Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்பை இறக்க‍ம் – காரணங்களும்! தீர்வுகளும்!

கருப்பை இறக்க‍ம் – காரணங்களும்! தீர்வுகளும்!

கருப்பை இருக்கும் இடத்தில்இல்லாமல், சற்று அல்லது அதிகமா க கீழிறங்கி இருக்கும்நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும் பாலும் ஏற்படுகிறது என்று கண்ட றியப்பட்டுள்ளது.

கருப்பை என்பது ஒரு உள்ளுருப் பாகும். இது பெரும்பாலும் வெளி யே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. க ருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில்,

பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

பல காரணங்களால், கருப்பை யை தாங்கிக்கொண்டிருக்கு ம் தசைகள் தளர்வடைந்தா லோ, கருப்பை அரண்கள் வ லுவிழந்தாலோ, உள்ளுருப் பாக இருக்கும் கருப்பை கொ ஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கு கிறது.

இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில் அமைகிறது. அதாவது, எப்போ தாவது முக்கும் போதும், இரும் பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.

மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளு ம் போது அது உள்ளே சென்று விடும்.

மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது, எப்போ துமே வெளியே தொங்கியவா று இருத்தல். இந்த நிலையில், சிறு நீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.

நான்காவது நிலைதான் மிகவு ம் மோசமான நிலையாகும். இ தில், கருப்பை வெளியே தொங் கும். இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும்.

இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது.

முதல் கட்டத்திலேயே பெண் கள் மருத்துவரை அணுகுவ தால், சில தகுந்த உடற்பயிற் சிகள் மூலமாக சரி செய்யலா ம் என்பது ஆறுதலான விஷய மாகும்.

யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்

‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச் னை அதிகம் பாதிக்கிறது. நீண்டநேரம் வலியுடன் அவதி, கஷ்டப் பட்டு, முக்கி, குழந்தை யை வெளித்தள்ளுவது, பிரசவ த்துக்குப் பிறகு ஓய் வெடுக்கா தது என இதற்குப் பல காரண ங்கள். பிரசவத்தின்போது தசை கள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல் வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள் களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப் பெலும்புத் தசைப் பகு திகள் பலமிழக் கும்.

கருப்பை இறக்கம் (uterovaginal prolapse) என்பது வயதான பெண்க ளி ல் ஏற்படுகின்ற பொ துவான ஒரு பிரச்ச னையாகும்.

இதன் போது கருப் பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.

கீழிறங்கிய கருப்பை பெண் ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina) இருக்கலாம் அல்ல து சற்று தீவிரமடையும் போது பெண் ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெ ளியே வரலாம், இந்தப் பிரச்ச னை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளி யேறலாம்.

முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை

இந்நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூ லம் குழந்தைகளை பெற்று எடுத்த வர்களுக்கு இந்த நோய் ஏற்படுவ தற்கான சந்தர்ப்பம் குறைவு.

மேலும்அதிகமான குழந்தைகளை பிறப்பு வழியே பெற்றெடுக்கும்போது இந்த கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதி கமாகும். சிலவேளை இந்த கரு ப்பை இறக்கத்தோடு மூத்திரப் பையும்(blader) சேர்ந்து கீழ் இற ங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒருபகு தியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.

கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும் இறங்கியுள்ளது

அரிதாக கருப்பை இறக்கம் இல் லாமல் மூத்திரப் பை மட்டும் கீழ் இறங்கலாம். இப்படி கருப்பை பை இறக்கத்தால்பாதிக்கப்பட்ட பெண் களின் யோனி வழியே pessary எனப்படும் வளையங்களை உட் செலுத்தி தற்காலிக தீர்வு வழங் கப் படலாம்.

தற்காலிக தீர்வு வழங்கும் வளை யங்கள்

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத்தொடங்கும். அந்தரங்க உறுப் பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக் னும் முதுகு வ லியும் இருக்கும். முதல் மற்றும் இர ண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப் பை பகுதியை லேப்ராஸ்கோ ப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடு த்த சில வருடங்களுக்கு இருக்கும்.

3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப ப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும்.

சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழி க்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகு ம் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக் ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மல ச்சிக்க லும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்ற வை யும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற் படலாம். இது பரம்பரையாகத் தொ டர்ந்தால், மருத்துவரிடம் ஆலோ சனை பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ரை அணுகுவது, முதல் நிலை பாதி ப்பாக இருப்பின்,‘ஸ்லிங்’ எனப்படு கிற  அறுவை சிகிச்சையி ன் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, க டினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத்தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்சினை தீவிர மாகாமல்தடுக்கும் வழிகள்…’’

ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப் பில் இருந்து மீள வேண்டுமா னால் சத்திர சிகிச்சைமூலம் கருப்பைப்பை நிரந்தரமாக அகற்ற ப் பட வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: