Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (1/6/14): என் மனதைக் கொடுத்ததுடன், மூன்று முறை என்னையும் கொடுத்தேன்

அன்பு அம்மாவுக்கு வணக்கம்.

நான், 23வயதுப்பெண். முதுகலை அறிவியல் இறுதியாண்டு படித்து வருகிறேன். என் குடும்பம் மிகவும் ரம்யமானது. என் அப்பா, அம்மா மற்றும் என் நான்கு அண்ணன்க ளுக்கு என்மீது மிகுந்த பாசம். அதே அளவு கண்டிப்பும் உண்டு.

இரண்டு அண்ணன்கள் திருமணம் ஆனவர்கள். ஒரு சகோதரர், தொழிற்கல்வி படித்து முடித்து, வே லை பார்க்கிறார். இன்னொரு

வர், தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு படிக்கிறார். என் அப்பாவின் கண்டிப்பு, சிற்சில சமயங்களில் அதிகமாகவும், வார்த்தைகள் கடுமையாகவும் இருக்கும். அப் போது என் மனம் நொந்து, தற் கொலையை நாடும். ஆனால், தற்கொலை என்பது, முட்டாள் களின் செயல் என்பதால், அதை விட்டு விடுவேன்.

என் அப்பா குடிப்பழக்கம் உடை யவர். எனவே, என் அம்மாவை சந் தேகித்து பேசுவார். அதனாலேயே எனக்கு ஆண்களைப் பிடிக் காது. சில வேளைகளில் என் அப்பா, என் மீதும் சந்தேகப்படுவார். நான் படித்தது எல்லாம் இருபாலர் பயிலும் பள்ளி, கல்லூரி என்பதா ல்தான், இவ்வாறு நடந்து கொள்கி றார் என்று நினைத்து, நான் , பிற ஆண்களிடம் பேசவோ, அவர்க ளை நிமிர்ந்து பார்க்கவோ மாட்டே ன். இதனாலேயே, திருமணமே செ ய்து கொள்ள கூடாது என்ற முடிவு க்கும் வந்தேன்.

நான் முதுகலை பட்டப்படிப்பில் சே ர்ந்த போது, என் வகுப்பு மாண வன் ஒருவனின் நட்பு கிடைத்தது. என் னுடன் பாசமாக பழகுவான். கண்டிப்பு இல்லாமல், பாசம் மட்டு மே காட்டும் அவனை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் வீட்டி ல் எவ்வளவு பாசம் காட்டுவரோ, அத்து ணை பாசம், அவன் ஒருவன் மூலமே என க்குக் கிடைத்தது. அதனால், அவனை, என் நண்பனாக ஏற்றுக் கொண்டேன். என் நண்பனுக்கு ஒரு காதலி உண்டு; அவளும் எனக்கு தோழியானாள். ஒரு கட்டத்தில் அவள், அவனை வெறுத்து, அவனது ஜாதி யை காரணம்காட்டி விலகி விட்டாள். என வே, இவன் தற் கொலைக்கு, முயன்றான். பின், நண்பர்கள் அனைவரும் வழங்கி ய ஆலோசனைகளால், அவள் நினைவுகளில் இருந்து மீண்டான்.

இதற்கிடையில், நாங்கள் நண்பர்க ளாக பழகுவதற்கு முன்னரே, நாங்க ள் தனியாக பேசிய ஒரு சந்தர்ப்பத்தி ல், என்னுடைய விருப்பங்களான, வேலை பார்த்து, கைநிறைய சம்பா தித்து, ஊனமுற் றோருக்கு உதவ வே ண்டும்; இரு குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பதை கூறியிருந்தேன். அதில், அவனுக்கு ம் உடன்பாடு இருந்தது.

அவனை, என் கூட போட்டி போட்டு படிக்க வைத்து, சராசரியாக படித்துக் கொண்டு இருந்தவனை முதல் நான்கு இடங்களுக்குள் கொ ண்டு வந்தேன். அவனிடமிருந்த தீய குணங்களை, அவ்வப் போது எடுத்துக்கூறி மாற்றினேன்.

இந்நிலையில், ‘நீ இல்லாமல் என் னால் இருக்க முடியாது; உன் னை, யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ, எனக்கு வேண்டும்…’ என்பது போன்று, சொல்லிக் கொண்டே இருப்பான். ‘எறும்பு ஊற கல்லும் தேயும்’ என்பது போ ல, என் மனமும் கரைந்தது. அவன் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து, த ற்போது, முதுகலை பயிலுகிறான். நாங்கள் வேறு வேறு ஜாதி என்ப தால், என் வீட்டில் ஒத்துக் கொள் ள மாட்டார்கள். ஆனாலும், நிலை யான வேலை அவனுக்கு கிடைக் கும் என்பதால், வீட்டில் அது குறித் து பேசி சம் மதம் வாங்கலாம் என நினைத்து, நானும் சம்மதம் தெரி வித்தேன். அவனைத் தானே திருமணம் செய்யப்போகிறோம் எ ன்ற எண்ணத்தால், என் மனதைக் கொடுத்ததுடன், மூன்று முறை என்னை யும் கொடுத்தேன்.

நாங்கள் காதலிப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம் . இந்நிலையில், ஒருநாள், என்னு டைய தோழிகளின் தொலைபேசி எ ண், அவனுக்கு கிடைத்தது. அதிலிரு ந்து என்னை கொஞ்சம் ஓரம் கட்டினான். நானும், எங்கள் வகுப் பில், அனைவருமே நண்பர்களாக பழகுவதால், நண்பர்கள்தானே என்று கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதுவே தொடர்ந்ததால், எ ன் வருத்தத்தை, அவனிடம் கூறி னேன். என்னை கோபமாக திட்டி னான்.

இச்சூழ்நிலையில், என் காதல் விவ காரத்தை என் நெருங்கிய தோழியி டம் கூறினேன். அவள், எனக்காக அவனிடம், ‘ஏன் பழைய காத லியையே நினைத்துக் கொண்டு என் தோழியை இம்சிக்கிறாய்…’ என்று கேட்டதற்கு, நான் தான் அவனிடம் காதலை சொன்னதாக வும், அவனைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறியிருக் கிறான். இதை அவள் என்னிடம் சொன்னவுடன் எனக்கு உயிரே போய் விட்டது. இதனால், மிகவும் மன உளைச்சலாக உ ள்ளது. எச் சூழ்நிலையிலும், என்னுடைய படி ப்பிலிருந்து தவறிய தில்லை. என் வகுப்பில், முதல் இடத்திலேயே உள்ளேன். மேலும், என்எதிர்காலத்தை நினைத்தால், மிகமிக பயமாக உள்ளது. நான் இனி எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று கூறுங் கள் அம்மா. உங்கள் பதிலுக்குப்பின் தான், என் வாழ்க்கையே உள்ள து.

— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு,

உன் நண்பனின் துர்நடத்தைகளை பற்றிய ஆவலாதிகளை, அள் ளிக் கொட்டியிருந்தாய். குடிகார தந்தை மற்றும் கண்டிப்பான அ ண்ணன்மார்களுக்கு இடையே வளர் ந்த உனக்கு, ஆண்கள் மீதான வெறு ப்பு, விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆனால், உன் வெறு ப்புணர்வை, உன் ஹார்மோன் வெட்டி சாய்த்துள்ளது. காதலில் தோல்வியடைந்தவன், உன் னை கெஞ்சி, கொஞ்சி, கும்பிட்டு, ம ண்டியிட்டு யாசித்து, உன் காதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உன் உடலை, பரிசளித்திருக்கிறாய்.

மகளே… உன் காதலன், ஒரு சுழல்பந்து வீச்சாளரைப் போன்றவ ன். ஆப் ஸ்பின்னோ, லெக் ஸ்பின்னோ, கூக்லியோ வீசி பெண்க ள் விக்கெட்டை சாய்க்க முயற்சிக்கிறவ ன். உன் விக்கெட்டை வீழ்த்தி விட்டான். அதனா ல், உன் மீதான பிரமிப்பு விலகிவிட்டது. ஏற் கனவே காதலித்தவளின் உடலை, அவனால் அடையமுடியவில்லை. அதனால், அவள் வி க்கெட்டை வீழ்த்த, சதா சர்வகாலமும் யோசி த்தபடி அலைகிறான். கும்கி யானையை வை த்து, மற்ற காட்டு யானைகளை பிடிப்பதுபோல, உன்னை வைத்து, உன் தோழிகளையும் பிடிக்க முய ற்சிக்கிறான்.

அவன் உன்னை சந்தேகிப்பதாக கூறியிருந்தாய். ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்ற கிராமத்து சொல்லாடல், உன் நண்பனுக்கு பொருந்தும். தீயநடத்தை கொண்ட அவ ன், உன்னை சந்தேகிப்பது இப்படித்தான்.

உன் காதலன், நவீன ஆண்களின் பிரதி நிதி. இன்று, 99 சதவீதம் காதலர்கள் சுயநலவாதிகளாகவும், கிளைக்கு கிளை தாவும் குரங்காகவும், வாய் சவடால் பேர்வழிகளாகவும் திகழ்கின்ற னர். பொதுவாகவே காதலில் பெண்கள் தூண்டில் மீனாகின்றன ர். வெள்ளித் திரையிலோ, சின்ன த்திரையிலோ மகிமைப்படுத்தி காட்டப்படும் காதல், நிஜவாழ்க் கையில் இல்லை. இன்றைய காதல், ஒரு வர்த்தகம் போல மா றிவிட்டது. ஆணும், பெண்ணும் ஈடுபடு ம் இந்த வர்த்தகத்தில், பெண்களுக்கு மட்டுமே நஷ்டம்; ஆண் களுக்கோ கொள்ளை லா பம். அவனை நீ மணந்துகொண்டால், உன் வாழ்க்கை, நரகம் தான்.

உன் காதலனை விட்டு விலகி செல். அவனை, நீ காதலித்ததற் கான ஆதாரங்கள் ஏதாவது அவ னிடம் இருந்தால், அதை அவனி டமிருந்து பெற்று, அழித்து விடு.

கைநிறைய சம்பாதித்து ஊனமு ற்றோருக்கு உதவுதல், இரு குழந் தைகளை தத்தெடுத்து வளர்ப்பது தான் உன் நோக்கம் என, எழுதி யிருக்கிறாய். அதை செயல்படுத்த நன்றாக படித்து, நல்ல வேலை க்கு போ. உன் எண்ணத்தை முழுமையாக நிறைவேற்ற முடியா விட்டாலும், சிறிதளவாவது நி றைவேற்று. பின், உன் பெற்றோ ர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள். சுய நல ஆண்களின் காதல் வலை யில் சிக்கத் துடிக்கும் இளம் யுவதிகளுக்கு, தகுந்த அறிவு ரை கூறி, நல்வழிக்காட்டு.

பெஸ்ட் ஆப் லக் மை டியர்.

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: