Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுயதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி?

சுயதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி?

வேண்டிய பொருட்கள்

வேக்ஸ்(wax)
க்ரையான்ஸ்
தேங்காய் எண்ணெய்
திரிநூல்
ப்ளாஸ்டிக் மோல்டிங்
எசன்ஸ் – ஜாஸ்மின், தாழம்பூ

தயாரிப்பு முறை
மெழுகுவர்த்தி செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத் தையும்

தயாராக எடுத்து வைக்கவு ம்.

ஒரு சில்வர் பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி வைக்க வும். அதன் உள்ளே சிறிய பாத்திரத்தில் வேக் ஸை கொட்டி அடுப்பை ஆன் செய்யவும். தண்ணீர் நன்கு கொதிவந்ததும் வேக்ஸ் மெ ல்ல உருக தொடங்கும். ப்ளா ஸ்டிக் மோல்டிங்கில் உள்ள ஒரு டிசைனுக்கு 3 மேசைக்கரண்டி அளவு வேக்ஸ் தேவைப்படும்.

வேக்ஸ் உருகி தண்ணீர் போல் வந்ததும் விரும்பிய க்ரையான்ஸ் நிறத்தை துருவி சேர்க்கவும். கரண்டி அல்லது கத்தியால் அவை கரையும் வரை கிளறி விடவும். க்ரையான்ஸ் எவ்வளவு சேர்க் கிறோமோ அதற்கு தகுந்தாற் போல் தான் மெழுகுவர்த்தி நிறம் அமையும்.

அதில் விரும்பிய எசன்ஸை சேர்த் து நன்கு கலக்கி விடவும்.

மற்றொரு நிறத்தில் செய்யவேண்டுமெனில் பாத்திரத்தை சுத்த மாக்கி எடுத்துக் கொண்டு மேற் சொன்ன முறையில் தயார் செய்ய வும்.

வேக்ஸ் உருகி கொண்டிருக்கும் நேரத்தில் ப்ளாஸ்டிக் மோல்டிங் முழுவதும் தேங்காய் எண்ணெ யை சற்று அதிகமாக தடவி வைக் கவும். அதிலுள்ள துளையில் திரி நூலை கோர்த்து அடியில் ஒரு இ ன்ச் இருப்பதுபோல் வைத்துவிட்டு மீதியை மோல்டிங் உள்ளே வைத் துவிடவும்.

ப்ளாஸ்டிக் மோல்டிங்கை பின்பக்கமாக திருப்பி திரிநூல் நுழைத் த பக்கத்தில் மெழுகுவர்த்தியை ஏற் றியப்பின் உருகும் வேக்ஸை அந்த திரியின் ஓரங்களில் துளைகள் எது வும் தெரியாதவாறு அடைத்து வைக் கவும்.

க்ரையான்ஸூம், வேக்ஸூம் நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு திரிநூல் போட்டு தயாராக வைத்திருக்கும் மோல்டிங் நிரம்ப ஊற்றவும்.

சிறிது நேரத்தில் இறுக ஆரம்பிக்கும். 5 அல்லது 6மணிநேரம் கழித்து பார் க்கும் பொழுது நன்கு இறுகி மோல்டிங்கில் ஒட்டாமல் சற்று விலகி இருப்பதுபோல் இருக்கும்.

மோல்டிங்கில் ஊற்றிய மெழுகுவர்த் தி ஒருமணிநேரத்தில் இறுகினது போ ல் தெரிந்ததும் அதனை அகலமான பாத்திரத்தில் போ ட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குளிர்ந்த பிறகு தனி யாக கழ ற்றி எடுத்துக் கொள்ளலாம். அதிக நேரம் வைத்து இருப்பதற்கு பதிலாக இதுப்போல் செய்யலாம்.

பின்பக்கத்தில் மெழுகுவர்த்தியால் அடைத்த பக்கத்தை சுரண்டி எடுத்து விட்டு மெழுகுவர்த்தியை தனியாக எ டு த்து வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் தயார். மோல்டிங் இல்லையென்றால் ஏதாவ து ஒரு சிறிய பாத்திரத்திரத்தை அச்சாக பயன்படுத்தி செய்யவும்.

ஒருகண்ணாடி டம்ளரில்பளிங்கு கற்கள், பூ, பழத்துண்டுகள் ஏதா வது ஒன்றை கால்பாகம் வரை நிரப்பி டம்ளர் முழுவதும் தண் ணீர் ஊற்றி அதன் மேல் மெழுகு வர்த்தி மிதக்கவிட்டு ஏற்றி வைக்கலாம்.

மோல்டிங் பின்பக்கத்தை மெகுவர்த்தியால் அடை க்காமல் செய்தால் வேக் ஸை உருக்கிஊற்றும் பொழுது அந்த துளையி ன் வழியாக வழிந்தோ டும். பாத்திரத்தில் செய்யு ம் பொழுது இதுப்போல் அடைத்து செய்ய வேண் டிய வேலை இருக்காது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: