உயிரோடு இருக்கும்போது ஏற்காத உலகம்! இறந்த பின்பு ஏற்றுக் கொள்ளும் விசித்திரம் – இதற்கு டார்வின் ஓர் உதாரணம்
உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரி யம் வேண்டும். அந்த தைரியம் டார்வினுக்கு இருந்தது. அந்த தைரி யத்தில்தான், குரங்கிலிருந்து வந்த வன் மனிதன் என்கிற உண்மையை ச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த
வேண்டியிருந்தது.
இங்கிலாந்தில் பிறந்த டார்வின், தன் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல், விலங்குகளையும், பூச்சிக ளையும் வளர்ப்பதில் ஆர் வம் காட்டினார். இதைக் கண்ட அவரது அப்பா, ‘நீ இப்படி பூச்சிகளையும் விலங்குகளையும் வளர்த் தால், எப்படி உருப்படுவாய் ?’ என்று திட்டினார். இதனால் மருத்துவம் படிக்கப்போனார் டார் வின்.
ஆனால், அங்கு நடக்கும் அறுவை சிகிச்சை கள், மருந்து பாட்டில்கள், நோயாளிகளின் அவஸ்தை அவரைப் பயமுறுத்தின. மேற் கொண்டு மருத்துவம் படிக்காமல், இயற்கை யியல் வல்லுநர் படிப்புக்கு மாறினார்.தென் அமெரிக்காவின் கனிமவளங்களைக் காண ச்சென்ற அவர், ஐந்தாண்டுகள் உலகைச் சுற் றிப் பார்த்தார். இயற்கையின் பல மாற்றங் களை உற்றுநோக்கினார்.
பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தவர், அவை குறிப் பிட்ட சில உயிரினங்களின் எலும்புகளோடு பொருந்திப் போவதைக் கண்டார். இதற்கா ன காரணத்தைத் தேடியபோ து, ஒருசில விலங்கிலிருந்து பலவகை விலங்குகள் உரு மாறி வந்திருப்ப தைக் கண் டார். இதுபோல, மனிதனும் குரங்கி லிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்கிற உண்மையை அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்ல, அவர் பல ஆண்டு ஆராய்ச்சி செய்யவேண்டியிருந்தது. என் றாலும், இந்த உண்மையை உலகம் உடனே ஒப்புக்கொள்ள வில் லை.
மத அமைப்புகள் டார்வினின் கரு த்தைக் கடுமையாக எதிர்த்தன. என்றாலும், அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையே ஜெயிக்கும் என்றார். ‘உலகத் தைக்கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிக ள் செய்வதையும்நிறுத்துமாறு எப்போது
நான் நிர்பந்திக்கப்படு கிறேனோ, அன்றைக் கே நான் இறந்துபோ வேன்’ என்று கூறினார்.டார்வின் இறந்து பல ஆண்டுகள் கழித்து, அவரது கண்டுபிடிப்பு உண்மை என எல்லாரும் ஏற்றுக் கொண்ட னர். நீங்கள் சொல்வது உண்மை எனில், உலகம் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீங்கள் அதில் உறுதியாக இருங்கள். அப்ப டி இருந்தால், நீங்களும் டார்வின் ஆவீர்கள்!
– ராகவி சந்திரசேகரன்