Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள் – முழுமையான‌ அலசல்

உடலுறவில் ஈடுபட்டும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள்- முழுமை யான‌ அலசல்

உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான கா ரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண்சார்ந்த காரணங் கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரண ங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இரு க்கலாம். 5 முதல்

15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்க லாம்.

முதலில் ஆண் சார்ந்த காரணங்களை ப் பார்க்கலாம்:

அ. சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது:

ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பா க 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக் க முடியும். இப்படி வெளிவரும் விந் தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயி ரணுவாவது இருக்கவேண்டும். இதில், 30சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவி கிதமாவது மிக மிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இது உலக சுகாதார நிறுவனம் 1992ல் வெளியிட்ட ஆய்வறி க்கையில் வந்த தகவல். இப்போதும் நம் நாட்டில் சில சோதனைக் கூடங்க ளில், பழைய அளவுகளை வைத்துக் கொண்டு குழந்தை இல்லாத தம்பதிக ளைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறா ர்கள். இதற்குக் காரணம், இந்த லேப்களை நடத்துபவர்களுக்கு நிகழ்கால அறிவு இல்லாததுதான்.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந் தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிர ணு உற்பத்தி யாவதில் பிரச் னை ஏற்படும்.

சத்தான உணவு, உடற்பயிற் சி, சரியான ஓய்வு இவற்றுட ன் புகை மற்றும் மதுப்பழக்க ம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவ தில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில் லை.

ஆ. உடலுறவில் ஈடுபடுவ தில் பிரச்னை:

சந்ததி உருவாக்குதல், இன் பம் அடைதல், உறவுகளின் கட்டமைப்பு என செக்ஸு க்கு மூன்றுவித நோக்கங்க ள் உண்டு. செக்ஸின் முத ன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்கு வதுதான். இனப்பெருக்கம் ஒன் றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையி ன் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதா ல், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸு க்குள் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத்துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக் குகிறது. சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனை வியின் உறுப்பில் டெபாஸி ட் ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம் . இப்படியரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளி யேறி விடுவது, நல்ல விறைப்புட ன் பெண் உறுப்புக்குள் நுழைந் தும் விந்து வெளியேறாமல் போ வது போன்ற காரணங்களால் வி ந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸி ட் ஆகாமல் போகலாம்.

இ. உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:

ஒரே நாளில் எத்தனை தடவை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டு ம்? எத்தனைமுறை ஈடுபட்டால் குழந் தை உண்டாகும்? குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இதுபோன்ற கேள்விக ள் எழுந்து அவர்களைப் பாடாய் படுத்த க்கூடும்.

என்னிடம் பிரச்னைகளுக்காக வருப வர்களில் சிலர், “சார்… நான் டெய்லி ரெண்டு மூணு தடவை செக்ஸ் வெச்சு க்கறேன். ஆனாலும் புள்ளை பொறக்க மாட்டேங்குதே!” என்பார் கள். ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும்போதே போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிர ணு வும் இருக்கும். அதே நாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயி ரணுவும் இருக்காது.

இன்னும் சிலர், “சார்… டெய்லி செக்ஸுல ஈடுபடாம கருமுட்டை வெளிவரும் நாள்லதான் (மாதவிடாய்க்கு முன்பு) ஈடுபடுவேன். அப்படியும் குழந்தை பாக்கிய ம் இல்லையே!” என்று வருத் தப்படுவார்கள். இதுவும் தவ றான அபிப்பிராயம். நிறைய இடைவெளி விட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப் பட்டு, நீந்தும் திறன் குறைந்து விடு ம். அதுமட்டுமல்ல, உயிருட ன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்து விடும். பணி ச்சூழல் காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரில் சிலருக்கு, ஊர் சுற்றுவதையே தொழிலாகக் கொண்ட மனிதர்க ளில் சிலருக்குக் குழந்தை பிறக் காமல் போக இதுதான் காரணம்.

ஈ. செக்ஸில் தவறான டெக்னிக் குகளைப் பின்பற்றுவது:

ஒரு சங்கீத கச்சேரியாக இருந்தால், அதில் ஆலாபனைகள் அவசி யம். சுதிசுத்தமாக இருந்தால்தான் பாட்டில் இனிமைததும்பும். அது போலத்தான், இனிமை யான செக்ஸ் இன்பத்தை உச் சத்துக்குக் கொண்டு செல்வ தில் “ஃபோர் ப்ளே” எனப்படும் முன்விளை யாட்டுக்கு முக் கிய பங்கு உண்டு. மீட்டினா ல், இதயம் நனைக்கும் இசை யைப் பொழியும் வீணையின் தந்திகளை முடுக்கித் தயார் ப்படுத்துவது மாதிரிதான் “முன் வி ளையாட்டும்”. ஆனால் பல ஆண்களுக்குப் பொறுமை இருப்பதி ல்லை. மனிதர்களில் பலர் “பார்த்தேன்… ரசித்தேன்” ரக மல்ல; “எடுத்தேன்… கவிழ்த் தேன்” ரகம்தான்!

முன்விளையாட்டில் ஈடுபட் டுப் பெண்ணைத் தயார்நி லைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறு ப்பு ஈரப்பத மின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம் இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவ தற்குப் பதில் விளக்கெண் ணெய், வாஸலின், தேங்காய் எண் ணெய் போன்றவற்றை உபயோகித்து செயல்படு வார்கள். உண்மையில் இவை, உயிரணு வைக் கர் ப்பப் பைக்குள் போகவிடா மல் தடுக்கவே செய்கின்ற ன. மேலும், இவை கர்ப்பப் பை, ஃபெலோப்பியன் கு ழாய் போன்றவற்றில் கிரு மித் தொற்றையும் உண்டா க்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படு ம். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி விடும்.

உ. ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோளாறு இருப்பது:

பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப் படும்போ துதான் கரு உருவா கும். ஆனால், சில ஆண்களு க்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்க வேண் டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந் தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெ ளியிலேயே வெளியேறி விடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு ” ஹை போஸ்பேடியாஸ்” என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவ ர்த்தி செய்துவிட லாம்.

சிலஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண் குறி அளவுக்கதிகமாக வளை ந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக் குள் போ கவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.

மேலே சொன்னவை எல் லாம் குழந்தை பிறக்கா மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள்.

சரி, பெண் சார்ந்த காரண ங்க ள்..?

நான் இறந்தால்
என்னை எரித்து விடாதீர்கள்…
தயவு செய்து
புதைத்து விடுங்கள்
அப்போதாவது_
என் வயிற்றில்
புழு நெளியட்டும்!”

-குழந்தை பிறக்காததால் தான் சந்தித்த அவமானங்களை ஒரு பெண் சொல்லும்விதமாக புனையப்பட்ட புதுக்கவிதை இது.

ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை எனில் அதற்கு கணவனோ, மனைவியோ அல்லது இருவருமேகூட கா ரணமாக இருக்கலாம் என்ப தை சமூகம் சிந்தித்துப் பார்க் காததன் விளைவுதான் பெ ண்களின் இந்த வேதனைக் குக் காரணம். குழந்தையின் மைக்குப் பெண் சார்ந்த கார ணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் வேண்டுமென்றே ஒரு பெண் உருவா க்கிக் கொள்வாளா என்ன? ஆணோ, பெண்ணோ… எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் போது, இன்னல்களும் அங்கிருந் தே தானே படைக்க ப்படுகின்றன!

கருமுட்டை வெளியாகும் போது தான் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக் குக்கருமுட்டை வெளியாகாம ல் கூட இருக்கலாம். சில பெண்க ளுக்குக் கருமுட்டையும், உயிர ணுவும் சந்தித்து கரு உருவானாலும்கூட உருவான கரு, ஃபெ லோப்பியன் டியூப்பிலிருந்து நகர் ந்து கருப்பைக்கு வராமலே கூட இருந்து விடலாம். அப்ப டியே வந்தாலும் கர்ப்பப்பை யில் தங்கி வளர முடியாத நி லைமை ஏற்படலாம். இதனா ல் இந்தப் பெண்களுக்குக் கு ழந்தை பிறக்காமல் போகும்.

உயிரணுவானது கருப் பா தை, ஃபெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்க ளை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச் செல்ல முடி யாத அளவுக்குத் தடைகள் ஏ ற்பட் டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன் னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடை ப்பு ஏற்பட்டு, அதன் காரண மாக குழந்தை பாக்கியமற் றுப் போகலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொ ற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக் குறை ஏற்படலாம். ஹார்மோன் கலாட்டா:

பொதுவாக ஒரு பெண்ணுக் கு இருபத்தெட்டு நாட்களு க்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான் காம்நாள் கரு முட்டை வெளி வரும். அப்படி வரும் கருமுட் டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தரு ணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், கரு முட் டையே வெளிவராவிட்டால் கரு எப்படி உருவாக முடியும்? கரு முட்டை வெளி வராமல் போவதற்குக் காரணம் ஹார் மோன்குறைபாடுகள்தான். உடல்எடை  கூடுதலாக இருக்கும் பெண்களில் சில ருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கு ம். ஆம்… இவர்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை வெளிவ ராமல் போய்விடலாம். இதுமட்டுமில் லை, தீவிர மன அழுத்தம்கூட கரு முட் டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண் மை.

கரு உருவானாலும்கூட கர்ப்பப் பையி ல் தங்கி வளர இயலாத நிலைமை ஏ ற்படும் என்றேன் அல்லவா? பொதுவாக கரு ஃபெ லோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்க ளுக்குள் கரு நகர்ந்து கர்ப்ப ப் பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரிய ம்) பலவீனமாகிப்போனால், ஃபெலோப்பியன் டியூப்பிலி ருந்து நகர்ந்து கர்ப்பப்பைக் கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெ ட்ரியம் ஆரோக்கியமில்லாம ல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்

துண்டிக்க‍ப்பட்ட‍ ஃபெலோபியன் குழாய் (மாதிரி)

கும் என்றும், இந்த அமிலத் தன்மையை விந்தில் உள்ளகா ரத்தன்மை மட்டுப்படுத்திவிடும் என்றும் ஏற்கெனவே நான் குறி ப்பிட்டிருந்தேன். சில பெண்க ளுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்து விடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூ க்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியா கும் தருணத்தில் இது நீர்த்துப் போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனா ல், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப் போது இதுவே கர்ப்பப் பையின் வாசலில் தடையாக இருந்து

உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடும். இதன் காரணமாகவும் குழந்தை ப் பிறப்பு தடைபடும். சில பெண்க ளுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணு வை எதிர்க்கிற ஒருவித ரசாய னம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணு வின் வீரியம் குறைந்து விடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்:

கரு முட்டையும், உயிரணு வும் சந்திக்கும் ஃபெலோப் பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போக

பாதிக்க‍ப்பட்ட‍ கருப்பை

லாம். பிறவி குறைபாடு, பால் வினை நோய், காசநோய் போ ன்ற வற்றால் ஃபெலோப்பி யன் குழாயில் அடைப்புஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்க ளுக்கு மன அழுத்தத் தால் ஃபெ லொப்பி யன் டியூ ப்பில் பிளாக் ஏற்படலாம்.

கர்ப்பப் பைக்கு இரண்டு பக்க மும் உள்ள இரண்டு ஃபெலோ ப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகி தம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவ சமாக இரண்டி லும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

– பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: