ஜாலியான காதல் படத்தில் வில்லி யாக மாறிய நடிகை பூனம் பஜ்வா
தமிழில் ‘சேவல்’ படம்மூலம் அறிமு கமானவர் பூனம்பஜ்வா. அத ன்பிறகு ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘து ரோகி’, ‘தம்பிக் கோட்டை’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் வாய் ப்புகள் கிடை த்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக் கு முன்னுரிமை கொடுத்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப்
பிறகு தமிழில் நடிக்கிறார்.
இதுவரை கதாநாயகியாக நடித்து வந்த பூனம் பஜ்வா தற்போது வில்லி வேடத்தில் நடிக்கிறார். லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலி யட்’ படத்தில் தான் அவர் வில்லியாக வருகி றார். இப்படம் முழுவதும் வருவது மாதிரி யான வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்த கேரக்டர் தன்னை அழுத்தமாக நிரூபிக்கும் என்று நம்புவதாக பூனம் பஜ்வா கூறியுள்ளார்.
ஜாலியான காதல் படமாக உருவாகிவரும் இ ப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவ னம் சார்பாக S. நந்தகோபால் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். எஸ். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவை கவனிக்கிறார் . தீபாவளி க்கு முன்பே படத்தை வெளியிட படக்குழுவி னர் தீவிரமாக பணியாற்றிவருகிறார்கள்.