Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும், பெண்ணுறுப்பின் இறுக்கும் தன்மையும் – ஒரு அலசல்

ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும், பெண்ணுறுப்பின் இறுக் கும் தன்மையும் – ஒரு அலசல்

பாலியல் என்றால் என்ன?

பாலியல் என்பது ஆணோ, பெ ண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்து வதாகும். இது சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings), பாலியல் நடவடிக்கைகள் (Sexual Activities) என்பவற்றை உள்ளடக்கியது.

ஆரோக்கியமான பாலியல் உறவு என்றால் என்ன(Healthy Sex)?

ஒருவரின் பாலியல் உணர்வுகளை, யாரையும் துன்புறுத்தாமல்,

லுக்கட்டாயப்படுத்தாமல், பாலியல் நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற கருத்தரித்தல் இன்றி, முறையாக வெ ளிப்படுத்துவ தாகும்.

பால் என்றால் என்ன What is mean by Sex?

ஆண் / பெண் இருவரின் உயிரியல் தோற்றம் தொடர்பானவை

பெண்: மார்பகம்,யோனி, மாதவிடாய், XX (பெண்),

ஆண்: ஆண்குறி, விதை, விந்துற்பத்தி, XY

இருபாலினத்தவர்: XXY அல்லது XYY

பாலியல் விருப்பு என்றால் என்ன, Sexual Orientations?

எதிர்பாலுடனான ஈர்ப்பு – Desire to have sex with Opposite sex,

அதே பாலுடனான (ஓரின / தன்னின) சேர்க்கை – Desire to have sex with Same Sex, Lesbian (Female), Gay (Male),

இருபாலாருடனான ஈர்ப்பு – Desire to have sex with male and female –Bisexuals,

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன What is mean by sexual feelings?

ஒருவரின் பாலியல் விருப்பத்தை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை. உம்: தொடுதல், முத்தமிடல், தழுவல்…

பாலியல் சுழற்சி என்றால் என்ன Sexual Cycle?

பாலியல் உணர்ச்சியினால் உட லில் எற்படும் உணர்வு மற்றும் மனரீதியான மாற்றங்கள்.

இது நான்கு நிலைகளை கொ ண்டது…

1-தூண்டப்படுதல் Sexual Stimulation, Motivation, Excitement,

இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம். அப்போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். ஆண்களுக் கு விதைகள் சுருங்கும் ஆண்குறி யில் இரத்த ஓட்டமும் அதிகரித்து ஆண்குறி விரைக்கும்.

பெண்களுக்கு முலை காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும்.

2-சமனிலை –Plateau

முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..

3-உச்ச கட்டம் – Orgasm

பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலை யின் உச்ச நிலையில் ஏற்படு ம். இது சில நொடிகளே நீடிக் கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண் குறி சுருங்குத லும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.

4-ஓய்வு நிலை Resolution..

உடல் படிப்படியான அதன் ஆரம்ப நிலைக்கு செல்லும்.

ஆண்களுக்கு ஒரு உச்ச கட் டத்தை அடந்தபின் மீண்டும் செயல் பட நேர அவகாசம் தேவை. பெண்கள் உடனே யே பல உச்சகட்ட ங்களை அடையலாம்.

பாலியல் பிரச்சினைகள்

ஆண்

முன்கூட்டியே விந்து வெளியேறுதல் – Premature Ejaculation

விரைப்புத்தன்மையின்மை பிர ச்சினை. – Erectile Dysfunction

பெண்

யோனி இறுக்கம். Tightness of Vagina. Vaginismus

உடலுறவில் வலி, Dyspareunia,

உடலுறவில் ஆர்வமின்மை, Low sexual desires

இருபாலாருக்கும்

இன்பம் குறைவு Low Sexual Pleasure.

உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை. Difficult to reach Orgasm,

முன்கூடி விந்து வெளியேறுத ல். (Premature Ejaculation)

முன்கூட்டிய விந்து வெளியேற் றம் என்றால் ஆண் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகு ம். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொ துவான பிரச்சினை ஆகும்.

எதனால் முன்கூடி விந்து வெளியேற்றம் ஏற்படுகிறது?

மன உளைச்சல் Depression, Stress.

பதற்றம், Tension,

பெண் தொடர்புகளில் பிரச்சினை – Immoral Contacts

அனுபவமின்மை Lack of Experience

நரம்புத்தளர்ச்சி Nervous Weakness,

விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,

இது ஒரு சாதாரனமான விஷயம் தான், நீங்கள் பயப்பட தேவையி ல்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண் டிய பிரச்சினை இது.

தொடந்து விந்து முந்துதல் பிரச் சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை . நன்கு படித்த அனுபவம் வாய்ந் த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த மருந்துக ளை அளிப்பார்.

விரைப்புத் தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence)

விரைப்புத் தன்மையின்மை என்றால் என்ன ?

பாலியல் உறவை கொள்ளும்போது ஆண்குறி சரியாக விரைக்க வில்லை எனில் அது விரைப்புத் தன்மையின்மை ஆகும்.

இதற்கான காரணங்கள் என்னெ ன்ன?

இது சில நோய்களாலும், உளரீதி யான காரணங்களாலும் ஏற்பட லாம்.

ஆண்மை குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள்,

நீரிழிவு நோய் – Diabetes,

புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைத ல்..

அதிகப்படியாக மது அருந்துதல் – Alcoholism,

சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions.

நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் – Nervous Weakness.

உளரீதியான காரணங்கள். Psychological Reasons

பெண் உறவுகளில் ஏற்படும் பிரச் சினை Relationship Problems.

மன உளைச்சல்/ பதற்றம் Stress / Palpitation.

மன அழுத்தம் Depression..

பாலியல் உணர்வு குறைவு Low Sexual Desires.

விரைப்புத்தண்மை குறை பாட்டை எவ்வாறு தடுப்பது,

கொழுப்பு குறைந்த உணவு கள் உட்கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை.

புகை பிடித்தலை நிறுத்தவும்.

மதுவை குறைக்கவும்

தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்

சரிவிகித உணவு.

விரைப்புத் தன்மையின்மை, ஆண் மை க்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence) சிகிச்சை

பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்து வரை அனுகுவது நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளி க்கும்

உளரீதியான ஆலோசனை.

எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதி யான பாதிப்புகளை குறைக்க உளவிய ல் ஆலோசகரின் ஆலோசனை மிகவு ம் உறுதுணையா க இருக்கும்.

யோனி இறுக்கம் Vaginismus

உடலுறவின் போது பெண்களின் தன் னிச்சையாக ஏற்படும் தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின்போ து வலி எற்படும். சில வேளைகளில் ஆண்குறியை உள்ளே விட முடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.

இது இளம் பெண்களுக்கு பொதுவாக வரலாம்.

யோனி இறுக்கம் Vaginismus எதனால் எற்படுகிறது?

இது ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவது அல்ல. பல காரணங் களின் சேர்ந்து யோனி இருக்கம் ஏற்படலாம்.

உள ரீதிலான காரணங்கள்.

பதற்றம்/ மனஉளைச்சல், Palpitation, Depression,

குழந்தை பருவ அனுபவங்கள் Childhood sexual abuse

வலி மீதான பயம் Fear of Pain during sex.

கர்ப்பமடைந்திருத்தல் Pregnancy,

பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள் Wrong Ideas about sex

ற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள். Rape or Unusual Sexual experience,

உடல் ரீதியான காரணிகள்..

குழந்தை பிறப்பு.Child Birth

ஹார்மோன் மாற்றங்கள். Hormonal Changes

மாதவிடாய் நிறுத்தம் Menarche

யோனி இறுக்கம் Vaginismus சிகிச்சை முறைகள்

யோனி இறுக்கத்தை Vaginismus உடல்/உள ரீதியாக சரிப்படுத்த லாம். உளவியல் ஆலோசனை மூலம் பிரச்சி னைகளை ஆராய்ந் து பிரச்சினையை தீர்க்கலாம்.

மன அழுத்தம் போன்ற நோய்கள் காண ப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடு க்க வேண்டும்.

விரல்களால் அல்லது வேறு கருவிக ளால் சிறிது சிறிதாக யோனி துவாரத் தை விரிவுபடுத்தலாம்.

உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.

இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இத னால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.

உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.எதனால் எற்படு கிறது?

தொடர்பில் பிரச்சினை Relationship Problems

மன அழுத்தம்.Stress

ஒரு துணையுடன் வெறுத் துப்போதல் Boredom with single partner

களைப்பு Weakness

மன உளைச்சல் Depression,

தொடர்பாடல் பிரச்சினை கள் Lack of Sexual Co Operation with partner

இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. No Privacy

பழையகஷ்டமான அனுபவங்கள் Previous Unusual Sexual experience,

நோய்கள் – Diseases

உறக்கம் இன்மை – Loss of Sleep

ஹார்மோன் குறைபாடு – Hormonal Imbalances

டெஸ்டோஸ்டீரோன் குறைவு – Testosterone Imbalance

உடலுறவில் ஆர்வமின்மை –விடுபடுவது எப்படி?

நன்றாக தூங்கவேண்டும்

மன உளைச்சலை குறைக்கவும்

துணையுடன் உள்ள உடல் ரீதி யான தொடர்பில் உள்ள பிரச்சி னையை தீர்க்க வேண்டும்.

பாலியல் வாழ்க்கையை சந் தோசமாக்க வழிகள்.

உடலுறவில் ஆர்வமின்மை மூலம் கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்பட் டாலோ, வேறு நோய் அறிகுறிகள், களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல். போன்ற பிரச்சனை கள் இருந்தாலோ தாமதிக் காமல் உடனடியாக மருத்து வரை ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும்

உடலுறவில் ஆர்வமின்மை சிகிச்சை முறைகள்

உங்கள் துணையிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆ லோசித்து இருவரும் மருத்து வரை / உளவியல் ஆலோசக ரை தயங்காமல், தாமதிக்காம ல், வெட்கப்படாமல், சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறு வதன் மூலம் இந்த பிரச்சனை யிலிருந்து விடுபடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: