Thursday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீரிழிவு (சர்க்க‍ரை) நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்கள்

நீரிழிவு (சர்க்க‍ரை) நோயாளிகள் பயமி ன்றி நிம்மதியாக சாப்பிட க்கூடிய சில பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள து. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவுநோயால் பாதிக்கப் பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந் தாலும்

மிகவும் கவனமாக இருக்க வே ண்டும்.

இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதி க ரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழி வு நோயால் பாதிக்கப்பட்டவர் கள் ஒருசில பழங்களை சாப்பி டு வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப் பாட்டுடன் வைத்துக் கொள் ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூ லம் ஆரோக்கியமாக இருக் கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரி ழிவு நோயாளிகள் முற்றிலு ம் சர்க்கரையுள்ள பொரு ளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அள வில் சர்க்கரையை உடலில் சேர்க்க வே ண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள் ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொ ல்கிறது.

அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறி னால் அமிர்தமும் நஞ்சு தான். எனவே நீரிழிவு நோயாளிகள் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூல ம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அள வில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த் துக் கொள்ளலாம்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக் கூடிய சில பழங்களைப் பார்ப்போ ம்.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிக ளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெ னில் இது இரத்தத்தில் உள்ள சர்க் கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அள வாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளி கள் சாப்பிடுவது மிகவும் நல்ல து. மேலும் இது மலச்சிக்கல் பிரச்ச னையைப் போக்கும். அதுமட்டுமி ன்றி, கொய்யாப்பழத்தில் வைட்ட மின் ஏ மற்றும் சில அதிக அளவி லும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள் ளது.

நாவல் பழம்

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோ யாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயா ளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க் கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையைபொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் கு றைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப் பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன் றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என் று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிக ளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட் டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிட ன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயா ளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தி ல் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர் ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கி றது.

பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப் படியெனில் பேரிக்காயை சாப் பிடுங்கள். ஏனென்றால், பேரிக் காயில் வைட்டமின்கள் மற்று ம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்க ரையின் அளவை கட்டுப்பாட்டு டன் வைத்துக் கொள்ள உதவும்.

ப்பாளி

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப் பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுர ப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், இந்த பழத்தை தின ந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதி ர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக் கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வ தால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

Leave a Reply