின் உறு தியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கி றோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறை பாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதி னர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகளவி ல் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால்

பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்க ளை யும் பாதித்துவிடும்.

பல் சொத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நட ந்துகொண்டே இருந்தாலும், இக்காரண த்தினால்தான் பல்லில் சொத்தை ஏற்ப டுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக் கப்படவில்லை. பெரும்பாலானவர்கள், சொத்தைப் பல்லை கண்டுகொள்ளாம ல் இருந்துவிடுகின்றனர். வலி எடுக்க ஆரம் பித்தால்தான் டாக்டரிடம் செல்கின்றனர். சிலரோ, சொத் தைப் பல் என்றதும், பிடுங்கிவிடச் சொல்கின்றனர். பல் சொத் தை எந்த வயதில் வேண்டுமானா லும் வரலாம்.

சொத்தை வரக் காரணங்கள்:

பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொ ள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர் த்தியாக இருந்தாலும் பல் சொத் தை வர வாய்ப்பு அதிகம்.

கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந் தைக்கு வரலாம்.

குழந்தைகள் இரவில், ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவ தன் மூலம், பற்களில் பா ல்தங்கி, சொத்தையை  ஏற்படுத்தி விடும்.

சரியாக பல் துலக்காததாலு ம் சொத்தை வரலாம்.

உணவுப் பழக்கங்கள்…

ஜங்க் ஃபுட்ஸ், சாப்பிடும் உண வுகள் பெரும்பாலும், ஒட்டும் தன்மையுள்ள பசை உணவா கவே இருக்கிறது. பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் அது பற்களின் இடையே மா ட்டிக்கொள்ளுமே தவிர, ஒட் டாது.

அதையே சமைத்துச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டுகிறது. இந்  உணவுத் துகள்கள் அதிகம் சேர்ந் து பற்களைப் பாதிக்கின்றன.

சொத்தை வருவதற்கான அறிகு றிகள்:

கருப்பான கோடு போல் இருக்கும்.

தொட்டால் அந்த இடம் மிருதுவா க இருக்கும். சிலருக்கு ‘படக்’ என் று உள்ளே போகும் அளவுக்கு குழியும் வந்திருக்கலாம்.

பல் குழியாகி ஆழமாகப்போவ தைப் பொருத்து பாதிப்புகள் தெரி ய வரும்.

காய்ச்சல், தொண்டையில் வலி, காது, தலை, கழுத்து போன்ற இட ங்களில் வலி இருக்கும்.

சிகிச்சைகள்:

பற்குழிவேர் வரை அரித்து வலியை ஏற்படுத்தும் போதுதான் கிரா ம்பு வைப்பது போன்ற கை வைத் தியங்களைக் கடைப்பிடிக்கிறோ ம். இதை அப்படியே கவனிக்காம ல்விட்டால், வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

எக்ஸ்-ரே மூலம் பல் எந்த அளவு க்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, மேல் வரை மட்டுமே பாதிக்கப்பட்டி ருந்தால், ஆன்டிசெப்டிக்லேயர் கொடுத்து அதுக்கு மேல் ஃபி ல்லிங் செய்யப்படும்.

வீக்கம், சீழ் இருந்து, வேர் வரை போய் இருந்தால் ‘ரூட் கெனால்’ மூலம் பல்லின் வேர் ப் பகுதி சுத்தம் செய்யப்படும். பல்லின் வேர்ப் பகுதி இல்லா ததால் அந்த பல்லுக்குத் தே வையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஒரு கட்டத் தில் பல் பொடிப்பொடியாக உடைந்துவிடவும் வாய்ப்புள்ளது. இ தைத் தவிர்க்க அந்தப் பல்லின் மேல் பகுதியில மெட்டல் கேப் போட்டுவிடலாம். இதனால் பல்லின் உறுதித்தன்மை பாது காக் கப்படும்.

பிடுங்கினால் பிரச்னையா?

சிலர் சொத்தை வந்தால் பிடுங்கிவிடுகின்றனர். சரி எடுத்துவிட் டோமே, என்று மாற்றுப் பல் கட்டுவதுமில்லை. இதனால் பக்கத் தில் உள்ள பற்களும் பாதிப்புக்கு உள்ளாகும். பல் எடுத்த இடத்தி ல் இடைவெளி ஏற்பட்டு முக அழகைக் கெடு த்துவிடும். வார்த் தைகள் குள றும். நாக்கை அடிக்கடி கடிக் க நேரிடும்.

பாதுகாப்பான பற்களுக்கு…

தினமும் இரண்டு முறை பல் தேய்க்கவேண்டும்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன் ஈறுப் பகுதியை தண்ணீரில் கழுவி, நன்றாக துணியால் துடைத்துவிடவேண்டும்.

சாக்லேட் மற்றும் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உடனே, நன் றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

சாதாரண டூத் பேஸ்ட் பட்டாணி அளவே போதுமானது.

ஜிக்ஜாக்’ முறையில் பல் தேய்ப் பது ஒழுங்கைத் தருவதுடன் ஆ ரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பற்கள் வலு வாக இருக்க, ஃப்ளூரைடு வார்னி ஷ் தடவ வேண்டும்.

8 வயது வரை குழந்தைகள் சரி யான முறையில் பல் தேய்ப்பதற் கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைப்பார்ப்பது நல்லது.

பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானிய ங்கள், கிழங்கு வகைகள், அரிசி சாதம் சாப்பிடலாம்.

ஐஸ்க்ரீம், கேக், குக்கீஸ், சாக்லேட்ஸ் தவிர்ப்பது நல்லது.

சாப்பிட்டபிறகு சுகர்ஃப்ரீ சுயிங்கம் மெ ல்லலாம். இதனால், உமிழ் நீர் நன்கு சுர ந்து, பற்கள் சமச்சீர் தன்மைக்கு வந்து விடும். பல்லில் சொத்தை வராமலும் தடுக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: