Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'நமோ'வை நம்புவோம்! – நல்ல‍தையே செய்வார்!

‘நமோ’வை நம்புவோம்!

2014,ஜுன் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை 

ஸ்ரீராம்பிரானின் பட்டாபிஷேகத்திற்காக காத்திருந்த அயோத்திப்போல … மோடியி ன் பிரதமர் பதவிக்காக காத்திருந்தது பாரத தேசம் என்று சொல்லும் அளவிற்கு இந்திய மக்க‍ளுக்கு நரேந்திர மோடியிட ம் எக்க‍ச்சக்க‍ எதிர்பார்ப்பு இருக்கின்றது.

வ‌ரலாறு காணாத அளவில் காங்கிரஸ் கட்சி வீழ்ந்திருப்ப‍தும்… எதிர்பார்ப்புக்க ளை கடந்த வெற்றியை பா.ஜ.க பெற்றிருப்ப‍தும் இந்திய மக்க‍ள் மிகப் பெரிய

மாற்ற‍த்தை விரும்புவதன் அடையா ளமாகும்.

வ‌றட்சி, புயல், சுனாமி என இய ற்கையின் அத்த‍னை சீற்ற‍ங்க ளையும் தாண்டி குஜராத் மாநி லத்தை உலகளவில் பேச வை த்த‍ப் புரட்சியாளர் மோடியின் ஆளுமை-ஆட்சிமுறை-அணுகு முறை இந்திய மக்க‍ளின் கவன த்தை ஈர்க்க‍… இவரால் இதுவும் முடியும். இன்ன‍மும் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த்த‍ன் விளைச் சலே இந்த விஸ்வ ரூப வெற்றி.

தேநீர் கடைக்காரரை, தன் வேட்பு மனுவை வழிமொ ழிய அழைத்த‍ மோடி அவ ரையே தன் பதவியேற்பு விழாவிற்கும் அழைத்த‍து அவரது பணிவு மாறாத பண்பை வெளிப்படுத்தியது என்றால், பாராளுமன்ற படிக்கட்டுக்களை வணங் கி முத்த‍மிட்டு என் தேசம் என் தாய் – ஒரு தாய்க்கு ஒரு மகன் செய் ய‍ வேண்டிய கடமைக ளை செய்வேன் என்று சொன்ன‍து பாரத தேசத்தையே பரவசப் படுத்தியது.

அண்டை நாட்டுத் தலைவ ர்களைப் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது… கட்சி வேறு, ஆட்சி வேறு என்பதை மந்திரிகள் தேர் வில் வெளிப்படுத்தியது. … குறைந்த அமைச்சர்கள் நிறைந்த நிர்வாகம் என்ற கொள்கையை நடைமுறைப் படுத்திய து… இவை யாவும் மோடியை வித்தியாசமான மனிதராக வெளிப் படுத் தின•

தனிப்பெரும்பான்மை இருந்தும் கூட்ட‍ணி கட்சிகளுக்கு அமைச் சரவையில் இடம் … மாநிலங்க ளின் பிரச்சனைகளுக்கு முன்னு ரிமை… அமைச்ச‍ர்கள் தங்கள் சொந்தங்களை நிர்வாகத்திலிரு ந்து தள்ளி இருக்க‍ச் செய்ய‍ வே ண்டும் என்ற ஆணை… 100 நாட் களுக்குள் செயலாக்க‍ அறிக் கைத் தர அமைச்ச‍ர்களுக்கு அறி வுரை… தன் வாழ்க்கை வரலா று பாட நூல்களில் இடம் பெற வேண்டாம் என்ற கண்டிப்பு … ஆஹா! நரேந்திர மோடி நம்பிக் கைத் தருகிறார்

ஆனால் அவரைச் சார்ந்தவர்க ளில் ஒருவர் 370 சட்ட‍ப்பிரிவை ப் பற்றி பேசுகிறார். மற்ற‍ அமை ச்ச‍ரோ இஸ்லாமியர்களும் கிறி ஸ்த்துவர்க‌ளும் மைனாரிட்டி இல்லை என்கிறார். பொது சிவில் சட்ட‍ம் விரைவில் அமுல் ஆகு ம் என்கிறார் இன்னொருவர். இப்ப‍டி தலைக்குத்தலை நாட்டா மை நரேந்திர மோடிக்கு தலைவலிதான். இவை தவிர்க்க‍ப்பட வேண்டும்.

மாநில நிர்வாகம் வேறு, தேச நிர்வாகம் வேறு என்பதை உணர்ந் து தெளிவான சிந்தனையுடன் வெளிப்படையான செய ல்பாடுகளுடன் பதவி ஏற்றிருக்கும் நரேந் திரமோடிதான் நம் தேசத்தின் ஒற்றை நம்பிக்கை.

நரேந்திர மோடிக்கு வாய்ப்பும் அவகாசமும் தருவோம்.

உரத்த‍ சிந்தனையுள்ள‍ நமோ நல்ல‍தையே செய்வார் என்று நம்புவோம்.

=> உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: