Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍?

குடும்பச் சொத்து – சட்டம் சொல் வது என்ன‍?

பாகப்பிரிவினை..!

”தந்தை வழி சொத்தில் வாரிசுக ளுக்குக் கிடைக்கும் சொத்துரி மைதான் பாகப்பிரிவினை. அதா வது, குடும்பச்சொத்து உடன்படிக் கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாக வோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமா கப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை

வாரிசுகளுக்கு சமமாக ப் பிரிக்கப் படாத பட்சத் தில் அல்லது அவர்களி ல் யாரேனும் ஒருவரு க்கு ஆட்சேபனை இருந் தால் பாகப் பிரிவினை யை எதிர்த்து நீதிமன்ற த்தில் வழக்குத் தொடர லாம்.

ஒருவருக்கு நான்கு வா ரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுக ளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தா ல், அந்தப் பாகப்பிரிவினை செல்லா து என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறி ப்பாக, நெருங்கிய குடும்ப உறவுக ளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண் டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூல ம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவரு க்கு தானமாகக் கொடுக்கலாம். இ ப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ள லாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்ட ணம் சொத்து வழி காட்டி மதிப்பில் 1 சத விகிதம் அல்லது அதிகபட்சம் ப‌த்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

உயில்..!

இது விருப்ப ஆவணம்: சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரு ம் முறைதான் உயில் எனப்படும். ஒரு வர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத் துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல் லாமல் போய்சேர வேண்டும் என்பதற் காக தனது சுயநினைவோ டு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுத வேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லா த மூன் றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியு ம். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என் றால், சம்பந்தப்பட்ட வாரிசுக ளுக்கு சொத்து சேர்ந்துவி டும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழு தப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கான சொத்துரிமை!

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரி மை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தி ல் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திரு மணமான பெண்களுக்கான சொத்துஉரிமையி ல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தி ன்படி, பெண்கள் தனது தந்தை ன் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.3.1989-க் குமுன்பு திருமணம்செய்து கொ ண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திரு மணம் செய்துகொ ண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத் தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பி ரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந் தால் உரிமை கோர முடியும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய் திருந்து எதிர்பாராமல் இறக் கும் பட்சத்தில் நாமினிகளிட த்தில் இந்த சொத்துக்கள் ஒப் படைக்கப்படும். ஆனால், நாமி னி இல்லாதபட்சத்திலோ அல் லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்ப ட்சத்திலோ வாரிசுச் சான்றித ழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன் றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சா ன்றிதழ் அடிப்படையில் சொ த்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனை த்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்க ப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத் து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்ய ப்படும்.

முதல் மனைவி உயிருடன் இரு க்கும்போது இரண்டாவது திரும ணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனா ல் இரண்டாவது மனைவிக்கு கண வனது சொத்தில் உரிமையில் லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

பொதுவாக, சொத்து பாகப் பிரி வினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவ னித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத் தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள் ளலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

28 Comments

 • வணக்கம், தந்தை வாங்கிய சொத்தை 2 மகன்களை காடியனாக நியமித்துள்ளார். இதில் ஒருவர் தன் மனைவிக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதனை ரத்து செய்து, பிள்ளைகளுக்கு எழுதி தரமுடியுமா?

 • மு.நாட்ராயன்

  எனது தந்தையார் எனக்கு பூர்வீக நிலத்தில் ஒருபகுதியை எனக்கு தான செட்டில்மென்ட் 2௦௦2 மார்ச் எழுதி கொடுத்தார். அதில் நான் கடை மற்றும் வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். இப்போது எனது இளைய தம்பி வழக்கு தொடர்ந்து இந்த தான செட்டில்மென்ட் செல்லாது என்று கூற நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த சொத்து எனது தகப்பனாரால் வாங்கப்பட்டது அல்ல. பூர்வீக மானது. எனது தம்பிக்கு என்று தனியாக நிலம் இதில் உள்ளது. ஆனால் எனது வீட்டையும் கடையையும் காண்பித்து அதுதான் வேண்டும் என்கிறான். எனது தந்தையார் மீதமுள்ள நிலத்தில் அதே அளவு நிலம் தருவதாக கூறுகிறார். இதனை எங்கும் மனநிலையில் அவர் இல்லை. எனக்கு தான செட்டில்மேண்டாக எழுதிகொடுத்த நிலத்தை எனது பெயரில் பட்டா செய்துள்ளேன். கடந்த 13 ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நான் அனுபவித்து வருகிறேன். ஆகையால் எனது தம்பியின் நடவடிக்கையால் எனது வீடு மற்றும் கடை ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை வருமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 • Sekar

  ஐயா,
  எனது பாட்டியின் பெயரில் செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட், களத்தூர் கிராமத்தில் நிலம் இருந்து வந்தது. அவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார்.
  அவர் 17 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பின் அவரது வாரிசுகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர்.
  மேற்கண்ட விவசாய நிலத்தினை அவரது வாரிசுகளில் ஒருவரும், அவருக்கு இரண்டாவது பெண்ணிடம் நிலத்தினை அவர் பொறுப்பில் விட்டிருந்தார். அவரது பெயருக்கு நிலத்தை எழுதி கொடுக்கவில்லை.
  அந்த பெண் தான் மட்டுமே வாரிசு போல காட்டி 5 வருடங்களுக்கு முன்பு 2010ல் நிலத்தினை அவர் பெயரில் மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் தற்போது அந்த நிலத்தை தனது மகனது பெயருக்கு எழுதி கொடுத்துவிட்டார்.
  இந்த விவரங்கள் எனக்கு தற்பொழுதான் தெரியவந்தது. நான் அவர்களின் மேல் வழக்கு தொடர்ந்தால் எங்களுக்கு சாதகமான நிலை இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  -சேகர். மயிலாப்பூர்

 • Sundar

  ஐயா வணக்கம்
  எங்க தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து 785 சஅ அந்த சொத்த அவருடைய இரண்டு மகள், ஒரு மகன், ஒரு கொள்ளு பேரண் ணுக்கும் ( 1st மகளுடைய பேரண்) 2010தில் தான செட்டில்மன்ட் எழுதி தந்துள்ளார் சர்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யபட்டுள்ளது 2010ல்
  அவருடைய மகன் (எங்க மாமா) 2012ல் காலமாகிவிட்டார்..
  எங்க தாத்தா 12-12-2014 அன்று காலமாகிவிட்டார்.
  தற்பொழுது எங்க மாமா பிள்ளைகளுக்கு 10-12-2014 அன்று உயில் எழுதி கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அந்த உயில் தற்பொழுது வரை பதிவு செய்யபடவில்லை. அவர்கள் எங்களை மிரட்டுகிறர்கள் மொத்த சொத்தும் அவர்களுக்குதான் சொந்தம் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்யலாம்.

  • உங்களது தாத்தா எழுதியதாக சொல்ல‍ப்படும் அந்த உயிலின் நகலை கேட்டுப் பெறுங்கள். அதன்பிறகு அந்த உயிலில் கையெழுத்து உங்களது தாத்தாவின் கையெழுத்தானா என்பதை சோதித்து அறியுங்கள்.
   அது டைப் செய்ய‍ப்பட்டிருந்தால், அந்த உயில் தயாரிக்க‍ப்பட்ட‍போது அருகில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரியுங்கள். அல்ல‍து யார் மூலமாக அந்த உயில் தயாரிக்க‍ப்பட்ட‍து அல்ல‍து உயில் தயாரிக்கும்போது உதவியவர்கள் யார் என்பதை கண்டு பிடியுங்கள். கண்டுபிடித்து அவரிடம் விசாரியுங்கள்.
   மேலும் அந்த உயில் போலி என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். வழக்கின் போது, உங்களது பக்க‍ம் இருக்கும் போதுமான ஆதாரங்களை வாதங்களையும் வழக்க‍றிஞர் மூலமாக நீதிபதி முன் எடுத்து வையுங்கள்.

   • sundar

    ஐயா அவர் உயில் போலி என்பது உறிதி ஏனென்றால் தாத்தா சாகும் வரை எங்கள் கூடவேதான் இருந்தர்.. அவர்கள் உயில் நகல் யை தரவில்லை. உயில் லில் சாட்சி போட்டவர்கள் எங்கள் மாமன் மனைவியுடைய( தாய்வழி) மாமன் மகள் மற்றும் அவள் கணவர்.
    அவர் இடத்தில் எங்கள் மாமனின் மருமகன் வக்கில் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் சுலபமாக உள்ளது. நாங்கள் இதுவரை காவல் நிலைய மற்றும் ஆணையாளர் புகார்களுக்கே அதிக தொகையை செலவு அளித்து விட்டோம். நாங்கள் நடத்தர குடும்பம்.. நாங்கள் முதலில் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தால் நாங்கள் முன்பணம் செலுத்த வேண்டியிருக்குமா.
    அல்லது அவர்கள் வழக்கு தொடர் வார்களா. இந்த வழக்கு எத்தனை வருடம் செல்லும்..

    • சிறந்த‌ வழக்க‍றிஞர் ஒருவரை நாடி, அவரிடம் உங்களது முழு விவரத்தையும் சொல்லி சட்ட‍ ஆலோசனை பெறவும்.

 • எனது தந்தையார் அம்மா அதாவது பாட்டி எனக்கு நிலத்தை எனக்கு தான செட்டில்மென்ட் 1990ஆண்டு எழுதி கொடுத்தார். அதில் நான் மற்றும் அண்ணன், காடியனாக எனது அப்பா முவரும் கடந்த 25 வருடமாக அனுபவம் உள்ளது ,எனது அத்தை அந்த தான ட்டில்மென்ட்டை எனது பாட்டி கொண்டு கேன்சல் செய்து கடந்த வருடம் கிரயம் செய்து உள்ளனர் இதை அறிந்து நான் மற்றும் எனது அண்ணாபெயரில் தான செட்டில்மென்ட்டை பத்திரம் கொண்டு பட்டா மாற்றம் செய்து உள்னேன் பிறகு கோர்ட்டில் கேஸ் கொடுத்து. இப்போது வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் சென்றுஉள்ளேன். இந்த சொத்து எனதுபாட்டி சொத்து நிலத்தில்அனுபவம் என்னிடம் உள்ளது எனக்கு தான செட்டில்மேண்டாக எழுதிகொடுத்த நிலத்தை எனது பெயரில் பட்டா செய்துள்ளேன். கடந்த 26ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நான் அனுபவித்து வருகிறேன். ஆகையால் எனது அத்தை நடவடிக்கையால் எனது வயல்ஆகியவற்றில் ஏதேனும் தீர்பில் பிரச்சனை வருமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 • Gopi

  எனது தந்தையார் அம்மா அதாவது பாட்டி எனக்கு நிலத்தை எனக்கு தான செட்டில்மென்ட் 1990ஆண்டு எழுதி கொடுத்தார். அதில் நான் மற்றும் அண்ணன், காடியனாக எனது அப்பா முவரும் கடந்த 25 வருடமாக அனுபவம் உள்ளது ,எனது அத்தை அந்த தான ட்டில்மென்ட்டை எனது பாட்டி கொண்டு கேன்சல் செய்து கடந்த வருடம் கிரயம் செய்து உள்ளனர் இதை அறிந்து நான் மற்றும் எனது அண்ணாபெயரில் தான செட்டில்மென்ட்டை பத்திரம் கொண்டு பட்டா மாற்றம் செய்து உள்னேன் பிறகு கோர்ட்டில் கேஸ் கொடுத்து. இப்போது வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் சென்றுஉள்ளேன். இந்த சொத்து எனதுபாட்டி சொத்து நிலத்தில்அனுபவம் என்னிடம் உள்ளது எனக்கு தான செட்டில்மேண்டாக எழுதிகொடுத்த நிலத்தை எனது பெயரில் பட்டா செய்துள்ளேன். கடந்த 26ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நான் அனுபவித்து வருகிறேன். ஆகையால் எனது அத்தை நடவடிக்கையால் எனது வயல்ஆகியவற்றில் ஏதேனும் தீர்பில் பிரச்சனை வருமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 • முத்தமிழ் செல்வன்

  தாத்தவிர்க்கு இரு மனைவிகள் முதல் மனைவிக்கு 1ஆண் மட்டுமே 2வது மனைவிக்கு 2ஆண் 1பெண், பூர்வீக சொத்தை  பாகம் 3றாக பிரித்து உள்ளனர் . ஆனால் 2வது மனைவியின் பெயரில் 150சென்ட் நிலமும் 4சென்ட் மனையும் வாங்கி உள்ளார் .  தாத்தா பாட்டி இறந்துவிட்டனர் . பூர்வீக சொத்து பாக பத்திரம் எழுதவில்லை  இரண்டவாது மனைவியின் ஆண்கள் தங்கள் அம்மாவின் பெயரில் உள்ள சொத்தில் முதல் மனைவியின் மகனுக்கு பாகம் இல்லை என்கிறார்கள் அப்படி பாகம் இல்லை என்றால் பூர்வீக சொத்தை மூன்றாக பிரித்த பாகத்தை தாரா பாகம் கேட்டு வழக்கு தொடரலமா . இந்து வாரிசு உரிமை சட்டம் 1955_56ரின் படி முதல் மனைவியும் ஒரு வாரிசு என்று கூறுகிறது அதன் அடிப்படையின் கீழ் வழக்கு தொடரலாமா ஐயா எனக்கு ஆலோசனையும் வழங்க வேண்டுகிறேன் நான் மூத்த தாரத்தின பேரன் ஆவேண் எனது தந்தையும் இறந்துவிட்டார் . பாகம் பிரித்து 30 ஆண்டுகள் கடந்து விட்டது 

 • jayavel

  வணக்கம் என் தந்தை வழி தாத்தா அவர் வாங்கிய சொத்தை என் பெரியப்பா பெயரில் பத்திரம் எழுதினார் ஆனால் பட்டா என் தாத்தா பெயரில் உள்ளது .தாத்தா இறந்து விட்டார் என் தந்தை அந்த சொத்துக்கு உரிமை கோர முடியுமா

 • sadhik batcha

  நான் இசுலாமிய குடும்பத்தை சேர்ந்தவன் என் பாட்டியின்(தந்தையின் தாய்) சொத்தில் என் தந்தைக்கூ எவ்வளவு பங்கு.என் தந்தையுடன் பிறந்தவர்கள் 4புள்ளை 1 ஆண்(என் தந்தை) என் தந்தை தான் கடைசி பிள்ளை

 • SIVA ELAMARAN

  வணக்கம் எனது தாத்தாவுக்குப்பின் என்பாட்டி பெயரில்பட்டா இருந்தது.என் அப்பாவுக்கு ஒரு அண்ண்ன் ஒரு தங்கை இருக்கிறார்.பாகபிரவனையில் என்அப்பாவும் பெரியப்பாவும் ஊரார் முன்னிலையில் பிரித்துக்கொண்டனர்.அதன் பிறகு என் பெரியப்பா விற்றுவிட்டார் .இப்போது எங்களது பாகம்பாட்டிபெயரில் இருக்கிறது அவரும் இறந்துட்டார்[7வருடமுன்] நாங்கள் வரி ஒருமுறைகட்டினோம் நிறையமுறை பெரியப்பா கட்டிவருகிறார்.இப்போது எப்படி எங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது.எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை வழிதெரிந்தால் கூறுங்கள்

 • Anonymous

  ஒரு பெண் இறந்து விட்டால் அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் முதலில் யாரை சேரும்.அப்பெண்ணின் வாரிசுகள் சொத்தை விற்க முடியுமா?பேரன், பேத்திகளுக்கும் பங்கு உள்ளதா?

 • Anonymous

  வணக்கம்!
  எனது தாத்தாவுக்கு 2 மகன் , 10ஏக்கர் நிலம் உள்ளது.1 மகன் இறந்து விட்டார்,தாத்தாவும் இறந்து விட்டார் , இதுவரை பாகம் பிரிக்கவில்லை,இப்பொழுது பாகம் பிரித்து கொள்ளலாம் என்று கேட்டால், 1 மகனின் மகன்கள் முடியாது என்கின்றனர் .,,,சுமுக மாக முடிய என்ன வழி…..

 • Balamurugan.R

  வணக்கம்!
  எனது தாத்தாவுக்கு 2 மகன் , 10ஏக்கர் நிலம் உள்ளது.1 மகன் இறந்து விட்டார்,தாத்தாவும் இறந்து விட்டார் , இதுவரை பாகம் பிரிக்கவில்லை,இப்பொழுது பாகம் பிரித்து கொள்ளலாம் என்று கேட்டால், 1 மகனின் மகன்கள் முடியாது என்கின்றனர் .,,,சுமுக மாக முடிய என்ன வழி…..

 • Annapoorani

  எனது அம்மா தனது பெயரில் உள்ள இடத்தை எனது அண்ணணுக்கு தான செட்டில்மெண்ட் செய்துவிட்டார்.தற்போது அண்ணணின் நடவடிக்கை சரியில்லாததால் அதை திரும்ப கேட்கிறார்.தான செட்டில்மெண்டை Cancel செய்ய இயலுமா?

 • ponnimahesh

  என் தந்தைக்கு ஐந்து மகள்கள் யாரும் அவரை கவனிக்கவில்லை அதனால் அவருடைய அண்ணன் அவருக்கு தானமாக கொடுத்தவீட்டை இடியும் தருவாயில் விற்று பணம் பெற்று அதில் ஜீவனம் நடத்துகிறார், இதில் மகள்களின் சம்மதம் இல்லாமல் விற்றதால் வாங்கியவர்களை ” நான் கையெழுத்து போடவில்லை” என்று மகள்கள் மிரட்டுகிறார்கள் மகள்களால் ஏதாவது செய்யமுடியுமா? வாங்கியவருக்கு என்ன பிரச்சனை வரும் ? தயவு செய்து பதில் கூறுங்கள் அந்த சொத்தை வாங்கியது என் கனவர்தான்.

 • ஐயா வணக்கம் நான் இந்த WAP page க்கு இது தான் முதல் முறையாக பார்கிறபார்கிறேன் விதை விருட்சம் அருமை .நாங்கள் அண்ணன் தம்பி ஐந்து பேர் மூத்த அக்கா கடைசி தங்கை ஒருவர் எங்கள் அப்பா அவருக்கு இரண்டு மனைவி முதல் தாரத்துக்கு அக்கா ஒருவர் மூன்று அண்ணன்கள் இரண்டாவது என் அம்மாவிற்கு அண்ணன் மற்றும் நான் தங்கை மூன்று பேர் அப்பாவின் முதல் மனைவி இல்லாததால் அனை வரையும் வளர்த்து ஆள் ஆக்கியது என் அம்மா தான் நாங்கள் அனைவரும் நகைதொழிள் செய்து வருறோம் நான் மற்றும் அண்ணன்கள் சம்பாதித்து சொந்தமாக வீடு வாங்கினோம் அது அனைத்தும் அப்பாவின் நண்பர் ஒருவரின் அறிஉறையின் பேரில் பெறிய அண்ணனின் பெயரிலேயே எழுதிக்கொன்டார் தற்சமயம் நாங்கள் கொடுத்த திற்கு ஆதாரம் ஏதும் இல்லை பெறி அண்ணனும் குடும்ப தகராரில் நான் மட்டுமே சம்பாதித்து வாங்கியது என்றும் மற்றவருக்கு உரிமை இல்லை என்று கூருகிறார் மேலும் இதுவரை வளர்த்து ஆளாக்கிய அம்மா மற்றும் அப்பாக்கு எந்த ஒரு உரிமைம் இல்லை என்றும் மேலும் என் அம்மா இதுவரை நான் செய்த கடமைக்கு வழி என்று கேட்டதற்கு எங்கள் உழைப்பிளேயே எங்களுக்கு கல்யாணம் செய்துவைத்து விட்டு கணக்கு முடிந்து விட்டது என்றும் மேலும் மற்ற அண்ணன்கள் அனைவரும் தனியாக வாடகை வீட்டிற்கு சென்றுவிடனர் சொந்த வீட்டில் தன் பெயறில் எழுதிக்கொண்ட பெறிய அண்ணன் மற்றும் கடைசீ பையன் நான் இருக்கிறேன் இந்த நிலையில் என்னையும் அப்பா மற்றும் அம்மா வையும் வெளியேறும்படி தகராறு பண்ணிக் கொண்டு இருக்கிறார் இதற்கு சட்டரீதியான வழிமுறைகள் கூருமாரும் மேலும் மற்ற அண்ணன்கள் வாடகை கொடுக்க முடியாமள் கஸ்ட பட்டுக் கொணடிருக்கார்கள் மேலும் அம்மா மற்றும் அப்பாவுக்கும் ஏதேனும் வழி முறைகள் கூறவும் தற்சமயம் நான் மட்டுமே இருவரையும் கவனித்து கொன்டிருக்கிறேன் மற்ற அண்ணன் கள் எதுவும் உதவ மாட்டுகிறார்கள் இதற்கு சட்டரீதியான வழிமுறைகள் கூறவும்

 • உதயா

  1989 முன்பு திருமணம் செய்து கொண்ட பெண் பாகபிரிவினை கோர முடியாதுன்னு சொல்லி இருக்கு அப்போ அவர் பெயரை வாரிசு சான்றிதழ் இருந்து நீக்கி வாங்குவது அவர் அனுமதி இல்லாமல் பெயர் மாற்றம் செய்வவது

 • உதயா

  1989 முன்பு திருமணம் செய்து கொண்ட பெண் பாகபிரிவினை கோர முடியாதுன்னு சொல்லி இருக்கு அப்போ அவர் பெயரை வாரிசு சான்றிதழ் இருந்து நீக்கி வாங்குவது எப்படி அவர் அனுமதி இல்லாமல் பெயர் மாற்றம் செய்வது எப்படி

 • இறந்த கணவரின் பெயரில் உள்ள நத்தம் பட்டா வில் 250 சதுர மீட்டர் வீட்டை
  3 மகன்கள் 2 திருமணமான பெண்கள்
  எவ்வாறு பாகபிரிவினை செய்வது பெண்கள் வேண்டாம் என கூற முன்று மகன்களுக்கு தாய் உயில் எழுதலாமா ?
  அல்லது செத்து உடன்படிக்கை எழுதலாமா ? அல்லது பாகபிரிவினை எழுதலாமா ? எல்லோறும் தினகூலிகள் தான்
  தயவு கூர்ந்து ஒரு ஆலோசனை கூறவும் ஜயா

 • Narayanan k

  கணவரின் சுயசம்பாத்திய சொத்தினை அவர் இறந்த பிறகு அவருடைய மனைவி தன்னுடைய வாரிசுகளில் ஒருவருக்கு தானமாக வழங்கலாமா?

 • Samiraja

  என்னுடைய தந்தை 2006ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அப்பொழுது எனது வயது 36 ஆனால் எங்களுக்கு தெரியாமல் எனது தாத்தாவின் சொத்தை விற்றுவிட்டார் அந்த சொத்தில் எனது அப்பாவின் உடன்பிறந்த இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் ஆனால் அந்த சொத்தை பிரிவின்றி இரண்டு பங்கை எனது தந்தை மற்றும் அவருடைய சகோதரர் ஒருவரும் வற்றுவிட்டார்கள் அதை நான் எப்படி திரும்ப பெறுவது?

Leave a Reply