Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!

தன்னம்பிக்கை உள்ளவன் பார் வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். மு ன்னோக்கிச் செல்வது என்பதே அ வனது வாழ்விற்கு அவன் அமைத் துக்கொண்ட சட்டமாகவும் இருக் கும். அதுவே அவனது இலட்சியம்.

முன்னோக்கிய பார்வை தேவை

குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப்

பார்க்கும் கண்ணாடி போடுகிறோமே ஏன்? மாடுகள் போல குதிரைகள் மெதுவாகச் செ ல்லக்கூடியவை அல்ல; வேகமாகச் செல்ல வேண்டியவை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போனால் அதன் வேகம் தடைப் பட்டுப் போய்விடும். முன்னோக்கிப் பார்ப்பத ற்கு மட்டுமே அவை பழக்கப்பட்டிருக்கின்றன. அப்பொழு து தான் அதன் வேகம் அதிகமாகும். செல் ல வேண்டிய இடத்தைச் சீக்கிரம் சென் று அடையமுடியும்.

நமது வாழ்க்கையையும் நாம் மு ன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளவேண்டும். வளர்ச்சிக்கு அதுதான் வழி. கவனத்தைச் சித றவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந் தால், ஆங்காங் கே நின்று நின்று போனால் நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற் குப் போய்ச்சேர முடியாது.

நிகழ்காலமே உயிருள்ள காலம்

அதேபோல வாழ்க்கையைப் பின்னோக் கிப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும் ப யனில்லை. வாழ்வில் நடந்ததற்காகவும் கடந்தத ற்காகவும் வருந்திக் கொண்டிரு ப்பதும் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை யாகும்.

தன்னம்பிக்கை உடையவன் ஒருகாலும் கடந்த காலக் குறைபாடுகளை எண்ணி மறுகிக் கொண்டிருக்கமாட்டான். கடந்த து இனி மீளாது என்பது அவனுக்குத் தெரி யும். அதனால், நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைக ளாக இருக்கட்டும் என்று ஒரு மு டிவுக்கு வருவான். நடந்த தவறு களிலிருந்து விடுபட முயல்வான். அவற்றிற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப் பான். முன்னோக்கிச் செல்வதில் நாட்டங்கொள்வான்.

நடந்தது வாழ்க்கையின் கடந்த கால வரலாறே தவிர உயிருள்ள வை நிகழ்காலம்தான். நிகழ்கா லச் சாதனைகளே வெற்றி நிறை ந்த வரலாற்றை உருவாக்கும்.

மகிழ்ச்சியானவற்றை நினைவு கூருங்கள்

முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர் வந்த பாதைகளை அனுபவ ங்களை வருங்கால வளர்ச் சிக்கு உதவியாக எடுத்துக்கொள்வ தோடு நிறுத்திக்கொள்ள வேண்டு ம். உற்சாகமான செயல்பாடுக ளாக இருந்தால் சிறிது நேரம் அசைபோ ட்டுப் பார்க்கலாம், அவ் வளவுதான். கடந்தகால நிகழ்ச்சிகளே வாழ்க் கை ஆகிவிடாது.

பழம்பெருமைகளைப் பேசாதீர்கள்

இன்றும் நாம் நடைமுறையில் காணலா ம், பின்னோக்கிச் செல்பவர்கள் பழம் பெரு மைகளையே பேசிக்கொண்டிருப்பார்கள். பழம் பெருமை யாருக்கு வேண்டும்? உங் கள் தாத்தாவும் தந்தையும் செய்தவை உங் கள் சாதனைகள் ஆகிவிடுமா?

நான் இளமையில் அப்படி இருந்தேன், வா லிபத்தில் இதை இதைச் செய்தேன், வயதில் இப்படி இருந்தேன் என்று ஒரு பெரியவர் சொல்வாரானால் அதற்கு என்ன பொருள்? அவரால் இப்போது எதுவு ம் முடியவில்லை என்பது தானே பொருள். இவர்கள் உயிரோடு இருக்கும்போ தே  இறந்து போனவர்கள் என்றுதான் சொல்ல வே ண்டும்.

ஆற்று நீர் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்

அன்றியும் பழம்பெருமை பேசுபவர்கள் , வாழ்க்கையைப் பின்னோக்கி மட்டு மே பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அ வர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை . ஏதோ இருக்கிறார்கள் என்று பொரு ள். இனி நாம் எதுவும் செய்ய இயலாது என்ற தன்னம்பிக்கையை இழந்து விட் டார்கள் என்பது பொருள்.

இத்தகையவர்களை நீங்கள் சந்தித்தே இருப்பீர்கள். அவர்களை உங்கள் மனம் விரும்புகிறதா? என் றுபாருங்கள். நிச்சயமாக இல்லை . அத்தகையவர்களை நீங்கள் வெ றுக்கவே செய்கிறீர்கள். அவர்கள் நட்பை ஒதுக்கவே செய்கிறீர்கள்.

பழம்பெருமை பேசுகின்ற யாருக் கும் இதே நிலைதான் ஏற்படும். நா மும் இந்தத் தவற்றினைச் செய்யா மல் எச்சரிக்கையாக இருக்க வே ண்டும். தன்னம்பிக்கை உள்ளவன் ஆற்று நீர்போல ஓடிக்கொண்டே இருப்பான். அ வன் ஒருபோதும் குட்டைபோலத் தேங்கு வதே இல்லை. வாழ்க்கை தேங்கினால் வளர்ச்சி முடிந்துவிட்டது என்றுபொருள்.

சிலர் கை குலுக்குவதைப் பாருங்கள்

ருவரைஒருவர் கை குலுக்குவ தைப் பாருங்கள். கையை யார் முன் னோக்கி நீட்டுகிறார்களோ அவர்க ளைத்தான் கைகுலுக்கி வரவேற்கி றார்கள். கையை பின்னால் கட்டிக் கொண்டு நிற்பவர்களுக்கு? அவர்க ள் தோற்றமே நமக்கு எதைப் புலப் படுத்துகிறது? இவர் கை குலுக்குவ தற்குத் தயாராக இல்லை, விரும்பவும் இல்லை என்பதுதானே பொருள்? அதனா ல்தானே கைகுலுக்கி வரவேற்கின்ற இட த்தில் கூட இவர் ஜோப்பில் கை விட்டுக் கொண் டிருக்கிறார்.

இத்தகையவர்கள்தாம் பின்னோக்கிச் செல்பவர்கள். இவர்கள் எவ்வளவு பெரி யவர்களாக இருந்தாலும் இவர்களது நட்பு நமக்கு த் தேவையானது அல்ல.

கைகுலுக்கலில் ஓர் ஆற்றல் பிறக்கிறது

கைகுலுக்குவதில்கூட கவனித்துப்பாருங்கள். 60ம் 70ம் கடந்தவர்கள்கூட ஏனோ தானோ? என்று இல்லாமல் குலுக்க வேண்டியவர் கை யைக் கெட்டியாகப் பிடித்துக்குலுக்குவார்கள். இரும்புப் பிடிபோல் ஓர் பிடிப்பு இருக்கும். அந் தக் கை குலுக்கலில் ஓர் ஆர்வம், ஓர் உற்சாக ம், ஒருவேகம் பிறக்கும். வாழ்க்கையை மகி ழ்ச்சியாக சுறுசுறுப்பாக இருக்கக் கற்றுக்கொ ள்; இப்படி சோம்பல் முறித்துகொண்டு இருக்காதே என்பது அந் தக் கை குலுக்கல் நமக்கு குற்றுக் கொடுக்கின்றபாடம்.

மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குங்கள்

தன்னம்பிக்கை உள்ளவன்தான் கை களை நீட்டுகிறான். வாய்ப்பை எதிர் நோக்கிச் செல்கிறான். கைகுலுக்க ல் கிடைக்கின்றது. மகிழ்ச்சியை ப கிர்ந்து கொள்கிறான். பிறர் மகிழ்ச் சியை இரட்டிப் பாக்குகிறான். தன் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக ஆக் கிக்கொள்கிறான். மகிழ்ச்சி ஆற்றலைப் பெருக்குகிறது. அவன் படிப்படியாக முன் னேறுகி றான்.

கைகளை நீட்டுங்கள்

முன்னோக்கிச் செல்வதுதான் தன்னம்பிக் கை, எழுந்திருந்தால்தான் விடியல். எழுந் து எழுந்து படுத்துக் கொண்டவர்களுக்கு விடியலும் இல்லை; விடிவும் இல்லை. எ ப்போதும் இருள்தான். அவர்களுக்கு நன் பகல் கூட இருளாகத்தான் தோன்றும்.

கைகளை நீட்டுங்கள், உங்களுக்கு நிச்சயம் கைகுலுக்கல்கள் கிடைக்கும். முன்னோக் கிச் செல்லுங்கள், முன்னேற்றம் வழி தேடி உங்களுக்காக வந்து கொண்டிருக்கிறது.

– மரு. எல்.எஸ். கந்தசாமி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: