Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க . . .

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியா ய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவ ரும் ஏதாவது ஒரு தருணத்தில் கா தலை சந்தித்திருப்பார்கள். விட லைப் பருவத்திலோ, பணி புரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப் போயிருக்கு ம். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல

எந்த நொடியில் காதல் தோன்று ம் என்பதை சொல்ல முடியாது. எந்தவித நிபந்தனையும், எதிர்பா ர்ப்பும் இல்லாததுதான் உண்மை க்காதல் என்கின்றனர் நிபுணர்க ள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச் சியாய் இருக்க அனுபவ சாலிகள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன்.

சுயநலம் பார்க்காது:

உண்மையான காதல் சுய நலம் பார்க்காதது. உண்மை காதலுக்கு கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. தான் நேசிக்கும் நபரின் உணர்வுக ளுக்கு மதிப்பளிக்கும், அவர் களின் மனதையோ, உடலையோ ஒருபோதும் காயப்படுத்த நி னைக்காது. தெய்வீகமான அன்பு இருந்தால் எத்தகைய வலிக ளையும் தாங்கிக் கொள்ளும் என்கின்ற னர் காதலில் மூழ்கிய அனுபவசாலிகள். எனவே உங்கள் துணையிடம் சுயநல மற்ற அன்பை செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு அந்த அன்பு இரு மடங்காக கிடைக்கும்.

எதிர்பார்ப்பு அற்ற அன்பு:

காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் ஏற்படுவது இன்றைக்கு அபூர்வமாகிவிட்டது. இன்றைக்கு பெரும் பாலான காதலர்களுக்கிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள்தான் பிரச்சினைக்கு மூலகாரணமாகிற து. காதல் திருமணம் செய்து கொ ண்டவர்கள் சண்டையிட்டு பிரிவத ற்கு காரணம் இத்தகைய எதிர்பார் ப்பும், நிபந்தனைகளும்தான் என்கி ன்றனர் நிபுணர்கள். அவ்வாறெல் லாம் இல்லை என்று நினைப்பவர்க ள், உங்கள் வாழ்க்கைத்துணையிட ம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங் களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உ ண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலே யே எந்த ஒரு சண்டையும், பிரச்ச னையும் இருக்காது.

நிபந்தனை வேண்டாமே:

மனைவி அல்லது காதலியிடம் நிபந் தனை விதிப்பதை தவிருங்கள். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என் று ஆரம்பித்து ஒவ்வொரு விசயத்திலும் கட்டுப்பாடு விதிக்கப் போய் அதுசிக்கலில் கொண்டுபோய் விடும். எனவே நம் அன்பிற்குரியவர் கள் நாம் சொல்லும் பேச்சை கேட்டா லும் சரி, கேட்காவிட்டாலும் சரி அவ ர்களின் சுதந்திரத்தில் தலையிடாம ல் அவர்களை நிர்பந்திக்காமல் இரு க்கவேண்டும் அதுதான் உண்மையா ன அன்பு.

முழுமனதோடு நேசியுங்கள்:

அன்பிற்குரியவர்களை முழு மனதோடு நேசியுங்கள். அவர்களின் மனது நோகும் படியாக ஒரு வார்த்தையோ, செயலோ இ ருக்க வேண்டாம். அத்தகைய வார்த்தைக ளும், செயல்களும்தான் அன் பிற்குரியவர் களின் மனதை நொறுக்கிவிடும். எனவே பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல் களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தினமும் என்னை கவனி:

சின்னக்குழந்தைகளுக்கு எப்படி பெ ற்றோர்களின் அன்பும் அரவணைப் பும் முக்கியமோ அதைப் போலத்தா ன் அன்பிற்குரியவர்களும் எப்பொழு தும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒ வ்வொரு நொடியும் நம்கவனம் அவ ர்கள் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவேண் டும். சிறிது இடைவெளி ஏற்பட்டால் சுணங்கி போய்விடுவார்கள். எனவே அன்பானவர்களை அக்க றையுடன் கவனிப்பாது காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்கின்றன ர் அனுப வசாலிகள்.

காதல் வாழ்க்கையில் இவற்றை பின்பற்றினால் அது கசந்துபோகாம ல் என்றைக்கும் புதிதாய் பூத்த மல ராய் மணம் வீசும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: