Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவது . . .

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவ து . . .

கண்ணால் பேசும் பயக முன் னே நில்லாதே…’என்று, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண் கள் மிக எச்சரிக்கையாக இருக் க வேண்டிய காலம் இது. வீட்டி லிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இரு க்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய

ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்…

ரைப்யன்- ருக்மரேகை என்ற அரச தம்பதி களுக்கு, ஏகாவலி என்ற பெண் இருந்தா ள். அவள், திரபதியைப்போல, யாக அக்னியில் தோன்றியவள்.

அரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய யசோவதியும் இணை பிரியாத தோழிகள்.

அவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந் த, தாமரைக்குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து என்று சொல்லியு ம், அப்பெண்கள்கேட்கவில்லை. அதனால், அவர்கள்பாதுகாப்பி ற்காக, வீரர்களை அனுப்புவார் அரசர்.

கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என் பார்களே… அதுபோல, ஒருநாள், வழக் கம் போல் பெற்றோர் சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில் குளி த்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிரு ந்தனர். அப்போது, காலகேது என்ற அர க்கன் அப்பெண்கள் இருவரையும், தூ க்கி சென்று, சிறையில் அடைத்து விட் டான்.

அரக்கனுக்கு, அரச குமாரியான ஏகா வலி மீது ஆசை ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை தொந்தரவு செய்தான். யசோ வதி, ஒரு சித்த யோ கியிடம், அம்பிகையின் மஹாமந்திர த்தை, மூலத்தியானத்தோடு உபதே சம் பெற்றவள்.

அதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக உச்சரித் து, ‘தாயே… எங்களைக் காப்பாற்று…’ என, வே ண்டினாள்.

யசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து, ‘யசோவதி, துயரப்படாதே… நீ கங்கைக் கரைக் குப் போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன் வருவான். தலை சிறந்த வீரனான அவ ன், தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உப தேசம் பெற்றவன். அவன் உங்களை இந்த சிறை யிலிருந்து விடுவிப்பான். ஏகாவலி அவ னையே கணவனாக ஏற்கட்டும்…’ என்றாள்.

கனவு கலைந்தது. அம்பிகையி ன் அருளால், அவர் கூறியபடி யே செய்தாள் யசோவதி. அரக்க னைக் கொன்று, அவர்களை வி டுதலை செய்தான் ஏகவீரன். அ வனுக்கும், ஏகாவலிக்கும் திரு மணம் நடந்தது. இத்தம்பதிகளு க்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த து. அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர். இந்த கிருதவீ ர்யன் மகன்தான், கார்த்த வீர் யார்ஜுனன். பரசுராம ரால் கொல்லப்பட்ட கார்த் தவீர்யன் இவன் தான்.

ராமாவதாரத்திற்கு முன் நி கழ்ந்த, பரசுராம அவதார காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண் களைப் பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கி றான் என்றால்… அரக்க குணம் கொண்டவர்க ள் எக்காலத்திலும் உண்டு; அது, இக் காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள் புரிந்து, எப் போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை உணர் வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது!

-பி.என்.பரசுராமன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: