Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டொயோட்டாவின் புதிய கரோல்லா அல்டிஸ் கார்களும் அதன் விலைகளும்!

டொயோட்டாவின் புதிய கரோல்லா அல்டிஸ் கார்களும் அதன் விலைகளும்!

டொயோட்டா நிறுவனத்தின் 11வது தலைமுறை கரோல்லா அல் டிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடிப்படை மாட லான ஜெ(எஸ்) ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கரோல்லா அல்டிஸ் புது விதமான

வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் உருவாகியுள்ள அல்டிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினிலும் கிடைக்கும்.

கரோல்லா அல்டிஸ்

கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 138எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். பெட் ரோல் காரில் 6 வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 வேக சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கரோல்லா அல்டிஸ் டீசல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 87எச்பி ஆகும். 6 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடல்

1.8 ஜெ(எஸ்) – ரூ.11.99 லட்சம்

1.8 ஜி – ரூ.13.74 லட்சம்

1.8 ஜி (ஆட்டோ)- ரூ.15.04 லட்சம்

1.8 ஜிஎல் – ரூ.15.38 லட்சம்

1.8 விஎல்(ஆட்டோ) – ரூ.16.89 லட்சம்

கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல்

1.4 ஜெ(எஸ்) – ரூ.13.07 லட்சம்

1.4 ஜி – ரூ.13.64 லட்சம்

1.4 ஜி – ரூ.15.04 லட்சம்

1.4 ஜிஎல் – ரூ.16.68 லட்சம்

கரோல்லா அல்டிஸ் விலை விபரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

Posted by AUTOMOBILE TAMILAN

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: